Summer of 92 (Navarasa) உட்பிரதி குறித்து, படம் பார்த்தவர்களுக்கு மட்டும். பெரும்பாலான இடங்களில கண்டிப்பாக சிரிப்பு வரவில்லை, ஆனால் "சிரிக்கிற விஷயம் இல்லை" என்கிற வகையில் படத்தின் உட்பிரதி அமைந்துள்ளது. படத்தின் பல சிதறிய அம்சங்களை குவித்து வைத்து காணவே இந்தப் பதிவு
படத்தின் பீரியட் ,சுதந்திரம் அடைந்த பத்து ஆண்டுகளில் நடப்பது போல் உள்ளது. அதே நேரத்தில் படத்தின் தலைப்பு Summer of 92 என்றும் , யோகியின் அல்லது innocent ன் வெற்றிகள் நிகழும் காலம் என்கிற நினைவும் படம் பார்க்கும் நமக்கு எழுகிறது, இந்த கலவையான கால உணர்வு தலித்துகள் நிலை மற்றும் எழுச்சி பற்றி அறிந்து கொள்ள ஒரு வசதியான திரை ஏற்பாடாக நாம் கருத முடியும்.
படத்தின் நாயகன் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை, ஆனால் பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி, எப்படி தன் பள்ளி படிப்பு தடைப்பட்டது என்றும், படிப்பு அல்லாத காரணங்கள் எப்படி அவனை பள்ளி கல்வியை முடிக்க விடாமல் செய்தது என்றும், படித்து முடித்தாலும் அவனுக்கு அமைய இருக்கும் வேலை மலையக தோட்டத்தின் தொழிலாளர் வேலை என்றும் கூறுகிறான். படிப்பு என்ற ஆயுதத்தின் எல்லை எவ்வாறு மட்டுப்படுத்த படுகிறது கருத இடம் உள்ள சிறிய கண்ணி இது, மேலும் படிப்பை தடுத்து நிறுத்தும் நிகழ்வுகளை " குற்ற பரம்பரை" , "செருப்பு" ," சண்டியரின் நாடக காதல்" என்ற வரிசையில் புரிந்து கொள்ள இடம் இருக்கிறது, இதே வரிசையில் வரும் படத்தின் கடைசிக்காட்சிகள் அமைந்துள்ளன.
வெள்ளைக்கார நாயை விரட்ட நடக்கும் ஒப்பந்தங்கள் - நம் சுதந்திர போராட்ட வரலாற்றை நில மற்றும் கல்வி உடைமை சாதிகளின் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி Vs அடித்தட்டு மக்களின் உணர்வெழுச்சியான பங்கெடுப்பு என்று ஒரு புரிதலுக்காக எளிமையாக வகுக்கலாம், பின்னதே நம் போராட்டத்திற்கான ஆன்ம பலத்தை கொடுத்தது, தங்களால் தனியாக விரட்ட முடியாத வெள்ளைக்காரனை அடித்தட்டு மக்களின் துணை கொண்டு விரட்ட ஏற்பாடானது. அதுவே பல்லாண்டுகளாக இருந்த நிலம் x கல்வி உடைமைவாதிகளின் வேறொரு ஏற்பாட்டின் கீழ்மைகளை, ஊருக்கு வெளியே இருந்து, அதே வெள்ளைக்காரன் வழி நம் வீட்டின் வரவேற்பறைகளுக்கு கொண்டு வந்தது, முன்பே கூறியது போல் இது சிரிக்கும் விஷயம் அல்ல. வைதீகர்கள் உரம் என்றால் சண்டியர் Schrödinger's Cat என்கிறார்.
பல ஆண்டுகள் கடந்தும் இவ்விஷயங்கள் நிலம் x கல்வி உடைமைவாதிகளை தொந்தரவு செய்கிறது. மன்னிப்பின் இடத்தில் முணுமுணுப்பை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment