Sunday, April 23, 2023

விடுதலை - அசோகமித்திரன்

அசோகமித்திரன் கதைகளில் ஆன்மீகம்

ஒரு வேட்கையின் குறிப்புகள் போல , லௌகீக சகவாசம் விடுத்து, சேவை மனப்பான்மை வளர்த்து, பந்த பாசம் அறுத்து, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , முன் திட்டங்கள் இன்றி பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் பரசுராமைய்யர் அவர்களின் கதை 'விடுதலை'. சூழ்நிலை, காலமாற்றம், தாங்க முடியாத இழப்புகள் எல்லோரையும் பரசுராமைய்யர் போல மாற்றுமா ? பிரபஞ்சத்திடம் சேர்க்குமா ? "எது அவசியம் , தனக்கு எல்லா அவசியங்களும் போய் விட்டன , ஜலத்திவலைகள் கவனத்திற்கு வருகின்றன, அதனால் அவை மட்டும் தான் அவசியம், எவ்வளவு ஆனந்தமான விடுதலை !". கதையின் முடிவில் முற்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் ஆத்மானந்தர் வாக்கின் சாயலை ஒத்த, கடற்கரையோரம், அற்புதமான முடிவு கொண்ட குறு நாவல்.JK வில் தொடங்கி ஆத்மானந்தரில் முடியும் கதை.


ஆன்மீக உறுதி வாய்த்த சுவாமிநாதன் கடைசி வரை விஷயங்களை நம்பக்கூடிய வல்லமையை பெற்றானா ? 

எது பெரிய தவறு ? வேலையின்றி சோம்பலாக இருப்பதா ? அல்லது லஞ்சம் கொழுத்து  பணம் சேர்ப்பதா ?தகப்பன் தவறுகள் உறுத்த, தட்டிக்கேட்கும் சங்கரன், சொகுசு  போய் விடும் பயத்தில் வீடு திரும்புதல்,சொகுசை விட்டுக்கொடுக்கும் மனோதிடம் எல்லோருக்கும் வாய்க்குமா ? 'உயர உயர,குளிர் குளிர் என்னும் வாழ்க்கையை சமாளிக்க கோட்டு என்னும் லௌகீகம் தேவைப்படுகையில் மலை இறங்க இறங்க போர்த்திய ஆடைகள் துறக்க துறக்க விடுதலை'.

தொடர்ந்து, அமைதியாகவும், தன்னலமின்றியும், கோபப்படாமல்  விடாமுயற்சியுடனும், முன்திட்டங்கள் இன்றி, கண்ணியத்துடனும் வாழ்வது, எவ்வளவு கடினம் என்று இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இப்படி இருப்பதை ஆன்மீகம் என்று கூறலாம். அவ்வான்மீக  வேட்கையின் பொருட்டு, சூழலையும், செல்வத்தையும், சொகுசையும் உதறுதல் அத்தனை எளிதா என்ன ? 

விடுதலை என்றும் எளிதான பொறுப்பு துறப்பு ஆகாது. அப்படி இருப்பது போல் தோன்றக்கூடியது. விடுதலை கடினமானது, முன்பின் ஒருவர் அறியாதது.அதுவாய் தகைவது , தினக்கடமைகளை கோருவது, திடீரென புலப்பட்டு மறைவது. நாம் அதுவே ஆகும் வரை இழுத்து செல்வது.அத்தனை அலைக்கழிப்பின் சுடரென அமைவது.

---

நான்கு கதைகள்  கொண்ட தொகுப்பு கதைகள் குறித்த குறிப்புகள்

விடுதலை - குமாஸ்தா பரசுராமைய்யர் , பம்பீனா , JK,சேரி, மகள் ஜயம் காணாமல் போதல், கண்ணுசிங் , முருகையன், , சிவஸ்வாமி ஐயர், டெபுடி , எம் டி, சரோஜா,பாபு,அப்துல் காதர்.

விடுதலை கதையின் அரசியல் குறியீடுகள் - ஜயத்தை தொலைக்கும் பிராமண சமூகம், எங்கிருந்தோ வந்த கண்ணுசிங் எழுதும் அர்ஜுனன் தபசு பாடல், இங்கேயே இருக்கும் முருகையன், கீழ்தட்டு மக்களாக பம்பீனா அந்தோணி. கடற்கரை,தமிழக மக்களின் குறுக்கு வெட்டு தோற்றம்.

இன்னும் சில நாட்கள்

வைத்திலிங்கம் - சீடன் சுவாமிநாதன்,  மாரிமுத்து, உலோக தகடு , தங்கம் வைத்திலிங்கம் குடும்பத்தார் ஊர் காலி செய்தல், சுவாமிநாதன் நாடி ஜோசியம், ஜோசியரின் நாட்கணக்கு தவறாகுதல், இன்னும் முடியப்பெற்றால்....

விழா - டல்பதடோ கம்போலியா திரைப்பட விழா profடப்லி சில்வியா ராணுவ ஒப்பந்தம் திரைப்படத்திற்கு முதல் பரிசு, திரைப்படம் விற்க டல்பதடோ முயற்சிகள்

தலைமுறைகள் - சங்கரன் , சங்கரன் அப்பா  சண்டை , சங்கரன் வெளியேறுதல் , பழனிசாமி ஊட்டி , சங்கரன் வீடு திரும்புதல். இந்திரா எமெர்ஜென்சி காலகட்டதில் நடக்கும் கதை.

No comments: