Saturday, December 27, 2025

உச்சை

 


உச்சை சிறுகதை தொகுப்பு வாசித்தேன். 

அனைத்து கதைகளிலும் பொது விஷயமாக அமைந்திருப்பதாக நான் கருதுவது, நம் தர்க்கங்கள், அனுபவங்கள், புலன்கள், சொற்கள் இவற்றால் முடிந்த வரை முயன்றாலும்

நம்மால் எப்போதும் ஒரு விஷயத்தை, ஒரு நபரை முற்றிலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதையே இந்தக் கதைகள் கூற முற்படுகின்றன.

நம் விளக்கங்கள் சில நேரங்களில் புதிர்களை வாய்ப்பாடாக மாற்றும் வல்லமை கொண்டதாக மாறி விடுகின்றன. நிறைய நேரங்களில் புதிர்களே விளக்கங்களை விட வாசகனுக்கு போதுமானதாக இருக்கின்றன.

உச்சை, சியர்ஸ் மற்றும் ஒலிப்பேழை நல்ல கதைகளாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்.

ஏனைய கதைகளை விட இந்தக் கதைகள் சற்றே நெகிழ்வாகவும் புதிரானதாகவும் அமைந்து இருக்கின்றன. அனைத்து கதைகளும் நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கின என்றாலும் இம்மூன்று கதைகளும் வாசகன் அமர இடம் அளிக்கின்றன.

No comments: