கதை மாந்தரின் சேர்ந்தும் சேராதிருக்கும் ஒட்டு மொத்த வாழ்க்கையை விவரிக்கும் வண்ணம் கதைகள் அமைந்துள்ளன.நிகழ்வுகளை விவரிக்கையில் மென்பகடியும், ஒட்டு மொத்த வாழ்க்கையை கணக்கில் கொள்கையில் அக்கறையும் தொனிக்கும் கதைகள் இவை.
துயரங்களின் ஆரமாய் கதைகள் விரிகையில், மனித மனத்தின் மேன்மைகளும் கீழ்மைகளும் ஒரு சேர நமக்கு விளங்குகின்றன.
பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதைகள் அமைந்திருப்பதால், கதைகளின் தாக்கம் குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது.
"திரிவேணி சங்கமம் "மற்றும் "தூதுவர்கள்" கதைகள் நன்றாக அமைந்துள்ளன. கையறு நிலையிலிருந்து மீட்பையும் , தீரா சாபமாக தொடரும் மனிதனின் சுயநல வஞ்சனை போக்கையும் தெரியப்படுத்தும் கதைகள் இவை.

No comments:
Post a Comment