Saturday, May 07, 2022

நான் கண்ட மகாத்மா - தி சு அவினாசிலிங்கம்

நான் கண்ட மகாத்மா - தி சு அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய காந்தி குறித்த நினைவுக்குறிப்புகள். காந்தி தலைமையில், லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வெழுச்சி பெற்றுத்தந்த இந்திய விடுதலைப் போராட்டத்தின் நேரடி ஆவணம்.  இந்திய சுதந்திர போராட்ட களத்தில் புயலென நுழைந்த காந்தி என்னும் காந்த மாய சக்தியை வார்த்தைகளில் விவரிக்க முயலும் முயற்சி. தண்டி யாத்திரை தொடங்கி ஜனவரி 30 வரை, காந்தி மேற்கொண்ட எண்ணற்ற போராட்டங்களின் அரசியல் வியுகங்களின்,கொள்கை நிலைப்பாட்டின் மீது உரிய வெளிச்சம் பாய்ச்சும் நூல். தற்சுட்டும் ஆன்மீகப் பாதையில் தனி மனிதனும் தேசமும் நடக்க, சுயராஜ்யம் உடன் பெண் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் நலன், கல்வி,கிராம பொருளாதாரம் என காந்தி இட்ட ராஜபாட்டை குறித்த குறிப்புகள் அமைந்த நூல், காந்தி என்ற மனிதரை நெருங்கி அறிந்த அவினாசிலிங்கம் அளிக்கும் தனிப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களும் அமைந்த நினைவோடை. 



பல்வேறு கோணங்களில் காந்தியை நெருங்கி அறிய இந்நூல் ஒரு நல்வாய்ப்பு.அழிசி பதிப்பகம் வெளியீடு.

No comments: