சிவப்பிரகாஷ் அவர்கள் எழுதிய "குரு ", 'பத்து வாயில்கள்' முன்பே வாசித்தது. "அன்றாட யோகி " வாசித்ததும் தோன்றியது..
குரு - பத்து வாயில்கள், திட்டவட்டமான மிகவும் செறிவான உள்ளடக்கம் கொண்ட, ஒரு ஆன்மீக கையேடு போன்ற புத்தகம்.
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களுடைய தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களின் நேரடியான அப்பட்டமான பதிவு. ஆன்மீக சாதனா குறித்தும், அசாதாரண அனுபவங்கள் குறித்தும், குரு சொல்லும் வழியில் செல்வது குறித்தும், குருவுடனான உறவு குறித்த முக்கியத்துவம் குறித்தும், குரு மற்றும் மகான்களின் அற்புத லீலைகள் குறித்தும் கடவுளுடன் உரையாடும் தெய்வ மனிதர்கள் குறித்தும் அமைந்துள்ள புத்தகம்.
குரு, பத்து வாயில்கள் - அனைவருக்குமான தியரி,
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களின் பிராக்டிகல்.

No comments:
Post a Comment