Sunday, April 19, 2026

பாரதியார் கதைகள்



சுபலா கதிர்வேல், பிரகாஷ் ராஜகோபாலன் தேர்வும் தொகுப்பும் செய்த பாரதியார் கதைகள்

சால்ட் பதிப்பகம் வெளியீடு 


Tuesday, March 24, 2026

மலையேற்றம்



முற்றிலும் கைவிடப்பட்ட துயர நிலை குறித்தான சித்திரம் புலப்படும் இடங்களில் நாவல் கவனத்தை ஈர்க்கத்  தொடங்கியது. குறிப்பாக ராசபாண்டியும் அவனது தாயும் அடுத்து என்ன செய்வது என்று அறியாது துணை எதுவும் இல்லாது கனத்த மௌனத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி அரை இருளில் அமர்ந்திருக்கும் சித்திரம். நாவலில் அநேக இடங்களில் ராசபாண்டி உணரும் துயரக்குழி சித்திரத்தின் உச்சம் இந்தப் பகுதி.

கைவிடப்பட்ட நிலையில் உள்ள ராசபாண்டி தனது இந்த நிலைக்கு காரணமான  தந்தையை வெறுக்கத் தொடங்குகிறான் . தந்தை குறித்த இனிமையான நினைவுகள் குறித்து குழம்புகிறான் - அதே நேரத்தில் தன் தாயின் பாட்டன் ஆச்சி மற்றும் மீனாட்சியின்  சொற்கள் வழி தனக்கான தனி வழியை அமைக்க முயல்கிறான். இரண்டுக்கும் இடையேயான பெரும்  போராட்டமே நாவலின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.வெறுப்பின் முழு தகிப்பையும் மனதினுள் தாங்கமுடியாது, செயல் வடிவிலும் வெறுப்பை வெளிப்படுத்த முடியாது அல்லல் படுகிறான் ராசபாண்டி . நட்சத்திரத்தில் பிரியமானவர்களை காண முடிந்த ராசபாண்டிக்கு நேரில் காணும் தந்தை மீதான தனது  வெறுப்பு குறித்து மிகுந்த சஞ்சலம் ஏற்படுகிறது - ஏதோ ஒரு செயலை எதிர்பார்த்து அவன் மனம் முன்னும் பின்னும் விளையாடியபடியே இருக்கிறது. 

விளையாட்டிற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வண்ணம் நாவலில் ராசபாண்டிக்கும் காட்டின் தன்னிச்சையான நிகழ்வுகளுக்குமான முடிச்சு நன்றாக அமைந்து வந்திருக்கிறது. குறிப்பாக மிருகங்கள் வரும் இடங்கள் நிரம்ப குறிப்புடன் அமைந்திருக்கிறது. ராசபாண்டியின் மனம் நிகழ்வுகளில் முழுகுகையில் மரங்களில் தாவும் குரங்குகள் பற்றிய வரி, சின்னமாயன் மாடுகளுடன் மணிக்கணக்கில் பேசுவது, துயர்க்குழியில் இருக்கும் ராசபாண்டி வாழ்க்கையை ஒரு மதம் பிடித்த யானையுடன் ஒப்பிடுவது, நிர்கதியின் உச்சத்தில் வன மிருகம் ஒன்றை நேருக்கு நேர் அருகாமையில் காணும் இடம், டார்ச் வெளிச்சத்தில் அசையாத ராஜநாகம் குறித்த குறிப்பு, ஒரு கட்டத்தில் ராசபாண்டி தன்னை துயரம் என்னும் தவளைகளின் மீது ஏறி செல்லும் மலைபாம்பாக எண்ணிக் கொள்ளும் இடம், தோல் உதிர்ந்த குரங்கை நேருக்கு நேர் ராசபாண்டி காணும் இடம், யாருக்காகவோ காத்திருந்து மீண்டும் பழத்தை கொத்த தொடங்கும் பறவை என நாவல்  நெடுக  லயித்து வாசிக்க முடிகிறது

தந்தை மீதான கோபம் தமிழ் நவீன நாவல்களுக்கு புதிதல்ல - துரோகம் தொடர்ந்து வரும் பழி மற்றும் சாபம் தொடர்பான கதைகளும் புதிதல்ல, இந்நாவலின் ஆதார உணர்வு நமக்கு  மிகவும் பழக்கமானதே. நம் அர்த்தமற்ற மற்றும் அர்த்தம் மிகுந்த கோபத்தையும்  வெறுப்பையும் ராசபாண்டியின் வரிகளில் கண்டுகொள்ளலாம். சுயத்தையே அழிக்க வல்ல வெறுப்பை ராசபாண்டி கண்டு கொள்வதும் அவனை ஆற்றுப்படுத்திய அனைத்து சொந்தங்களின் வார்த்தைகளில் நாம் நமக்கான ஆறுதலை நாம் தேடிக்கொள்ள முடியும். யூமா வாசுகியின் "ரத்த உறவு ", தேவி பாரதியின் " நிழலின் தனிமை" இவ்விரண்டு நாவல்களும் இவ்வகைமையில் வாசிக்க தகுந்த செறிவான நாவல்கள்.

வெறுப்பு கோபம் சார்ந்த  எண்ண ஓட்டங்கள் விசித்திரமானவை. அவற்றின் ஊற்றுக்கண் வெறுப்பு தொடங்கிய காரண காரியத்தின் பெயரிலா அல்லது நம் துயரம் மேலும் குழிவிடாமல் இருக்க வெறுப்பு நமக்கான கவசமா என்ற கேள்வி ராசபாண்டி வழியாக நம்மிடம் எழுப்பப்படுகிறது. ஆதார வெறுப்பு எங்கோ சென்று ஒளிந்து கொள்ள நம் மிதமிஞ்சிய கோபமும் வெறுப்பும் தொடர்ந்த எண்ணங்களும் எதை நோக்கி என்று நம் உணர்வது அத்தனை எளிதான ஒன்றல்ல. எண்ணங்களின் அலைக்கழிப்பிற்கு பிறகு நமக்கு அமைவதெல்லாம் செயலுக்கான ஒரு அழைப்பே. விலகி ஓடி இவற்றில் இருந்து நாம்  வெளியேற முடியாது. நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்கும் விதத்தை நான் இப்படியே புரிந்து கொள்கிறேன். அனைத்து விதமான முடிவுகளும் சாத்தியமாகும் படியான இறுதிப்பகுதி , சிறிய பதைப்புடன் தான் வாசித்து முடிக்க முடிந்தது. இப்போதைக்கான, நேருக்கு நேர் நம் மிருகங்களை காண, ஒரு  ஆற்றுப்படுத்தல், இயற்கை வழி, ராசபாண்டிக்கு வாய்த்திருக்கிறது.

Friday, March 13, 2026

இரண்டு எலிகள் இரண்டு வழிகள்




நம் ஆணவம் நொறுங்க

நம் தொடர்ச்சி அறிய 

நம் எல்லைகள் புரிய 

பூரண ஸ்திதியின் செழுமை உணர 

நம் ஆன்மீகம் உயிர்ப்புடன் இருக்க 

நம் விழிப்பு குறித்த போதம் தொடர 

நம் இருப்பின் சாரம் விளங்க 

வாசிக்க வேண்டிய புத்தகம்.




அன்றாட யோகி

 


சிவப்பிரகாஷ் அவர்கள் எழுதிய "குரு ", 'பத்து வாயில்கள்' முன்பே வாசித்தது. "அன்றாட யோகி " வாசித்ததும் தோன்றியது.. 

குரு - பத்து வாயில்கள், திட்டவட்டமான மிகவும் செறிவான உள்ளடக்கம் கொண்ட, ஒரு ஆன்மீக கையேடு போன்ற புத்தகம்.

அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களுடைய தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களின் நேரடியான அப்பட்டமான பதிவு.   ஆன்மீக சாதனா குறித்தும், அசாதாரண அனுபவங்கள் குறித்தும், குரு சொல்லும் வழியில் செல்வது குறித்தும், குருவுடனான உறவு குறித்த முக்கியத்துவம் குறித்தும், குரு மற்றும் மகான்களின்  அற்புத லீலைகள் குறித்தும் கடவுளுடன் உரையாடும் தெய்வ மனிதர்கள் குறித்தும் அமைந்துள்ள புத்தகம்.

குரு, பத்து வாயில்கள் -  அனைவருக்குமான தியரி, 

அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களின் பிராக்டிகல்.

Thursday, March 12, 2026

சிவஞானம்

 


சிவஞானம், நாலாவது சார் இரு நெடுங்கதைகள் உள்ள புத்தகம்.

சிவஞானம் 

பிறப்பு எதை முடிவு செய்யும், வளர்ப்பு எதை முடிவு செய்யும் என்பதை யார் அறிவார்? 

நம் தவிப்பு திரிசங்கு,இடைக்கழி. 

இரு வெளிச்ச புள்ளிகளுடன் வரும், நாம் செல்ல வேண்டியது என நினைத்து ஏறிய, எதிர் புறம் செல்லும் பேருந்து.

நாலாவது சார் 

சம்பந்தம் அற்றது என்று தோன்றும் பல்வேறு நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று சம்பந்தபடுத்தி கொள்வது போல் அமைந்த கதை. சாது மிரண்டால், காசி விஸ்வேஸ்வர் சிறிய கிராமத்திற்கே வந்து விடுவார் என்றும் புரிந்து கொள்ளலாம், நுண்மையமான பல அடுக்குகள் கொண்ட கதை, வாசிப்பவர் அவருக்கு தோன்றும் வகையில் நிகழ்வுகளின் ஆரம் கோர்க்க கதை பல தளங்களில் பொருள்படும்.

Tuesday, February 10, 2026

சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்

சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் கதை தொகுப்பு வாசித்தேன். 

முகநூலில் ஏற்கனவே கிட்ட தட்ட அனைத்து கதைகளையும் வாசித்திருந்து எனக்கே வியப்பாக இருந்தது. அந்த அளவிற்கு போகன் சங்கர் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் என்று புரிந்தது. செயலி இல்லமால் facebook ID இல்லாமல் தங்கள் facebook பக்கத்தை Chrome browser வழி மட்டுமே பின் தொடர்ந்து அனைத்து கதைகளையும் வாசித்து இருக்கிறேன்.


மீள் வாசிப்பில் பின் வரும்  கதைகள் மிகவும் பிடித்திருந்தன. 

வெளியேற்றம்

கடவுளின் இல்லம்

புனிதமும் சாதாரணமும் 

இம்மானுவேல் காண்டின் ஸ்பூன்

மோகக்கிணறு

மறைந்த புத்தகம்

காலப்பறவை

கதவுகள்

சமிக்கை

புண்ணியகரை

வரி

புறக்கணிப்பு, கோபம், ஆன்மீகம், மன உடைவு, ஆசை, குற்ற உணர்ச்சி, ஞாபகம், இயலாமை, சந்தேகம், நிவர்த்தி, முழுமை  - இக்கதைகளை நினைவு கூற வசதியாக இந்த சொற்களை வைத்து கொள்கிறேன். குறுங்கதைகள் கொடுக்கும் முதல் அதிர்ச்சிகள் தாண்டி இந்த வடிவத்தில் வாசகன் நினைவு கூற தக்க முழுமை பார்வை மேல் உள்ள கதைகளில் அமைந்துள்ளதாக நினைக்கிறேன.

ஏனைய கதைகள் சுவாரஸ்ய சம்பவங்களாகவும்  திடமான கருத்தாகவும் அமைந்திருக்கின்றன.

பாருகுட்டியின், தீவிர சாமியார்களின் கதைகள் இந்த தொகுப்பில் குறைவு அல்லது அநேகம் இல்லை. அறிவியல் புனைவுகளும் அநேகமாக இல்லை, இளவயதினர் இக்கதைகளில் பெரும்பாலும் வரவில்லை.  

மேற்படி குறிப்பிட்ட கதைகளில்  போகன் கதைகளின் உண்மையான ஆன்மீகம் வெளிப்படுகிறது. மனக்குழப்பத்திலும், ஆற்றாமையிலும், குற்ற உணர்ச்சியாலும், இயலாமையாலும், ஏக்கத்தாலும்,  அலைக்கழிக்கப்படுபவன் மேல் ஆசிரியர் செலுத்தும் வெளிச்சம் இந்தக் கதைகள்.

எவரும் தன்னைக் கண்டு கொள்ள, தன் கருணையின் எல்லையை விரிக்க சிறு வாய்ப்பு இந்தக் கதைகள்.

Wednesday, February 04, 2026

மயல்

மயல் சுவாரஸ்யமான சரளமான வாசிப்பை அளிக்கும் நாவல்.

மிகவும் ரசிக்க தக்க வேறு வேறு விஷயங்களின் எதேச்சையான தொகுப்பாக இந்த நாவல் அமைந்து விட்டது.


நல்ல உணவு, குறிப்பாக தஞ்சை சைவ உணவு குறித்தான விவரணைகள் ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது. ருசி ஏக்கம், சமையல் பொருட்களின் தேர்வுகள், தயாரிப்பு இவை குறித்தே பெருமளவு விவரணை அமைந்திருக்கிறது. பசி குறித்தும் சுவையற்றதுமான பதார்த்தங்கள் குறித்தும் விவரணை அநேகம் இல்லை.

நாவலின் நாயகன் கிருஷ்ணாவிற்கும் கதையில் வரும் பெண்களுக்குமான உறவுகளின் விவரணை பெரும்பாலும் புறவயமாகவே அமைந்திருக்கிறது.விவரணை மிக சிறப்பாக அமைந்திருந்தாலும் ஆண் பெண் இரு மருங்கிலும் உள்ள ஏக்கத்தையும் ஆசையையும் விட அவர்கள் சந்தித்து அளாவி மகிழ்ந்து குலவும் இடங்களில் புற விவரணைகளே அதிகம் இடம் பெற்று இருக்கின்றன. ஷ்யாமாவால் , நீலாவால் அம்மாவால் பாட்டியால் கிருஷ்ணாவிற்கு என்ன கிடைத்தது என்பதான கவனம் அதிகமாகி - அப்பெண் பாத்திரங்களின் உருவே கிருஷ்ணாவால் வடிக்கப்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது.

நாயகன் நாவல் தொடங்கும் பொழுதே, சமூகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற மனிதன், காரியங்களை முடிக்கும் சமர்த்தன், நாவல் முடிகையிலும் இடையின் சிறு இடறலை தவிர இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை - நாயகன் கிருஷ்ணா நமக்கு விவரிக்கும் புதிர் பாதையின் எதேச்சையும், கர்மாவும், பெரியவர்களின் ஆசியும்,பூடகமும், அவன் சந்திக்கும் சவால்களும் ஒரு சாகசத்தை ஒத்தே இருக்கின்றதே ஒழிய ஒரு மெய்மை தேடலாக அமையவில்லை - ஒரு மெய் தேடலுக்கான வலுவான சம்பவங்களும் கதையில் அமையவில்லை.மெய்மை தேடலுக்கான கலை சொற்கள் சில இடங்களில் அமையப்பெற்று இருந்தாலும் அவை பெரும்பாலும் ஒரு தொடர்ச்சியை அளிக்க வில்லை.

நாவலின் சாகசப் பகுதிகளின் புற விவரணைகள் சில இடங்களில் குறிப்பிடும்படியாக இருந்தாலும் அவற்றின் குறியீட்டு தன்மையும் நாயகனின் தேடலுக்கு வலு சேர்க்கும் ஒன்றாக இல்லை. நாயகன் புறத்தே அல்லது அகத்தே ஒரு பொருளை தேடி செல்கையில் நடுவில் வரும் தடைகள் தேடப்படும் பொருளை / விஷயத்தை சுற்றியே அமைந்திருந்தால் நாவலின் வடிவம் கட்டுக்குள் இருந்திருக்கும்.

நாவலின் நாயகன் ஒரு வெற்றியாளன் - உறவு சிக்கல் இல்லாதவன் - பணக்காரன் - குடும்பத்தின் அனுசரணை உள்ளவன் -உணவை ரசித்து உண்பவன் - தன் மனம் இயங்கும் விதம் பற்றிய சித்தம் தெளிந்தவன் - முன்னோர் ஆசி பெற்றவன் - உலகத்து உயிர் அனைத்தும் அவனுக்கு துணை - இவ்வாறு எல்லா ஒருங்கே அமையப்பெற்றவன் - தனக்கு அளிக்கப்பட்ட சாகச கடமையை செவ்வனே முடித்தவன் - இத்தனை நேர்மறை அம்சங்களும் , சஞ்சலமற்ற தன்மையும் கதையின் வீச்சை பெருமளவு குறைக்கிறன.

இருப்பினும் ,நாவல் திறந்த கொள்ளும் இடங்கள் இரண்டு. ஒன்று, நாம் உண்ணும் உணவின் சுவைக்கும் நம் மெய்மைக்கும் நம் பெற்றிருக்கும் குணத்திற்கும் உள்ள சுக்ஷும உறவு பற்றிய அறிவு . இரண்டு, காமத்தை கடக்க நினைக்கையில் மனம் பெண்மையை நோக்கிய தனது எண்ணமாற்றத்தை அடைய வேண்டியதன் தெளிவு. இரு புள்ளிகளையும் சில இடங்களில் கோடிட்டு மட்டும் காட்டி நாவல் நின்று விடுகிறது.

நாவலுக்கு வெளியே - மனிதனை மிகவும் அலைகழிக்க வைக்கும் உணவு தேடலும் காமமும், எதிர்பார்த்த அளவில் மனிதனுக்கு கிடைத்து விட்டால், மெய்மை தேடல் என்ற ஒன்று அவனுக்கு தேவைப்படுமா என்ன ? மரணம் குறித்த நினைவை நல் உணவும் காமமும் விரட்டி விடுமா என்ன ? ஊழின் கரங்களை அவை வெல்லுமா என்ன?

Saturday, January 24, 2026

உள்ளே மாட்டிய சாவி

உள்ளே மாட்டிய சாவி சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். இந்த  கதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற ஒரு சித்திரம் “உலகம்,  அதன் போக்கில், சற்றும் கவலையற்று இயங்கி கொண்டிருப்பதான” சித்திரம். இது தான் கதைகளுக்குள் நுழைவதற்கான முதல் வாசல்.


--

காலத்தின் கணக்கில் , தங்கள் உழைப்பை தங்கள் பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் செய்த  ஆளுமைகள் குறித்த கதைகள் இவை. அந்த ஆளுமைகளின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாகவே இந்த கதைகள் அமைந்துள்ளன - அந்த ஆளுமைகளின் அந்தி காலங்களின் மறதி, விரக்தி, இயலாமை புறக்கணிப்பின் ஊடே தாம்  அவர்களின் கடந்த கால பெருஞ்செயல்களை நினைவு கூறுகிறோம்.

--

ஒவ்வொரு கதைகளிலும் ஒரு சின்ன சொற்றொடர் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது

“உள்ளே மாட்டிய சாவி “ (அது  கவிஞர் சுகுமாரன் அவர்கள் இட்ட தலைப்பு என்று ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார் அந்த தலைப்பு நல்லபடியாக அமைந்துள்ளதாக மனதில் பட்டது )

“உணர்ச்சிகள் ஏதும் இல்லாத பிரம்மாண்ட இயந்திர பறவையை “

“காட்டில் மரங்களினுடைய நடப்பதை போல புத்தகங்களை பார்த்தவாறு அடுக்குகள் நடுவே உலாவிக் கொண்டிருந்தான் “

“வளைந்த மூங்கில்களே எலும்புகளைப் போல் தோன்றின “

“ஒருவரால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது அவரிடம் வைக்கும் அவர் மீது நம்பிக்கை அவரை மாற்றும்”

“ஒருவர் பணத்தை எந்திரத்தில் எண்ணி கட்டி மூளையில் அலட்சியமாக எரிந்து கொண்டிருந்தார்

உங்களுக்கு பணம் கொடுத்தவரும் கடன் வாங்கிப் போனாரு”

“பின்னாலிருந்து தேர் பல எறும்புகள் இழுத்துச் செல்லும் பண்டம் போல் இருந்தது”

“இப்பத்தான் போட்ட கன்னுகுட்டி போல் இருக்கிறது என் புகைப்படத்தை தொட்டு முத்தம் கொடுத்தாள் “

--

இந்தக் கதைகளில் தோன்றும் மற்றொரு சித்திரம் நகரமயமாதல். ஒவ்வொரு கதைகளும் மெல்ல முன்பு கண்ட இடங்களெல்லாம் கண் முன்னே காணாமல் போகின்ற ஒரு சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒரு புறம் என்றால் அந்த மாற்றம் சில மக்களை தீண்டவே இல்லை என்பதான இன்னொரு சித்திரமும் வந்து கொண்டே இருக்கிறது. தீண்டவே இல்லை என்றால் அவர்கள் வாழ்வில் முன்பிருந்ததை விட அவர்கள் ஒரு நெருக்கடியான கடினமான ஒரு சூழ்நிலையில் வாழ நேர்ந்ததை இந்த கதைகள் பதிவு செய்கின்றன.

--

தலைக்கசம் கதை பூரண கலை அமைதி பெற்ற கதையாக எனக்கு பட்டது. இந்த கதைகளில் வரும் அதனை நிகழ்வுகளையும் நாம் வரிசைப்படுத்த முயல்கையில் - பின்தோற்றம் -இறப்பு-காதல்-தோற்றம் - படிப்பு-கண்டிப்பு-பழங்குடி-உடல்-படிப்பு-விளையாட்டு-புத்தகம்-தூது-காதல்-புகைப்படம்-கள்-உணவு-சாதி-உடல்- கூட்டு சிரிப்பு-பாகுபாடு-உடல்உழைப்பு - சர்க்கார் வேலை விண்ணப்பம்- காணாமல் போதல்-பின்தோற்றம்-மீள் தேடல்-தலைக்கசம் மாயம் - குடியிருப்பு பிளாட் தோற்றம் என்று வரிசைபடுத்தலாம். நம் சமகால பிரக்ஞையின், மானுடம் கடந்து வந்த பாதையின் தீற்றல்கள் இந்த கதையில் உள்ளன.

Monday, January 12, 2026

பாரபாஸ்

இன்றைய நவீன மனிதனுக்கு இணையாக வைத்து நாம் பாரபாஸை காண முடியும்.இரு புள்ளிகளில் இருந்து பாரபாஸ் சென்று அடைய நினைத்த ஒரே இடம் இயேசு கிறிஸ்து. ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து. இன்னொருவரின் பாவத்தின் சுமையை சுமக்க சொல்லும் இயேசு கிறிஸ்து.


மிதமிஞ்சிய களியாட்டங்களை விடுதலை உணர்வு மிகுந்த கொள்ளையனான பாரபாஸுக்கு பதில் கிறிஸ்து சிலுவையை ஏற்று கொள்கையில் பாரபாஸ் தடுமாற துவங்குகிறான் . இது முதற்புள்ளி. இனி அவன் பழைய பாரபாஸ் கிடையாது. கிறிஸ்துவை பின்தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களை பின் தொடர்ந்து தனது கேள்விகளாலும் அவர்களது விளக்கங்களாலும் எஞ்சிய மௌனங்களினாலும் கிறிஸ்துவை புரிந்து கொள்ள முயல்கிறான். எவ்வளவும் முயன்றும் அவனால் கிறிஸ்துவை முழுமையாக நம்ப முடியவில்லை - பாரபாஸின் அவநம்பிக்கை கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்து விடுகிறது. தனது சாத்வீக மனசஞ்சாரங்களில் அவன் அடிக்கடி ஈடுபட்டதால் அவன் தனது பழைய நண்பர்களுக்கும் வேண்டப்படாதவனாக மாறிவிடுகிறான். பாரபாஸ் காணாமல் போகிறான். முதல் புள்ளி முற்றும்.


இரண்டாம் புள்ளி - மீண்டும் தோன்றும் பாரபாஸ் முற்றிலும் வேறு ஒரு சூழலில் இருக்கிறான் - வெளி உலகத்தை காணவே முடியாத சுரங்கத்தில் அடிமையாக இன்னொரு அடிமையுடன் சங்கிலி பிணைப்பில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இத்தகைய அடிமை சூழலில் பிணைப்பிலிருக்கும் அடிமையின் நம்பிக்கையை ஒற்றி இயேசு கிறிஸ்து மீண்டும் அவன் வாழ்வில் தோன்றுகிறார். கிறிஸ்துவின் மீட்பு குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தனது இணை அடிமை உடன் இருந்து பாரபாஸ் கிறிஸ்துவை நம்பியும் நம்பாமலும் சுரங்க அடிமை வேலையில் இருந்து மீண்டு, விவசாய அடிமை ஆகி, வீட்டு அடிமை ஆகிறான் - முழுவதுமாக நம்ப முடியாததான தவிப்பு பாரபாஸை அலைக்கழிக்கிறது. மீட்சியையும் இயேசுவின் இன்னொரு வருகையையும் அவன் நம்ப முயல்கிறான் - நம்ப விரும்புகிறான் . ஆனால் முழுவதுமாய் அவனால் நம்ப முடியவில்லை. இத்தகைய தத்தளிப்பான மன நிலையில் இருந்து ஒரு சிறு குழுவின் நடவடிக்கையை பின் ஒற்றி சென்று - கடைசி சிறு ஒளியை கண்டும் காணாமலும் மிகப் பெரிய தீயின் வழியும் கிறிஸ்துவை காண முயன்று இருளில் சென்று மறைந்து விடுகிறான்.

கட்டற்ற களியாட்டம் முதற்புள்ளி.  உழைப்பை உறிஞ்சும் கட்டமைப்பான ஒழுங்கு இரண்டாம் புள்ளி . இவ்விரு புள்ளிகளில் தொடங்கி கிறிஸ்துவை நோக்கி நடக்கையில் நம்பியும் நம்பாமலும் அலைக்கழிப்பில் சிக்குண்டு இருக்கிறான் நவீன பாரபாஸ்.

Saturday, December 27, 2025

உச்சை

 


உச்சை சிறுகதை தொகுப்பு வாசித்தேன். 

அனைத்து கதைகளிலும் பொது விஷயமாக அமைந்திருப்பதாக நான் கருதுவது, நம் தர்க்கங்கள், அனுபவங்கள், புலன்கள், சொற்கள் இவற்றால் முடிந்த வரை முயன்றாலும்

நம்மால் எப்போதும் ஒரு விஷயத்தை, ஒரு நபரை முற்றிலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதையே இந்தக் கதைகள் கூற முற்படுகின்றன.

நம் விளக்கங்கள் சில நேரங்களில் புதிர்களை வாய்ப்பாடாக மாற்றும் வல்லமை கொண்டதாக மாறி விடுகின்றன. நிறைய நேரங்களில் புதிர்களே விளக்கங்களை விட வாசகனுக்கு போதுமானதாக இருக்கின்றன.

உச்சை, சியர்ஸ் மற்றும் ஒலிப்பேழை நல்ல கதைகளாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்.

ஏனைய கதைகளை விட இந்தக் கதைகள் சற்றே நெகிழ்வாகவும் புதிரானதாகவும் அமைந்து இருக்கின்றன. அனைத்து கதைகளும் நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கின என்றாலும் இம்மூன்று கதைகளும் வாசகன் அமர இடம் அளிக்கின்றன.

Thursday, November 27, 2025

Pedro Paramo

 


When you are left all alone,

You Search for your Father,

In Distant Lands

As per your Mothers Wish.


In this Journey back in time,

You Slip into the past to

Land on a Swamp of Memories  

Of The Living and Dead.


The Living murmur and complain,

The Dead Snide with the Past,

You Converse with Men, Women

And Empty Spaces Alike.


Relentless Winds Swirl Us Twigs,

Rain pelts Our puddles at each step.

Sun Vanishes like the Light of Our rooms.

The Moistly Smite Leaves Us Dry.


As you Open the Doors

Of the Ruined Ancient Earth and See

The Abandoned Houses and Things,

No One ever Came Back to take.


In their awe and Angst alike,

They tell you a Story of a Man,

Who made them Paupers and Beggars,

Man who wanted their Entire Earth.


Man who made their predicament must suffer,

Time has its Revelries of No Sensibilities.

Revenge of the Anguished Muted Rejoices

They Suffered, Alone, bearing and remembered,


When they Called Out for help,

Man Walked past their Cries,

Father Walked past to his Church.

God Walked past Watching it all.

Sunday, November 09, 2025

The Dhoni Touch

Good book with collection of fond remembrances of Dhoni by people close to him. Most of them, almost all are in awe with him, they throw us a light on grounded nature of his personality and also his unique way of doing things he wants to do.


Almost all the anecdotes and remembrance are adulatory. Author has set out to unravel the pieces that make up the enigma of Dhoni but one must say he has only partially succeeded.

Recollecting, One can say, 

Dhoni had a set of things to be done in the mind very early and set out to do the same in a studious unique hardworking fashion without letting the feedbacks and Validation very much affect him.

He seems more of a humble doer even calibrates as much to celebrate the best of his achievements in an understated manner.

He has tremendous knowledge about the things that interest him and he keeps himself updated with keen observation.

He doesn't declare anywhere that he is the Leader but shows the way in such a fashion that those under him readily understand that he is a Leader and Naturally align to him without much words spoken.


Friday, October 10, 2025

Tejo Tungabhadra

Novel is translated in very elegant easy prose, so easy I thought will it it turn out to be one of those template novels. Thankfully it is not. Novel has certain degree of depth.


Material awareness exhibited through out the novel makes the novel trustworthy. Historical Persons and Historical events finds their place in the novel seamlessly without any desparation. Ordinary common lives intersect with historical events and Famous Persons. Ordinary common people had to bear the prison of times they had lived and we get a lively moving story happening during the early part of the sixteenth century. Many tiny details educate and surprise us throughout the course of the novel.

Though prisoners of time, Novel s Lead characters exhibit extraordinary common sense and the conversations teem with sufficient philosophical moorings on Life as a whole. Each common man has his own struggle and their view of life which gets articulated as the novel marches back and forth from portugal, From across the seas to Indian coasts and Vijayanagara Empire and beyond.

Qualms, yes, Novel lacks overarching vision or subtext. Tyranny of Business and Religion across vastly different regions gets overstated whereas the Love Story Strand meets a Meek end.

Good Read.


Sunday, September 21, 2025

Saturday, August 16, 2025

Coolie

 


A Hero from the past,

Living in the simplest of Empires,

Amongst his forgotten Soldiers.

A Distress call from distant lands

Memories of Lifetime spring back.

Hand from the past bids us to into 

The World of Our Hero, 

His Tropes and Our Day Dreams Completing each other.


From the annals of their Sufferings 

To Face the rich 

A Gallant Parable of the Poor

Repeats and goes like this

"Rich Strand the poor with their deceit

 Unsurmountable Suffering 

Finds its way out with Belligerent Bravery

An Act of Desperate Violence 

Warning call to the Rich, 

A Momentary assertion

Of Poor Man's Fiefdom.

Each year a Show where

Rich lick their wounds 

Poor its day dreams"


Many Promises to Many Friends

Many Revenges for the near and dear

Many Sacrifices Many Sermons

Many Jokes and Many Dance Steps

Reel and Real fling each other 

These verses of Stone.

With those etchings of the past

We Arrive at Today.


Where,

Bad is the Rich 

Rich is the Power

Power is the Virtue 

Virtue is the Burden 

Good help the Bad

To wipe out the Meek and Wronged

Rich mix the Good 

With the Bad to enjoy

The fruits of both.

A Dichotomy Long gone,

Poor can chose to be 

An Ant or A Fly or A Rat 

They grope into the Oblivion,

Waiting for the Rich to haul them

Into Many pools of horrific choices.


In This,

Real hero is one who tries 

To disentangle himself 

From the mesh of the Rich and the Bad

So tightly woven around his Daily Bread.

He looks up the Screen for a Solace,

To see His Hero warn at the Neo Rich

Using his same Older Wit,

Words Unchanged across decades

Tribute or a Farce

Sighs and Believes,

Sighs and Disbelieves 

Garnish this Thoroughly Beautiful Spectacle

An Aesthete's Delight which

Shines like a Tribute

Repeats like a Farce.

Tuesday, August 12, 2025

பால்சாக்

பால்சாக்கின் இரண்டு கதைகள்

நாத்திகனின் பிரார்த்தனை மற்றும் விடுபட்டவன்

வம்சி வெளியீடு , பிரவீன் துளசி மொழிபெயர்ப்பு 

மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதைகள், மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமைந்த கதைகள். 

இறை உணர்வின் அத்தனை தளங்களையும் "நாத்திகனின் பிரார்த்தனை" தொட்டு செல்கிறது என்றால் உயிர் வாழ்தலின் அத்தனை தளங்களையும் தொட்டு செல்லும் கதை "விடுபட்டவன்"

மீண்டும் மீண்டும் நினைவு கூற , பகிர்ந்து உரைக்க தூண்டும் சிறந்த கதைகள் இவை.

City of Djinns - Delhi

 


Sunday, July 13, 2025

Diary Of A Malayali Madman

 


Five Stories - Wild Goat , Tender Coconut, Pigman, Invisible Forests, Diary of a Malayali Mad Man.

Impactful stories create a empathetic view of the less understood. Gives ample space for the unheard voices without adding much drama and analytical perspective. 

Most of the stories unravel as a Monologue and especially as a Diary of Monologues providing us a intriguing read also at times exhausting. Days and nights of the protoganists unravel before us in a sedentary fashion. End of each story reader is fully acclimatized to the surroundings of the protoganists and have a complete rounded view of the protoganists psyche. Stories suspend the analytical judgment on the less understood and avoid drama. Through these stories one feels the fringe have been heard in a neutral and non judgemental fashion.

Wild goat bleats reminding us of the predicament of unheard voices. Tender coconut juxtapose the endless vagaries of psychological knots mind prepares, Pigman rests it's shoulders on Poor man's Soliloquy. Invisible forests, biggest story of all, unravel the forests of words infront of us carrying the pain of indescribable loneliness of the protagonist. Title Story's ending was very poignant, reflects on the centuries of Mental journey mankind has made. 

Good Translation.