Monday, May 30, 2022

கடலோரக் குருவிகள்- பாலகுமாரன்

கடலோரக் குருவிகள்- பாலகுமாரன் அவர்கள் எழுதி 1995ல் வெளி வந்துள்ள நாவல் - ஒரே நாளில் வாசித்து விடலாம். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சிறுவாணி வாசகர் மையம் மீண்டும் வெளியிட்டுள்ளது. 


நாவலில் பாலகுமாரன் முத்திரை புலப்படும் கீழ்கண்ட இடங்களை ரசித்து மனம் ஒன்றி வாசித்தேன்

முதல் முறை மாதவன் தன் சட்டைப்பையில் நானூறு ரூபாய் வந்தவுடன் மகிழும் தருணங்கள்,

தன்னிச்சையான சுதந்திரமான செயல்பாட்டின் விளைவாக தவிர்க்க முடியாது அமைந்து விட்ட தனிமையின்  உணர்வை ,"உனக்கு நீ மட்டும் தான் என்று "கிணற்றடியில் அழுகையில் மாதவன் உணரும் போது.மாதவனின் தந்தை மகனிடம் கேட்கும் இரு கேள்விகள். 

"மனதையே உற்றுப் பார்" என்ற தந்தையின் உபதேசத்தின் பின்னணியில்,  பயணம் தொடங்குகையில்,ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் மனதின் குரங்காட்ட வரிகளை வாசிக்கையில்,

பெரிய வீட்டில் இரண்டாம் நுழைகையில் துள்ளி வரும் இரு டாபர்மேன் நாய்கள் குறித்த சம்பவம்.

மீனாட்சி தகப்பனார் குமாஸ்தா வேலை குறித்து பிரஸ்தாபிக்கும் இடங்கள்,தேவர் மாதவன் சம்பாஷணை வரும் சிறிய அபாரமான அத்தியாயம், 

மாதவன் தந்தையின் கீதோபதேசம்- கடவுள் பக்தி- கர்வம் தவிர்- எல்லோரும் ஒன்று - எல்லாரும் கர்ப்பிணி-  மரணம்- இடையறாத அன்பு - கடலோரக் குருவிகள் என்ற உருவகக் கதை.

மனதுடனோ எதிரில் இருப்பவருடனோ கேள்வி,பதில் சம்பாஷனைகள் என நகரும் நாவல். 

சமூகம் விதித்துள்ள எல்லைக்கோடுகளை மீறத் துடிப்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விகளுக்கு,  பழையதின் மண்ணில் ஊன்றி விட்ட  பெருமரத்தின் அடியில் அமர்ந்தபடி, எல்லைகளைத் தாண்டாத  சிலர்,  பதில் அளித்த வண்ணம் உள்ளனர்.

No comments: