குடும்ப விஷயங்களில் உடலை புறந்தள்ளி, கணவன்-மனைவி, அம்மா, சகோதரர், சுற்றம் இவர்களின் மன ஓட்டத்திற்கு மதிப்பளிக்கும் அம்மதிப்புகளின் வழி உருவாகும் இன்ப லாகிரிகளை மேம்படுத்திக் கூறும் படைப்பு.
குறியீட்டு ரீதியாக சுதந்திர இந்தியாவின் நிலையை புரிந்து கொள்ளும் விதமாக, இந்தியாவில் ஒரு கால் , வெளிநாட்டில் மறு கால் என்னும் இன்றிருக்கும் நிலையின் பூர்வ வடிவமாய் கதையின் மைய முடிச்சு இருக்கிறது.அந்நிய நிதியை, அந்நிய விஷயங்களை ஏற்றுக் கொள்ள அந்நாட்களில் உண்டான தயக்கம், குற்றவுணர்வு, வெறுப்பு குறித்த கோணங்களையும் நாவலை வாசிக்கையில் நாம் உணரலாம்.
இந்த சஞ்சலங்களுக்கு அப்பால் உள்ள உலகில் இருவர் நாவலில் இடம் பெறுகின்றனர். ஒரு வேளை அவ்விருவரும் தான் இந்தியா என்றவுடன் மனதில் தோன்றும் படிமங்களாக நாம் கருத வாய்ப்புள்ளவர்கள். சளைக்காத கிருஹஸ்தனும் சிரித்துக் கொண்டே இருக்கும் சந்நியாசியுமே அவ்விருவர்கள்.