அறிவு தேட்டம் மிகுந்த விஞ்ஞானி ஒருவர்,அறிவியல் சமன்பாடுகள் மூலம் மனித இருப்பை புரிந்து கொள்ள முனைகிறார். காதல் அவரை என்ன செய்யும் ?
அந்த விஞ்ஞானியின் தடம் பற்றி வரும் சமூகவியல் அறிஞர் கடவுளின் இருப்பை பற்றிய தீராத சந்தேகம் கொண்டவர், தனது ஆய்வின் மூலம் விஞ்ஞானியின் காதலை எப்படி புரிந்து கொண்டார் ? கடவுளை கண்டடைந்தாரா ?
கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் நம்பிக்கை இல்லாதவனுக்குமான உறவு எத்தகையது ?கடவுள் நம்பிக்கைக்கும் காதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா ?
நோயை குணப்படுத்தும் வல்லமை கடவுளுக்கு இருக்கிறதா ? கடவுளை முழுமையாக புரிந்து கொள்ளும் சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறதா ?
இவ்விஷயங்களில் மனிதன் தேர்ந்தெடுக்க கூடிய எளிதான பண்பு "சீர்மை", கடைபிடிக்க கடினமான பண்பு "சீர்மை".
திருமுகம் உணர சீர்மை
சீர்மை நிறைய
உணர்வோம் திருமுகம்
இருப்பிலா வாசனையில் திருமுகம்
இருப்பிலா பேரொளியில் திருமுகம்
எண்ணிலா பல்லுயிர்
இறைந்தழைக்கும் திருமுகம்
பொருளிலா சொற்களில் திருமுகம்
பொருளிலா அழுகையில் திருமுகம்
வன்னிலா மென் ஸ்பரிசத்தில் திருமுகம்
தானிலா தூய அன்பில் திருமுகம்
வானேகும் பட்டதில் திருமுகம்
---------
திருமுகம் - ஈரானிய நாவல்
முஸ்தஃபா மஸ்தூர் (ஆசிரியர்), முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான் (தமிழில்)
No comments:
Post a Comment