Sunday, April 23, 2023

விடுதலை - அசோகமித்திரன்

அசோகமித்திரன் கதைகளில் ஆன்மீகம்

ஒரு வேட்கையின் குறிப்புகள் போல , லௌகீக சகவாசம் விடுத்து, சேவை மனப்பான்மை வளர்த்து, பந்த பாசம் அறுத்து, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , முன் திட்டங்கள் இன்றி பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் பரசுராமைய்யர் அவர்களின் கதை 'விடுதலை'. சூழ்நிலை, காலமாற்றம், தாங்க முடியாத இழப்புகள் எல்லோரையும் பரசுராமைய்யர் போல மாற்றுமா ? பிரபஞ்சத்திடம் சேர்க்குமா ? "எது அவசியம் , தனக்கு எல்லா அவசியங்களும் போய் விட்டன , ஜலத்திவலைகள் கவனத்திற்கு வருகின்றன, அதனால் அவை மட்டும் தான் அவசியம், எவ்வளவு ஆனந்தமான விடுதலை !". கதையின் முடிவில் முற்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் ஆத்மானந்தர் வாக்கின் சாயலை ஒத்த, கடற்கரையோரம், அற்புதமான முடிவு கொண்ட குறு நாவல்.JK வில் தொடங்கி ஆத்மானந்தரில் முடியும் கதை.


ஆன்மீக உறுதி வாய்த்த சுவாமிநாதன் கடைசி வரை விஷயங்களை நம்பக்கூடிய வல்லமையை பெற்றானா ? 

எது பெரிய தவறு ? வேலையின்றி சோம்பலாக இருப்பதா ? அல்லது லஞ்சம் கொழுத்து  பணம் சேர்ப்பதா ?தகப்பன் தவறுகள் உறுத்த, தட்டிக்கேட்கும் சங்கரன், சொகுசு  போய் விடும் பயத்தில் வீடு திரும்புதல்,சொகுசை விட்டுக்கொடுக்கும் மனோதிடம் எல்லோருக்கும் வாய்க்குமா ? 'உயர உயர,குளிர் குளிர் என்னும் வாழ்க்கையை சமாளிக்க கோட்டு என்னும் லௌகீகம் தேவைப்படுகையில் மலை இறங்க இறங்க போர்த்திய ஆடைகள் துறக்க துறக்க விடுதலை'.

தொடர்ந்து, அமைதியாகவும், தன்னலமின்றியும், கோபப்படாமல்  விடாமுயற்சியுடனும், முன்திட்டங்கள் இன்றி, கண்ணியத்துடனும் வாழ்வது, எவ்வளவு கடினம் என்று இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இப்படி இருப்பதை ஆன்மீகம் என்று கூறலாம். அவ்வான்மீக  வேட்கையின் பொருட்டு, சூழலையும், செல்வத்தையும், சொகுசையும் உதறுதல் அத்தனை எளிதா என்ன ? 

விடுதலை என்றும் எளிதான பொறுப்பு துறப்பு ஆகாது. அப்படி இருப்பது போல் தோன்றக்கூடியது. விடுதலை கடினமானது, முன்பின் ஒருவர் அறியாதது.அதுவாய் தகைவது , தினக்கடமைகளை கோருவது, திடீரென புலப்பட்டு மறைவது. நாம் அதுவே ஆகும் வரை இழுத்து செல்வது.அத்தனை அலைக்கழிப்பின் சுடரென அமைவது.

---

நான்கு கதைகள்  கொண்ட தொகுப்பு கதைகள் குறித்த குறிப்புகள்

விடுதலை - குமாஸ்தா பரசுராமைய்யர் , பம்பீனா , JK,சேரி, மகள் ஜயம் காணாமல் போதல், கண்ணுசிங் , முருகையன், , சிவஸ்வாமி ஐயர், டெபுடி , எம் டி, சரோஜா,பாபு,அப்துல் காதர்.

விடுதலை கதையின் அரசியல் குறியீடுகள் - ஜயத்தை தொலைக்கும் பிராமண சமூகம், எங்கிருந்தோ வந்த கண்ணுசிங் எழுதும் அர்ஜுனன் தபசு பாடல், இங்கேயே இருக்கும் முருகையன், கீழ்தட்டு மக்களாக பம்பீனா அந்தோணி. கடற்கரை,தமிழக மக்களின் குறுக்கு வெட்டு தோற்றம்.

இன்னும் சில நாட்கள்

வைத்திலிங்கம் - சீடன் சுவாமிநாதன்,  மாரிமுத்து, உலோக தகடு , தங்கம் வைத்திலிங்கம் குடும்பத்தார் ஊர் காலி செய்தல், சுவாமிநாதன் நாடி ஜோசியம், ஜோசியரின் நாட்கணக்கு தவறாகுதல், இன்னும் முடியப்பெற்றால்....

விழா - டல்பதடோ கம்போலியா திரைப்பட விழா profடப்லி சில்வியா ராணுவ ஒப்பந்தம் திரைப்படத்திற்கு முதல் பரிசு, திரைப்படம் விற்க டல்பதடோ முயற்சிகள்

தலைமுறைகள் - சங்கரன் , சங்கரன் அப்பா  சண்டை , சங்கரன் வெளியேறுதல் , பழனிசாமி ஊட்டி , சங்கரன் வீடு திரும்புதல். இந்திரா எமெர்ஜென்சி காலகட்டதில் நடக்கும் கதை.

Friday, April 21, 2023

கதீட்ரல் - தூயன்

கதீட்ரல் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியது, வெகு நாளைக்கு பிறகு என்னால் ஒரே நாளில் வாசித்து முடிக்க முடிந்த நாவல், கதையின் இழைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயல்பாக மலர்ந்துள்ளன. 


மனம் அறிதலின் பத்து வாயில்களில் ஒன்று (ஹெச் எஸ் சிவபிரகாஷ் )  அந்த மனதின் எல்லைகளை அறிய விழையும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கண்டடையும் விஷயங்கள் ஏற்கனவே இங்குள்ள ஒன்றை துலக்கி தெளிபவை, புதிய ஒன்று என்று தோன்றுவது வார்த்தை சுவர்களின் ஜாலத்திலனாலோ ? எத்தனை வார்த்தைகள் எத்தனை சுவர்கள், எத்தனை யத்தனம் எத்தனை ஆறுதல். 


மனதை நேரத்தாலும் புவியமைப்பாலும் கட்டமைக்க முடியும் என்பதையே கதீட்ரல் காட்டுகிறது , ஒரே நேரத்தில் மிகுந்த இயல்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இரு முனைகளில் இருந்து தோன்றிய எமிலியும் அவந்திகையும் தேடுவதை எளிதாக லேசாக நஞ்சுண்டன் எதிர் கொள்கிறார், தொலைத்து விட்டார். கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வார் " மூத்தோர் ஏதோ ஒரு விவேகத்தால் பெரிதாக எதையும் வரலாறாக பதிவு செய்ய முனையவில்லை என்று " ( நினைவில் இருந்து எழுதுகிறேன் ) , நஞ்சுண்டன் தொலைத்தது குறித்து பெரிதாக வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வருத்தப்பட்டது போல ஆப்ரஹாம்  கதைத்திருந்தாலும். ஆப்ரஹாம் கையில் தான் கதையின் மொத்த சுழற்சியும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுபடல்கள் அவனது தேர்வே. அவந்திகையுடனானஅவனதுகண்ணாடி உரையாடல்கள் வெகு சுவாரஸ்யம். 

நீட்ஷன் கட்டமைக்க விரும்பும் பிரக்ஞை இன்றைய சூழலுக்கு எத்தனை பயங்கரமாக பொருந்துகிறது, வார இறுதி குறித்த இரு வரிகள் மீள மீள யோசிக்க வைத்தது, 

இக்கதையில் தொலைந்த பிரதியை தான்  தாண்டவராயன் கதையில் தேடுகிறோமோ ? நஞ்சுண்டன் சிரிக்கிறார் , அறிவு சிரிஞ்சுகள் பரவலாகாத காலங்களை நினைவூட்டுபவர். பிரதியை தொலைத்தவர், அறிவை அறிவாய் அறியாதவர்.

அறிவுலகின் கதவுகள் அடைக்கப்பட்ட பின் குறுகுறுப்புடன் எட்டிப் பார்க்கும் ஆப்ரஹாம் கையில் கிடைக்காத பிரதி , அதில் ஆர்வமில்லா நஞ்சுண்டனை வந்தடையும் விசித்திரமான கோலங்களை கொண்டது காலம். 

நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய கதீட்ரல.

Saturday, April 15, 2023

திருமுகம்

அறிவு தேட்டம் மிகுந்த விஞ்ஞானி ஒருவர்,அறிவியல் சமன்பாடுகள் மூலம் மனித இருப்பை புரிந்து கொள்ள முனைகிறார். காதல் அவரை என்ன செய்யும் ?

அந்த விஞ்ஞானியின் தடம் பற்றி வரும் சமூகவியல் அறிஞர் கடவுளின் இருப்பை பற்றிய தீராத சந்தேகம் கொண்டவர், தனது ஆய்வின் மூலம் விஞ்ஞானியின் காதலை எப்படி புரிந்து கொண்டார் ? கடவுளை கண்டடைந்தாரா ?



கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும்  நம்பிக்கை  இல்லாதவனுக்குமான உறவு எத்தகையது ?கடவுள் நம்பிக்கைக்கும் காதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா ? 

நோயை குணப்படுத்தும் வல்லமை கடவுளுக்கு இருக்கிறதா ? கடவுளை முழுமையாக புரிந்து கொள்ளும் சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறதா ? 

இவ்விஷயங்களில் மனிதன் தேர்ந்தெடுக்க  கூடிய எளிதான பண்பு "சீர்மை", கடைபிடிக்க கடினமான பண்பு "சீர்மை".

திருமுகம் உணர சீர்மை

சீர்மை நிறைய 

உணர்வோம் திருமுகம் 

இருப்பிலா வாசனையில் திருமுகம்

இருப்பிலா பேரொளியில் திருமுகம்

எண்ணிலா பல்லுயிர்

இறைந்தழைக்கும் திருமுகம் 

பொருளிலா சொற்களில் திருமுகம்

பொருளிலா அழுகையில் திருமுகம்

வன்னிலா மென் ஸ்பரிசத்தில் திருமுகம் 

தானிலா தூய அன்பில் திருமுகம்

வானேகும் பட்டதில் திருமுகம் 

---------


திருமுகம் - ஈரானிய நாவல்

முஸ்தஃபா மஸ்தூர் (ஆசிரியர்), முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான் (தமிழில்)

Sunday, April 09, 2023

The Paradise of Food - Khalid Jawed

A Promise was made in the form of cities, we never knew the details, trusting the city we continue to leave our centuries old schema , continue to leaves our villages, dared to cut off many threads of the schema, chose to remain polite enough being anonymous. 



But the place we left is in complete ruin today, a no chance place, Few dare to return back to ruins, some modify ruins as zones of comfort stay to balance the brazenness of the urban. In first place villages did not entice us much, they have nothing to offer against the never ending universal cities,we can say we have been pushed out but we never wanted to stay , we could have stayed alright. 

Cities are ever new and villages are ever old , selfish modern man thinks like this, never ending city till 40 and some stable unchanging village from 40, but not many can afford this double luxury.

Lot has changed as we moved from villages to cities, especially our food. Food tastes bad every following day in the city, may be its the age you say but it's a symbolic reminder to us that we have embraced the fresh decay of cities , from old ruinous to ephemeral decay ,a slow mover stands no chance in city today.from a crowd we have become a set of numb individuals esp on food front, food has been an occasional wonder in the cities.

Novel deals with Self absorbed individual and brilliantly establishes that fight is between the intestines at fundamental level and the way novel delineates how individual scourges up everyday food to sustain himself, sustain his passions makes it a unique read.

Novel s subtext is more heavier, a story of an individual moving from a bustling village home to a solitudinal clerical home at surface level,a story of changing times following the footsteps of Politics of Independent India,it is also a story about how fundamentalism has replaced faith in a pompous manner. It is also a story about the guilt trip of an individual severing from the past.Story of a recurring premonition which announces itself uninviting.

Situation has ripened, we have liberal states all over the world securing economics of comfort,conformed, busy, incomplete living thereby sowing seeds for the grand return of religion promising pure, peaceful, heroic sense of completeness. 

In a village we jointly suffer but in cities we suffer individually. We have to make our choice between returning to ruins against embracing fresh decay.Novel's final image poignantly tells us a tale. 

Good Novel , Extraordinary in parts.