நாம் ஆற்றலின் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அதே அளவு தியாக உணர்வுக்கும் இடம் இருக்கிறது என்றுணர்த்திய நாவல் ,
எல்லை கடந்தால் ஆற்றல் ஆணவமாகலாம், தியாகம் எல்லை கடந்தால் தன்னிரக்கம் மற்றும் வெறுப்பை தூண்டலாம். ஆனால் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் எல்லைகளை வகுப்பது மானிடனே, இறைவனின் சித்தத்தில் இவற்றுக்கு எல்லை இல்லை.
அளவிட முடியாத பிரபஞ்ச ஆற்றல் எல்லையில்லாத தியாக உணர்வு. சக்தி Vs சிலுவை என்னும் கருத்தாக்கங்களின் நடன மேடை பால் வான் ஹேய்ஸெ எழுதியுள்ள "காளி" என்னும் இந்தப் புதினம். கநாசு வின் நல்ல மொழிபெயர்ப்பு.
மனிதனின் பார்வையை மட்டுமே கணக்கில் கொள்வோமானால் அளவு கடந்த ஆற்றல் சில நேரங்களில் துயர விளைவுகளை ஏற்படுத்தும், அவ்விளைவுகளை கண்டு ஏற்படும் குற்றவுணர்வு, அக்குற்றத்தை சுமக்கும் சிலுவையாக மனதை மாற்றும். இது ஒரு புறம் இருக்க தன் தவறுகளை உணர்ந்த அளவில்லாத ஆற்றல் குற்றவுணர்வை காலத்தின் பாரத்தை சுமக்காது தன்னம்பிக்கை குறையாது தொடர்ந்து வாழ்வை நடத்தி செல்லும்.

No comments:
Post a Comment