ஒர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் பகுதி 1 முன் வைத்து -
இந்தியா விடுதலை பெற்றபின் நாடெங்கும் எழுந்த லட்சிய எழுச்சியின் ஒரு முகம் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையின் அசுர வளர்ச்சி, அந்த பின்னணியிலேயே அவரின் எழுத்தின் வெற்றியை அவர் பார்க்கிறார் இந்தப் பெருந்தன்மை நலம். அரசியல் சினிமா இலக்கியம் இம்மூன்றிலும் முத்திரை பதித்தாலும் அமைப்பு சாரா "பொதுக்குரல்" ஜெயகாந்தன். பல்வகை மனிதர்களின் அனுபவங்களின் மனசாட்சியின் திரட்டு இந்தப் "பொதுக்குரல்". பெரு நெறி என்னும் தனிமத சுதந்திரத்தை வலுவாக முன்வைத்த இந்தப் "பொதுக்குரல்", இதன் நீட்சியாக அவர் தனக்காக வகுத்தது "லௌகீகத்திற்கான எல்லை ". இவ்விரண்டு விஷயங்களும் இன்று எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாது வாசகனுக்கும் அவர் விட்டுச் சென்ற ராஜபாட்டை.
No comments:
Post a Comment