காசு கஞ்சி குப்பாயம் கள் காமம் என பிரித்து எழுதப்பட்ட சுயசரிதை நினைவு குறிப்புகள். இவ்வாறு பிரித்து இருப்பது நல்லது என்று படுகிறது . ஒன்றின் வழி இன்னொன்று வரும் என்றாலும் அடிப்படையில் இவை வெவ்வேறானவை, ஒன்றை இன்னொன்று நிரப்ப முயன்றாலும் நிரம்பாத ஒன்று நிரம்பாது நிற்கும்.
எம் டி இவற்றை அணுகிய விதத்தில் நாம் கற்று கொள்ள வேண்டியவை,
- கடும் பற்றாக்குறை நிலவிய தருணங்களில் நாம் வெளிபடுத்த வேண்டிய பெருந்தன்மை,
-மிஞ்சி கிடைப்பவற்றுள் அமைந்த தேர்வும் ரசனையும் நாமே அமைக்க வேண்டிய பாதையாக தான் இருக்க வேண்டும்,
-மிக குறைவான தேவைகளுடன் நாம் வாழ்ந்து விட முடியும், நாம் செய்ய நினைக்கும் செயலின் ஊக்கத்தில் முழுகியிருப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது - ஏனையவை காலத்தின் கைகளில் இருக்கும்.கிடைத்த அறைகளில் தங்கி எழுதி கொண்டிருக்கும் எம் டி யின் சித்திரம் என்றும் மனதில் நிற்கும்.
காமம் குறித்த நினைவு குறிப்புகள் இந்த புத்தகத்தில் அநேகம் இல்லை.
No comments:
Post a Comment