இரு கண்கள் - அன்பின் கனிவின் பாதையை காட்டும் ஒரு கண் , குழந்தைமையின் உற்சாகத்தின் பாதையை காட்டும் இன்னொரு கண்.
சிறு வயதில் நாம் அத்தனை உற்சாகமாக இருந்திருக்கிறோம் அத்தனை ஆற்றலுடன், எந்த ஒரு வேலையையும் ,அத்தனையையும் செய்து முடிக்க முடியும், உலகின் எந்த மூலைக்கும் நம்மால் செல்ல முடியும் என்று எண்ணியிருக்கிறோம்.அத்தனை உற்சாகமாக களங்கமில்லாத ஆற்றலுடன் நாம் இருந்திருக்கிறோம்.. மாலுமிகளின் கதைகளில் உற்சாகத்தையும் வழிப்போக்கர்களின் கதைகளில் கனிவையும் நாம் கற்றோம். விடாது ஊற்றெடுக்கும் நம் கேள்விகளுக்கு மிகுந்த கனிவுடன் பெரியவர்கள் பதிலளித்துக் கொண்டே இருக்கையில் நாமும் பெரியவர்கள் ஆகி விட்டோம். மிகுந்த பொறுப்புடன் கனிவுடன் நாம் வேலைகளை கவனிக்க துவங்கி விட்டோம்.சில நேரங்களில் தகவல்களும் பல நேரங்களில் அலுவல்களும் நம்மை குழப்பினாலும் நாமும் நம்மை விட சிறியவர்களின் கேள்விக்கு மிகுந்த கனிவுடன் பதிலளிக்க துவங்கி விட்டோம். ஒரு கண்ணின் உற்சாக சிமிட்டல்களை நாம் மறக்கவில்லை.. மறு கண்ணில் கனிவுடன் நாம் அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். இரு கண்களின் வழி த்துணை கொண்டு நாம் வாழ்வதே நல்லது என்று இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிகிறது.
நல்ல வரி ஒன்றும் இப்புத்தகத்தில் இருந்தது -" அன்பிற்கு உகந்த எதுவும் சுமையாக இருக்க முடியாது"
---
தமிழில் பூ.சோமசுந்தரம்
நூல்வனம் வெளியீடு
No comments:
Post a Comment