நூற்றாண்டுகளாக நாஞ்சில் நாட்டில் நாடார் X வெள்ளாள சமூகங்கள் இடையே கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றை பின்புலமாக கொண்டு 1940 முதல் 1970 வரை வடக்கன்குளத்தை சார்ந்த ஒரு வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தின் கதையை முன்னிறுத்தி அமைந்திருக்கும் நாவல், நாவல் என்பதை விட கதைக் களஞ்சியம் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். நாவலை வாசித்தப் பிறகு விக்கி யில் கதை நிகழ்வில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்து ஆர்வமுடன் தேட அமைந்த வரிசை இது, Vascoda Gama, Francis Xavier, Galileo, John Britto aka Arulanandar, Roberto De Nobili, Veerama Munivar என்கிற முதல் வரிசை 16,17 மற்றும் 18ஆம் நூற்றாண்டு jesuit மற்றும் வணிக விஷயங்கள். தொடர்ந்து.. ராஜா மார்த்தாண்ட வர்மா dutch படையினரை வென்ற குளச்சல் போர் திருவிதாங்கூர் உருவாக்கம், அதன் பின்னரான dutch lanoi ,நீலகண்ட பிள்ளை, தளவாய் ராமையா, எட்டு வீட்டு பிள்ளைமார் ராஜாங்க ஆட்டங்கள், நீலகண்ட பிள்ளை தேவசகாயம் பிள்ளையாக மாறும் நிகழ்வுகள், தேவசகாயம் பிள்ளையை கொல்ல ராஜா மார்த்தாண்ட வர்மாவின் ஆணை, தேவசகாயம் பிள்ளை கோட்டாறு சேவியர் ஆலயத்தில் நல்லடக்கம் வரையிலான காலகட்டம், தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அய்யா வைகுண்டர் குறித்த குறிப்புகள்... தொடர்ந்து பிரஞ்சு பாதிரி கொணச்சலின் புதிய வழி முறைகள் , சர்ச் பிரிவு சுவர் இடிப்பு,1895ல் நடந்த கழுகுமலை கலவரம், மருமக்கள் வழி முறையை மாற்ற நடைபெறும் முயற்சிகள் , கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ராணி சேது பாய் கால பள்ளிக்கூடங்கள் என தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம் வரையிலான நிகழ்ந்த வரலாற்று பின்புலம், முன்னும் பின்னுமாக கதைகளாக, சம்பவங்களாக நினைவு கூறல்களாக பெரும் பகுதி நாவல் அமைந்துள்ளது.
பெண் உரிமை அல்லது பெண்களின் நிலை, மதத்தில் சாதியின் தாக்கம் இவ்விரு விஷயங்களும் மேற்கூறிய வரலாற்றின் பக்கங்களின் முக்கிய இடங்களை பிடித்ததோர் கதையாடல் நம்மிடையே உள்ளது. இத்தகைய பெரியதொரு பின்புலம் அல்லது வரலாற்று பீடிகை அமைந்த பிறகு இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு தனி வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தில் மேற்கூறிய இரு சரடுகளைப் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது. எவ்வளவு தூரம் விஷயங்கள் மாறியுள்ளன அல்லது மாறவில்லை என்று அறிய இந்தக் குடும்பம் என்னும் சிறிய அலகை ஆராய்கையில் எப்போதும் போல் நிறைய மாறியிருப்பதாக இருப்பினும் எதுவும் மாறாதது போலுமான சித்திரம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment