Monday, September 23, 2024
Two Lives - Vikram Seth
Wednesday, August 28, 2024
Kottukkaali
Beauty of well constructed scenes keep you in awe. What we knew already from what we see is the premise of a Hyper Male against an Adamant Female. This Premise is aptly decorated by Family Members's idiosyncrasies and gossips.
Saturday, August 17, 2024
Thangalaan
Life of the individual juxtaposed with Life of the society in euphoric drama.
Monday, August 12, 2024
The Delinquents
Who are these Delinquents ?
It begins as
A common bet perhaps
Amongst the Delinquents,
Life time savings under the table,
But can only be used after, always,
Hidden amongst the rocks of time.
A pursuit not so uncommon
A pursuit not so greedy
A pursuit in desparation
A pursuit of promise
A pursuit of minor criminality
Pursuit is the bet
Bet is the pursuit.
Pursuit filled with
So much tyranny
So much distress to self and others
So much cunning and
So much anxious.
Pursuit broken by
Wonderful sunny day under the sky,
With love and company amidst the nature,
Unhinged flowing love brightly beauty,
Moved by dreamy love,
Moved by arrangement of words,
Moved by Silence and Movement.
Such days extended to eternity is
The Heaven
A dream, a promise, a yearning
of these Delinquents
To keep things this simple.
Searching, a bet forgotten
Waiting, a bet remembered
Who are these Delinquents?
Wednesday, July 24, 2024
Teen Couple Have Fun Outdoors
Funny one-liners about predicaments kept coming and eventually ran out. Story developed midway into a single melodramatic rocking to and fro motion of "Knock-reject-comeback-knock" mode until all the melodrama ran out too. Then we enter the actual novel of the protagonist middleman who has been painfully trying to keep the peace and piece together, His intent and eventuality forms the bedrock of this novel.
Monday, July 08, 2024
கஸாக்குகள்
Friday, May 17, 2024
Mr Sammler's Planet - Saul Bellow
Overwhelming read, Hard not to be over awed by Sammler s urge and tendency to condense the vast disparate lives events and spoken words into few lines of meaningful summarization, After all each one of us try to do the same when confronted with questions of difficult kind while dealing with vagaries of Life.
In author s own words, As we struggle to summarize, life speed past us at breathtakingly, only to pause at the moments we can remember. This is spectacularly inversed by Man in 20th century. He is trying to create best set of moments, best set of things, best set of choices for himself as an individual leaving anything else worth pursuing as a secondary choice creating the unintended 'banality of the best' further fuelling discontent. Astonishingly mundane drab dull monotony repetition are chosen by the great minds of our generation to connect with the infinite, while lesser mortals wrestle to bring the infinite into our best moments and list of things.
Adding to so many words already spoken , each man deeply knows his terms of contract for the life of what he does and how and why ?
******
Sammler -Shula
Black pickpocket -Feffer - Eisen, Israel
Eisen - Shula
Elya Gruner - Mrs Elya Son Wallace - Daughter Angela -
Margotte
Dr Govinda Lal
Emil the rolls Royce driver from the mafioso
வெள்ளைப் பல்லி விவகாரம்
இந்தக் கதை ஏன் பிடித்திருந்தது ?
தெளிவான நிச்சயமான அவதானிப்புகளும், அனுமானங்களும், அவற்றை குறித்த அறிவும் , அந்த அறிவு அளிக்கும் நிதானமும், அந்த அறிவின் எல்லையையும் மதிப்பையும் உணர்ந்த மனதின் வெளிப்பாடாக அமைந்த நடை.
தெளிவான வடிவம் கொண்ட கதை, எளிதில் மீண்டும் நினைவு கொள்ள ஏதுவாக அமைந்த காத்திரமான சம்பவங்களும் சுவாரசியமான உரையாடல்களும் அமைந்த கதை.
இத்தனை விழிப்புடனும் அந்த விழிப்பின் அறிவுடனும்அமைந்த கதை நாயகன் தன் அகத்தையும் புறத்தையும் ஒரு சேர அறிய வாய்ப்பாக அமைந்த கதை.
பெரிய ஜோடனைகள் இல்லாமல் நேரடியான சொற்றொடர்கள் அமைந்த கதை, அந்த சொற்றொடர்கள் அளிக்கும் அர்த்ததின் வலிமையை நம்பி மட்டும், அவ்வர்தத்தின் ஆழமான பொருளை மட்டுமே நம்பி எழுதப்பட்ட வாக்கியங்கள் நிரம்பிய கதை.
நம் வாழ்வின் பொருளாய், முக்கியமான செய்கையாய், கண்ட மற்றும் அறிந்த எல்லாவற்றையும், ஒன்றோடு ஒன்று, மனம் போனபடி இணைத்து,வாழ்வை ஒரு எதிர்வினையாய் தற்காப்பாய் அமைத்து கொள்ள முனையும் ஒரு முயற்சி இந்த கதை.
அமைப்பு குறித்தும் தன்னிச்சை குறித்தும் மேலோட்டமான இருமையை மட்டும் முன்வைக்காது, அமைப்பின் பன்முகங்களை அறியும் விதமான உரையாடல்களும், தன்னிச்சையின் தணிக்கை இடாத விருப்பங்கள் நிறைந்த உரையாடல்களும் அமைந்த கதை.
கனவில் வருவது நனவில் தோன்ற நடப்பது கனவா நினைவா என்று வாசகன் மயங்கும் வகையில் அமைந்த கதை.
முடிந்த வரை அறிவை தவிர்க்க முனையும் ஒரு விழிப்பு மனதின் கதை.
வாழ்க்கையில் நீங்கள் திட்டமிட்ட அல்லது உங்களுக்கு அமையப்பெற்ற வேடம் இந்நான்கில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது- அப்பாவி , தீவிரவாதி, விசுவாசி,நாகரீகன். வெவ்வேறு தருணங்களில் இந்த வேடங்களை மாறி மாறி புனையும் நாம் ஏதேனும் ஒற்றை வேடத்துடன் பெரும்பாலும் பொருந்தி போகவும் செய்வோம்.அவ்வேடங்களின் கதையும் இது.
Tuesday, March 26, 2024
யஹதா ககாமி
நிகழ்வுகளின் வேடிக்கை மற்றும் உயிர் நிறைந்த சம்பவங்கள் இரண்டும் அமைந்த புற சூழல் இந்த கதைகளின் உள்ளே நுழைய நம்பகமான வாயில் தோரணங்களாக அமைந்திருக்கின்றன.
நுழைந்து நோக்குகையில் ஒப்பு கொள்ளவே இயலாத வலிகளின் நிழலில் கதையின் மாந்தர்கள்.
அத்தனை வலியையும் எப்படியோ சுமக்கும் மனிதர்களின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.
இப்படியும் நடக்கிறது என்பதே தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது, அனைத்து மனிதர்களும் எதிர் கொள்ளும் இழப்போ வலியோ இல்லை இவை. கதை மாந்தர்களின் சொந்த தவறான வினைகளின் விளைவுகளும் அல்ல இவை, காலம் தேர்ந்தெடுத்து இந்த சுமைகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
கேவல்களுடன், அதியுச்சி விளிம்பின் எல்லையில் நின்றுக் கொண்டிருக்கும் அவர்கள்.
அவர்களின் இருட்டு நிழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் அமைந்த மனிதர்களின் சித்திரங்களும் கதைகளில் வருகின்றன. இவர்களுக்கு நம் காதை அடைக்கும் நியாயங்கள் ஏதேதோ இருக்க கூடும்.
Tuesday, March 19, 2024
ஐந்து வருட மௌனம்
கதைகளின் ஆழ்படிமங்கள்
https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.
இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள்.சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ இல்லை , சிறிய சலிப்புடன் தங்கள் வாழ்வின் பாரத்தைச் சுமக்க தெரிந்தவர்கள், உங்கள் எழுத்து வழி கையறு வாழ்விலும் உறுதியான மனம் படைத்தவர்களின் கதைகளாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.
‘
துயரம் பொறுத்தலும்’ ‘மாறிக்கொண்டே இருக்கும் காலம்’ குறித்த பிரக்ஞையும் தங்கள் கதைகளின் ஆழ்படிமங்கள். உங்கள் கதைகளின் கலை வெற்றிகள் எவை என்று கேட்டால் இவை இரண்டையும் கூறுவேன்.
இவற்றைத் தாண்டி இத்தகையவர்களின் கதைகளைக் கூறும் தங்களைப் போன்ற எழுத்தாளுமையின் பரிவு அளிக்கும் ஆசுவாசம் இன்றியமையாதது, பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற தங்கள் கதைகள் ஒரு சுமைதாங்கியாக இருந்து வருகின்றன.நீ மௌனமாய்த் துயரப்படுவதை நான் அறிவேன் என்னும் பரிவு.
Sunday, February 25, 2024
பிரமயுகம்
கடக்க இயலாத ஆற்றின் நெடுகே நான்கு அருவிகள்.
காடு விட்டு நாம் அகன்றது ஒருவழிப் பாதையோ ?
என்றோ நாம் அடைந்த மாபெரும் மாளிகை, இன்று பிரமயுக பாழில் மிளிர்கிறது.
சிறிய விளக்குகளின் துணை கொண்டு மரணத்தை அறியும் விளையாட்டை,
சூழ்ச்சியும் ஆர்வமும் கலந்த மயக்கத்தில் நாம் விளையாட துவங்கினோம்.
காலம் தோறும் நாம் பணயம் வைக்க உடலுண்டு, உடைமையுண்டு, பிரம யுகத்தில் நம் நேரமும் உண்டு.
வெளியேற முடியாத இவ்விளையாட்டில் பிரமயுக விதிப்படி
இறைஞ்சும் கீதங்களின் மன்றாடல் கடவுளுக்கு கேட்பதில்லை,
நியமங்களுக்கு பலனில்லை,
பிரர்த்தனைகளுக்கு அர்த்தமில்லை,
சூரியன் பகல் கனவில் வரும்
ஊழிக்கால மழைகள் ஓய்வதில்லை.
கள்ளின் வழி பழைய நினைவுகள் நம்மை கடந்த பொற்காலங்களுக்கு கொண்டு செல்வதுமில்லை.
கடவுளே இல்லை !
அன்னையரிடம் நாம் மீண்டும் சேரப்போவதுமில்லை.
மாளிகைப் பாழில் இருந்து தப்பிக்க நமக்கு அனுமதியுமில்லை.
**
சிறிது வெளிச்சம் வர காத்திருக்கையில்,
கதைகள் வளர,
ஒளி பெற்ற மன்னன்
மன்னன் வென்ற பூதம்
பூதம் தின்ற மன்னன்
பூதம் காக்கும்
இருண்ட கீழறையில்
அணையா ஒளி
கண்டோம் ! கண்டோம் !
மாளிகையில் இருந்து வெளியேற
பாழில் தீட்டிய திட்டத்தில் பிசகு.
காலாதீத ஒளியை அணைத்து
பூதம் மட்டும் அடைய முயன்றது
மாபெரும் பிழை !
பூதம் தவிர் ! பூதம் தவிர் !
நல்லதொரு அசரீரி !
கேட்பவரில்லை..
தொடங்கியது யுத்தம் !
நெருங்கும் மாளிகையின் அறைகள்
உருளும் மாளிகையின் சுவர்கள்
மறைந்தான் மன்னன்
பதுங்கியது பூதம்.
தொடர்ந்த நீண்ட நெடிய யுத்தத்தில்,
அந்நியர் வந்து புகுகையில்,
வென்றவர் யார் ?
விலகியவர் எவர் ?
எஞ்சுவது எது ?
நீளும் பாழ் ! நெடிய பாழ் !
மிளிரும் பாழ் !
Monday, January 15, 2024
On the Eve - Ivan Turgenev

Shubin
‘What strikes
me most forcibly in the ants and beetles and other worthy insects is their
astounding seriousness. They run to and fro with such a solemn air, as though
their life were something of such importance! A man the lord of creation, the
highest being, stares at them, if you please, and they pay no attention to him.
Why, a gnat will even settle on the lord of creation’s nose, and make use of
him for food. It’s most offensive. And, on the other hand, how is their life
inferior to ours? And why shouldn’t they take themselves seriously, if we are
to be allowed to take ourselves seriously? There now, philosopher, solve that
problem for me! Why don’t you speak? Eh?’
****
Bersenyev
‘There’s no
need of that, but I wanted to ask you—don’t be angry with me, Andrei
Petrovitch—don’t go to him to-morrow!’
Bersenyev bit
his lip.
‘Ah! yes, I
understand; very well, very well,’ and, adding two or three words more, he
quickly took leave.
‘So much the
better, so much the better,’ he thought, as he hurried home. ‘I have learnt
nothing new, but so much the better. What possessed me to go hanging on to the
edge of another man’s happiness? I regret nothing; I have done what my
conscience told me; but now it is over. Let them be! My father was right when
he used to say to me: “You and I, my dear boy, are not Sybarites, we are not
aristocrats, we’re not the spoilt darlings of fortune and nature, we are not
even martyrs—we are workmen and nothing more. Put on your leather apron,
workman, and take your place at your workman’s bench, in your dark workshop,
and let the sun shine on other men! Even our dull life has its own pride, its
own happiness!”’
The next
morning Insarov got a brief note by the post. ‘Expect me,’ Elena wrote to him,
‘and give orders for no one to see you. A. P. will not come.’
****
Elena
Oh, how still
and kindly was the night, what dovelike softness breathed in the deep-blue air!
Every suffering, every sorrow surely must be soothed to slumber under that
clear sky, under that pure, holy light! ‘O God,’ thought Elena, ‘why must there
be death, why is there separation, and disease and tears? or else, why this
beauty, this sweet feeling of hope, this soothing sense of an abiding refuge,
an unchanging support, an everlasting protection? What is the meaning of this
smiling, blessing sky; this happy, sleeping earth? Can it be that all that is
only in us, and that outside us is eternal cold and silence? Can it be that we
are alone... alone... and there, on all sides, in all those unattainable depths
and abysses—nothing is akin to us; all, all is strange and apart from us? Why,
then, have we this desire for, this delight in prayer?’ (Morir si giovane was
echoing in her heart.)... ‘Is it impossible, then, to propitiate, to avert, to
save... O God! is it impossible to believe in miracle?’ She dropped her head on
to her clasped hands. ‘Enough,’ she whispered. ‘Indeed enough! I have been
happy not for moments only, not for hours, not for whole days even, but for
whole weeks together. And what right had I to happiness?’ She felt terror at
the thought of her happiness. ‘What, if that cannot be?’ she thought. ‘What, if
it is not granted for nothing? Why, it has been heaven... and we are mortals,
poor sinful mortals.... Morir si giovane. Oh, dark omen, away! It’s not only
for me his life is needed!
****
வனம் திரும்புதல் - பொ. கருணாகரமூர்த்தி
வனம் திரும்புதல்
, சிறுகதை தொகுப்பு
வாசித்தேன், மிகவும் நிறைவான
ஒரு வாசிப்பு அனுபவத்தை வழங்கிய புத்தகமாக எனக்கு அமைந்தது, கதைகள் மொத்தத்தையும் சேர்க்கும் அடிப்படை சரடுகளையும் ,
தனித்தனி கதைகளின் விநோதங்களில் நான்
ரசித்தவற்றையும் கூறவே இந்த பதிவு.
கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் மூன்று விஷயங்கள் பெரும்பாலான கதைகளில் அமைந்து வந்துள்ளதாக தோன்றியது, 1) அடிப்படையில் வாழ்வை துய்க்க மகிழ்ச்சி நாட்டம் 2) அடிப்படையில் அனைத்து செயல்களிலும் பொதிந்துள்ள அறம் சார்ந்த ஊடாட்டம் 3) தினப்படி வாழ்வை எளிதாக்கும் பகடியும் எள்ளலும் - இம்மூன்றும் கதைகளை விவரிக்கும் விதத்திலும் கதைகளின் உள்ளடக்கத்திலும் கூடி வந்துள்ளன - எந்த ஒரு மனிதனின் வாழ்விற்கும் இம்மூன்றும் அடிப்படையாக இருக்க சாத்தியமான ஒன்று, பகடி தமிழ் நல்லுலகில் பெரும்பாலும் பிடி மாட்டாது போனாலும் , இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு அமைகையில் அவன் ஆளுமை குறைந்த பட்சம் சிறப்பானதாக இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக காலச்சிமிழ், வனம் திரும்புதல், மனைமோகம் இம்மூன்றையும் கூறுவேன்
தனிக்கதைகளையும்
அதன் தனிப்பட்ட அழகுகளையும் தாண்டி , நிலங்கீழ்வீடு, Galle Face Hotel, மனைமோகம்,இராணுவத்தில்
சித்தார்த்தன், கதைகள் அதன் வெளிப்படையான உட்பிரதி / உள்ளடக்கம்
காரணமாக இணைத்து வாசிக்க வேண்டிய கதைகளாக தோன்றின . இக்கதைகளில் என்னை
கவர்ந்தவை Galle Face Hotel - கதையில் வன்முறை அறவே இல்லாதது, மனை மோகம் கதை ஒரு Existenalist திரைப்படத்தின் உள்ளடக்கத்தை போல் இருந்தது,
ஒரு தேர்ந்த இரானிய திரைப்படத்தை பார்த்தது
போல் இருந்தது, Leila's Brothers என்ற ஈரானிய
திரைப்படத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
Donner Wetter, தாயுமானவள்,மாயத்தூண்டில் கதைகளில் நமக்கு ஐரோப்பா அதன் பன்முகங்களில் அறிமுகமாகிறது
ஓடுகாலித் தாத்தா , மேகா அழகிய மனைவி, வடிவான கண்ணுள்ள பெண் , ஜிமிக்கி ஸ்பெஷலிஸ்ட், சோபிதாவிற்கு பெர்லின் காட்டுதல் - ஓடும் நதி - இவ்வாழ்வில் நம்மை நாமே பரிசீலிக்க, புரிந்து கொள்ள, வெகு சில வாய்ப்புகளே அமையும் அவ்வகையான தருணங்களின் உணர்ச்சி நிலைகளை இக்கதைகள் கையாள்கின்றன, சிட்டிகை உப்பு போல் குறைந்தாலும் சிரமம் , இல்லையென்றாலும் சிரமம், உதவி செய்வது பலனை எதிர்பார்த்தா ? பெண்ணின் அழகு ஒருவர் மட்டுமே ரசிக்க வேண்டும் என்கிற விதி எவ்வெல்லை வரை செல்லும் ? ஏமாற்றுபவனே ஏமாறும் போது நம் நிலைப்பாடு என்ன ? சொந்த வாழ்க்கையின் சுகம் முக்கியமா ? சுகம் குறைத்து குடும்பத்தை காப்பாற்றுவது முக்கியமா ? லௌகீக பொறுப்பில்லாமல் புத்தகம் படிப்பவர் நல்லவரா கெட்டவரா ? - எவற்றிற்கும் எளிதான விடை இல்லை, எள்ளலும் பகடியும் மின்னும் இந்தக்கதைகளில் குறிப்பாக " சோபிதாவிற்கு பெர்லின் காட்டுதல் மற்றும் மேகா அழகிய மனைவி கதைகளின் வரிகள் வெடித்து சிரிக்க வைத்தன அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தன.
காலச்சிமிழ் மற்றும் வனம் திரும்புதல் இவ்விரண்டு கதைகளின் வடிவங்கள் புதுமை - நன்று. இவை ஒட்டுமொத்த வாழ்வின் தாங்க முடியாத நினைவுகளை சுமந்தபடி அமைந்துள்ள கதைகள், மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க வைக்கும் வரிகளை கொண்ட காலச்சிமிழ் கதையின் தெளிவு ஒரு எழுத்தாளனின் வெற்றி என்றால் வனம் திரும்புதல் சீறி அலையும் அத்தனை திசைகளும் மிக நுட்பமானவை - நகரத்தின் அலைவில் ஒரு நாள் முடிந்து திரும்பும் சித்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது - ஹீலியம் தயவில் ஒட்டு மொத்த நினைவுகளும் வந்து முகில்களாக சுற்றி சுற்றி வரும் போதும் தெரியும் நகர மின்மினி காடுகளை நான் உணர்ந்திருக்கிறேன்.
ஹீலியம் உபாசனை நன்று, அதை விட நன்று நங்கையர்களின் ஒளிர் விடும் கண்கள், அதை விட நன்று அறிந்திராதவர் அளிக்கும் அணுக்கம் , அதை விட நன்று இந்த ஆசைகள் நினைவுகள் அனைத்தும் நகுலன் கூறியது போல் ஒரு புள்ளியாய் தோன்றும் வனம் திரும்பும் நாட்கள்.
Friday, November 24, 2023
சகீனாவின் முத்தம் - விவேக் ஷான்பாக்
நாயகன் வெங்கடரமணனின் சொற்களில், கடந்து வந்த வாழ்வின் நிகழ்வுகளை துல்லியமாய் நினைவுபடுத்தியபடி நிகழ்காலத்துடன் முடிச்சிட்டு விரிகிறது இந்த நாவல்.
வெங்கடரமணனின் மௌடிகத்தின் பன்முகம், -சுயத்தை வெளிப்படுத்த ஒரு வித பயம் - விழுமிய சரிவுகளை அறிந்தும் சுயநலம் உடையாது தன் ஆளுமையை மாற்றாத பிடிவாதம்- பழைய விஷயங்கள் மீதான பிடிப்பை அறிவின் கர்வமாக புனைந்து கொள்ளுதல் - புரிந்து கொள்வது போல அக்கறையை நீடிப்பது போல உறவுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இடையறாது முனைதல் - புதிய விஷயங்கள் மீதான பயத்தை எல்லை மீறலாக புரிந்து கொள்ளுதல், சொற்களின் வழி நீதிகளையும் நிகழ்வுகளின் வழி அநீதிகளையும் கண்டும் காணாதிருத்தல் என்பதான தோரணைகளில் உறைந்துள்ளது.
ரமணனின் கடிதத்தில் குறுக்கு பாதையில் மொழியின் வளமை பரிணாமத்தை நாம் உணர்வது போல்,
விரித்து வைத்த லாக்கர் பொருட்கள் அனைத்தையும் காண்கையில் வெங்கட்டின் நினைவுக்கு வரும் ரமணனின் ஒற்றைப்பை, குறுக்கு பாதையில் மானுட பண்பாட்டின் வளமை பரிணாமத்தை நமக்கு உணர்த்தும்.
அழைப்பு மணிகள் - வெளியிலிருந்து வரும் தொடர் அழைப்புகள் நமக்கு சொல்லும் செய்திகள் என்ன ?
வீட்டில் இருப்பது போன்றும் இல்லாதது போன்றும் தோன்றும் அந்தப் பொருள் தான் காணாமல் போனதோ ? நாம் தேடுவது கிடைத்தவுடன் அள்ளி பதுக்குவோமா இல்லை பகிர்ந்தளிப்போமா ?
புத்துயிர்ப்பு நாவலின் நாயகனையும் வெங்கட்ரமணனையும் இணைத்து வாசிக்க வாய்ப்புள்ளது.
Tuesday, November 14, 2023
Resurrection - Leo Tolstoy
Nekhlyudov undertook an ambitious tumultous journey between reading and real life experiences to arrive at possible method of what to do with one's convictions. He took a Gentle Righteous approach, travelling from one institution to the other, constantly challenging himself to maintain grace and decorum and shed selfishness. Holding on to the fervour of "Doing good to others and changing things" always pointing the action finger on himself he goes on a pursuading spree to appeal to the goodness of everyone he met to make them do good about things within their power.
Novel can be viewed as a stunning series of interviews and Character Arcs across various sections of people. These interviews are triggerred in the beginning by a sense of guilt but what carried them through out is the fervour to do what is right and what exactly needs to be done as per His Masters' Will. Nekhlyudov clearly understood this only at the end, but far earlier he had acted so guided by his personal conviction.
Thursday, October 05, 2023
நல்ல பாம்பு - நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன்
இந்த நாவலை வாசிக்கையில் ஏற்பட்ட மனப்பதிவுகளை உறுதிப்படுத்தவே இந்தப்பதிவு.
இந்த நாவல் என்னை கடுமையாக பாதித்தது. பொதுவாக எந்த ஒரு நாவலையும் வாசிக்கையில் கதையின் வீச்சோ, நாவலின் கட்டமைப்போ, சம்பவங்களின் தாக்கமோ, நடையின் சுவாரஸ்யமோ தான் பெரும்பாலும் நம்மை பாதிக்கும். மேலும் நாவலின் முதன்மை கதாபாத்திரங்களுடன ஒன்றுவதன் மூலம் நாவல் நமக்கு நெருக்கமானதாகி விடும். நான் இந்த நாவலை வாசிக்கையில் இவ்வழிகளில் அல்லாது முற்றிலும் நேரடியாக மிகுந்த சஞ்சலமும் அதிர்ச்சியும் அடைந்தேன். பிரதியின் நேரடி தாக்கம் குறித்து மேலும் அறியவே இதை எழுதுகிறேன்.
ஒரு வகையில் இந்த நாவலின் முதன்மை கதாப்பாத்திரங்கள் என்னுடைய பகல் கனவுகளின் தப்பிக்கும் ஆசைகளின் ஸ்தூல வடிவங்களாக இருக்கின்றன. செம்புலி காலங்காலமாய் செறிந்து வரும் காலத்தின் விடுதலையின் மௌனத்தை நமக்கு உணர்த்துகிறார். நேரெதிராக இருபதாம் நூற்றாண்டில் விடுதலையான அம்பிகா நாம் பேச மீதி உள்ள விஷயங்களை உணர்த்துகிறார்.
இவ்விருவரும் இணையும் இடமாக 'தன்னந்தனிமை' இருக்கிறது.
பிரதியை வாசிக்கையில் நான் கண்ட இந்த 'தனிமையின் பாலை' எனக்கு மிகுந்த தொந்தரவை அளித்தது. என் பகல் கனவுகளில் உள்ள தனிமை இனிமையானதாக இருந்தது. ஆனால் நாவல் உணர்த்திய 'தன்னந்தனிமை' மிகுந்த நேரடியாக, தாங்க முடியாத அளவில் இருந்தது. எனது மனவலிமையின் போதாமையை, என் தனிமை கனவுகள் வெறும் தப்பிக்கும் உத்திகளே என்று நாவலை வாசித்து முடிக்கையில் தோன்றியது. தனிமையின் பக்கத்தை அடைய வெவ்வெறு வழிகளில் நாவலின் ஆப்த வாக்கியங்கள் நம்மை சுழற்றி அடித்து அழைத்து செல்கின்றன.
இந்நாவல் வழி ,ஆப்த வாக்கியங்களை வாசிக்கையில் கிடைத்த மனநிறைவும், கதாபாத்திரங்களின் தனிமை ஸ்திதி உணர்த்திய உண்மைகளும் எனக்கு அமைந்தவை.
Wednesday, September 27, 2023
இன்னொரு கனவு - சுப்ரமண்ய ராஜு
குடும்பத்திலிருந்து பிய்த்து கொண்டு போகும் முனைப்பு, அந்த முனைப்பின் எல்லையில் துறவற ஆசை. அவ்வாசை என்பது பொறுப்பில் இருந்தும் பிடுங்கல்கள் இருந்தும் விடுபட நாம் ஏங்கும் வெறும் 'தப்பித்தல்' என்றும், நம் சுயநலத்தின் தைரியமின்மையின் இன்னொரு முகம் என்று புரிய தொடங்குகையில், தினசரி செக்கு வாழ்க்கை அளிக்கும் சலிப்பு தெளிந்து தெரிய வரும். வெறும் பார்வையாளனாகி, அந்த சலிப்பு நம்மை கொண்டு செல்லும் இடம் எது என்று அறிய முயன்றால் ..
சலிப்பின் சாரத்தை விவேகமாய் உணர்ந்து, சலிப்பை வெல்ல, மீண்டும் மீண்டும் உணர்ந்த முழுவதையும் சொற்கள் வழி சாராம்ச படுத்த முனைந்து, கச்சிதமாக சொல்வழி சாராம்சபடுத்துவதில் தேர்ச்சிப் பெற்று, அந்த சொற்களின் வழியில் "செட்டில்" ஆவதை வெறுத்து, புலப்படாத பெரிய நிகழ்வுகளை எதிர் கொள்ளும் விதமாய் நடக்கும் சிறிய செயல்களை மலர்ச்சியுடன் தினம் நாடும் ஒருவனாய் திகழ வாய்க்குமோ ?
Saturday, September 09, 2023
Sunday, July 16, 2023
King Lear - William Shakespeare
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)












.jpeg)
.jpeg)