குடும்பத்திலிருந்து பிய்த்து கொண்டு போகும் முனைப்பு, அந்த முனைப்பின் எல்லையில் துறவற ஆசை. அவ்வாசை என்பது பொறுப்பில் இருந்தும் பிடுங்கல்கள் இருந்தும் விடுபட நாம் ஏங்கும் வெறும் 'தப்பித்தல்' என்றும், நம் சுயநலத்தின் தைரியமின்மையின் இன்னொரு முகம் என்று புரிய தொடங்குகையில், தினசரி செக்கு வாழ்க்கை அளிக்கும் சலிப்பு தெளிந்து தெரிய வரும். வெறும் பார்வையாளனாகி, அந்த சலிப்பு நம்மை கொண்டு செல்லும் இடம் எது என்று அறிய முயன்றால் ..
சலிப்பின் சாரத்தை விவேகமாய் உணர்ந்து, சலிப்பை வெல்ல, மீண்டும் மீண்டும் உணர்ந்த முழுவதையும் சொற்கள் வழி சாராம்ச படுத்த முனைந்து, கச்சிதமாக சொல்வழி சாராம்சபடுத்துவதில் தேர்ச்சிப் பெற்று, அந்த சொற்களின் வழியில் "செட்டில்" ஆவதை வெறுத்து, புலப்படாத பெரிய நிகழ்வுகளை எதிர் கொள்ளும் விதமாய் நடக்கும் சிறிய செயல்களை மலர்ச்சியுடன் தினம் நாடும் ஒருவனாய் திகழ வாய்க்குமோ ?
No comments:
Post a Comment