Tuesday, February 08, 2022

விசாரணை அதிகாரி - The Grand Inquisitor

விசாரணை அதிகாரி - - The Grand Inquisitor , Chapter from Brothers Karamazov

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்களின்  மொழிபெயர்ப்பில் ஆர் சிவகுமார் அவர்களின் செம்மையாக்கத்தில் நூல்வனம் வெளியீடு. 


இரண்டு கடவுள்கள்

எனக்கு அற்புதங்கள் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது, இந்த சிறிய வாழ்வின் அத்தனை அகலமான ஆசைகளும் எப்படியாவது ஒரு நாள் பூர்த்தியாகும் என்று நம்பவே விரும்புகிறன்,  சிறிய ஆசைகளையும் துற என்பவரிடமும் எதேச்சை என்பவரிடமும் கர்மவினை என்பவரிடமும் என்ன பதிலுரைப்பது ?

சர்வ வல்லமை படைத்த ஒருவனை காணுகையில் மனம் மகிழ்கிறது. அவ்வல்லமை கொண்டு அவன் ஆக்குகிறான் என்று ஒரு தரப்பும் அழிக்கிறான் என்று இன்னொரு தரப்பும் சண்டையிடுகின்றனர். ஆனால் ஆக்கலும் அழித்தலும் தாண்டி அவ்வல்லமையின் கொக்கரிப்பு அல்லது அது குறித்த ஜம்பம் ஒன்றே நமக்கு இன்றளவிலும் போதுமான ஒன்றாக இருக்கிறது. சரணாகதி இத்தனை இனிமையாக இருக்கையில் Who wants Freedom என்று பஷீர் கேட்கிறார்.


நம் தேவைகளின் ரகசியம் தெரிந்த ஒருவனே நமக்கு கடவுள் -  உணவு மட்டும் அல்ல நம் மனதின் அத்தனை அபிலாஷைகள், வக்கிரங்கள் ஆட்டம் போட அனுமதிக்கும் கடவுளை நான் வணங்குகிறேன், மனதை அடக்க கூறும் கடவுளை, நற்குணங்களை பட்டியலிடும் கடவுளை தந்திரமாக தவிர்க்கவே விரும்புகிறேன்.


ஆனால்,நினைத்திருந்தால் நிகழ்த்தியிருக்கக் கூடிய அற்புதம், அடைந்திருக்கக் கூடிய அதிகாரம், தேவையான பொருளை அளித்து அடைந்திருக்க கூடிய நிறைவு இம்மூன்றையும் அளிக்காத  கடவுளின் வருகைக்காக ஏதோ ஒரு காரணத்தால் காத்திருக்கிறேன். 


அது வரை, கடவுளின் தூதர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒரு முதியவரை,  சிறிது வெளிச்சம் காட்டிய அந்தக் கிழட்டுக் கடவுளை முத்தமிட்டு மகிழ்கிறேன். 

No comments: