Friday, May 17, 2024

வெள்ளைப் பல்லி விவகாரம்

இந்தக் கதை ஏன் பிடித்திருந்தது ?




தெளிவான நிச்சயமான அவதானிப்புகளும், அனுமானங்களும், அவற்றை குறித்த அறிவும் , அந்த அறிவு அளிக்கும் நிதானமும், அந்த அறிவின்  எல்லையையும் மதிப்பையும் உணர்ந்த மனதின் வெளிப்பாடாக அமைந்த நடை.


தெளிவான வடிவம் கொண்ட கதை, எளிதில் மீண்டும் நினைவு கொள்ள ஏதுவாக அமைந்த காத்திரமான சம்பவங்களும் சுவாரசியமான உரையாடல்களும் அமைந்த கதை.


இத்தனை விழிப்புடனும் அந்த விழிப்பின் அறிவுடனும்அமைந்த கதை நாயகன் தன் அகத்தையும் புறத்தையும் ஒரு சேர அறிய வாய்ப்பாக அமைந்த கதை.


பெரிய ஜோடனைகள் இல்லாமல் நேரடியான சொற்றொடர்கள் அமைந்த கதை, அந்த சொற்றொடர்கள் அளிக்கும் அர்த்ததின் வலிமையை நம்பி மட்டும், அவ்வர்தத்தின் ஆழமான பொருளை மட்டுமே நம்பி எழுதப்பட்ட வாக்கியங்கள் நிரம்பிய கதை.


நம் வாழ்வின் பொருளாய், முக்கியமான செய்கையாய், கண்ட மற்றும் அறிந்த எல்லாவற்றையும், ஒன்றோடு ஒன்று, மனம் போனபடி இணைத்து,வாழ்வை ஒரு எதிர்வினையாய் தற்காப்பாய் அமைத்து கொள்ள முனையும் ஒரு முயற்சி இந்த கதை.


அமைப்பு குறித்தும் தன்னிச்சை குறித்தும் மேலோட்டமான இருமையை மட்டும் முன்வைக்காது, அமைப்பின் பன்முகங்களை அறியும் விதமான உரையாடல்களும், தன்னிச்சையின் தணிக்கை இடாத விருப்பங்கள் நிறைந்த உரையாடல்களும் அமைந்த கதை.


கனவில் வருவது நனவில் தோன்ற நடப்பது கனவா நினைவா என்று  வாசகன் மயங்கும் வகையில் அமைந்த கதை.


முடிந்த வரை அறிவை தவிர்க்க முனையும் ஒரு விழிப்பு மனதின் கதை.


வாழ்க்கையில் நீங்கள் திட்டமிட்ட அல்லது உங்களுக்கு அமையப்பெற்ற வேடம் இந்நான்கில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது- அப்பாவி , தீவிரவாதி, விசுவாசி,நாகரீகன். வெவ்வேறு தருணங்களில் இந்த வேடங்களை மாறி மாறி புனையும் நாம் ஏதேனும் ஒற்றை வேடத்துடன் பெரும்பாலும் பொருந்தி போகவும் செய்வோம்.அவ்வேடங்களின் கதையும் இது.



No comments: