Tuesday, March 01, 2022

வியனுலகு வதியும் பெருமலர் - இளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பை முன் வைத்து, 


தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத்  தொடங்குகையில் முதலில் மனதைக்  கவர்வது கவிஞரின் ஆர்ப்பாட்டமான மொழிநவீன கவிதைகளில் இத்தனை ஆர்ப்பாட்டம் பொருந்தாதது என்ற கருத்தும் ஏற்கத்தக்கதேஆனால் அதே நேரத்தில் பாடு பொருளின் தீவிரம் நிகழ்த்தும் பிரவாகம் இவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்இந்த ஆர்ப்பாட்டத்தின்பிரவாகத்தின்  ஓட்டத்தில் வாசகன் கண்டடைய நிறைவு பெறாத " தார்மீக பிரகடனங்கள்" , மௌடீகம் உடையும் "சொற் கோர்வைகள்", தீவிரமான "நிகழ்த்து உருவங்கள்  " அமையப் பெற்ற கவிதைத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது "வியனுலகு வதியும் பெருமலர் ".  

தொகுப்பு ஐந்து பகுதிகளாக 1. பசியின் கதை 2. மரணத்தின் பாடல்கள் 3. பேரன்பின் வேட்டை நிலம் 4. எனும் சொற்கள் 5. நீர்மையின் பிரதிகள் என  பிரிக்கப் பட்டுள்ளதுஐந்து பகுதிகளையும் இணைத்து வாசிக்கையில்,   இத்தொகுதி ஒரு கவிஞனின் அல்லல் மிகு அகப்பயணத்தின் சாட்சியாகவும் அமைந்திருக்கிறது என்றே தோன்றுகிறதுஅதே நேரத்தில் பெரும்பான்மையான கவிதைகள் "எதிரொலி " அல்லது "எதிர் வினை " அம்சம் கூடிய கவிதைகளாக இருக்கின்றனகவிஞரின் எதிர்வினை என்றென்றும் இருக்கும் பசியின் மரணத்தின் போதாமையின் சொற்களாகவும் சமகால நிகழ்வுகளான கொரோனா பேரிடர் விளைவுகள் , தூத்துக்குடி குறித்த கொந்தளிப்பான வரிகளாகவும் அமைந்திருக்கின்றனஇயற்கையில் தவிர்க்க இயலாத பசி மற்றும் மரணம் குறித்த அடிப்படை தொனியில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.

 

பசியின் கதையில் "அவர்கள் செல்கிறார்கள்" கவிதையில்

"பசி போல்

துல்லியமான

ஒரு தத்துவத்தை

ரொட்டி போல்

கருணையுள்ள

ஒரு தலைவனை

உங்களால்

ஏன்

உருவாக்க

இயலவில்லை " 

ஒரு பிரகடனத்தின் நீட்சியாக அதே நேரத்தில்  மிக எளிமையான இக்காரியத்தை இவ்வளவு காலம் கடந்தும்  நம்மால் ஏன் செய்து முடிக்க இயலவில்லை என்ற கேள்வியே கவிதையாக அமைந்திருக்கிறது  -  இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் "நம்மால் " கவிதையில் "உங்களால்" என்று அமைந்திருப்பதையும் துணுக்குற வைக்கும் இவ்வரிகளில் நாம் காண முடியும்.


----

மரணத்தின் பாடல்கள் மிகுந்த நேரடியாக உள்ளன. பாடுபொருளின் உள்ளார்ந்த தீவிரம் கவிதைகளில் வெளிப்படுகிறது -

மரணத்தின் நிமித்தம் குறித்த வரிகளாக

"கரு நீல வண்ண மாத்திரையை

ஒரு நாள் பிரிக்கும்போது

கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது

இப்படித்தான்

இருண்டது ஒரு மரணம்"  (இப்படித்தான்)

 

"பணிக்கு செல்லும் பரபரப்பில் .....

.......

மரணத்தின் லாரி

டீசல் நிரப்பிக் கொண்டிருக்கிறது " ( மரணத்தின் லாரி )

 

"அத்தனை

வாழ்த்துக்கள் கொஞ்சல்கள்

இருக்க இதுவா பலிக்க வேண்டும் " ('அன்னை இட்ட தீ' )

 

மரணம் நிகழ்வதின் சாஸ்வதம் குறித்த பதிவுகளாக, 

“உதிர்ந்த இலையில்

தன் மரணத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

மரம்

குனிந்து

அந்த மரத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

வானம் “ ( 'பார்த்தல்' )

  

"அத்தனை துரிதமாய்

உன்னிடம்

நடந்து வருபவர் யார்

ஒரு கையிலிருந்து

இன்னொரு கைக்கு

மாறுவதற்குள்

ஒரு கனி காயாகி விடுகிறது

துரத்தி வரும் கண்கள்

கல்லாய் சமைய " (கனி )

என்னும் வரிகள் அமைந்திருக்கின்றன.

 

மரணப் பிரிவின் அரற்றலின் உணர்ச்சிகர சித்திரமாய்,

" வெறி கொண்ட ஆண் மந்தி 

.......................................................................

நீர் பாம்புகளைப் பிடித்து

படார் படாரென தரையில் அறைந்து கொல்கிறது " (யம கதை’)

 

அரற்றலின் பின் தொடரும் மரணம் குறித்த புரிதலும் தத்துவமும் அமைதியும் அமையப்பெற்ற வரிகளாக

 

" துக்க வீட்டில்

 ஒவ்வொருவராய்

எழுந்து செல்கிறார்கள்

துக்க வீடும் இறுதியாய்

எழுந்து சென்றது

துக்கம் எழுந்து செல்லும் வரை

காத்திருக்கிறான் புத்தன் " ( புத்தன் )

  

".......

இவன் போன வாரம் தான் அங்க செத்துக்  கிடந்தான்

வாராவாரம் இவனை யாராவது

கொன்னுடறாங்க என்ன கருமமோ என்றார் " (பிணம்)

 

"....

மோபியஸின் பாதை நீள்கிறது

இந்தப் பாதையில் ஊரும்

எத்தனையாவது

எறும்பு இது

என்கிறான் போதிச் சத்துவன்

இந்த எறும்பைச் சுமக்கும்

எத்தனையாவது பாதை

இது என்கிறான் புத்தன் " (மோபியஸ்)

மரணத்தின் இந்தப் பாடல்களில் தனிப்பட்ட மரணம் குறித்த பயங்களோ, அவகாசங்களோ பதிவாகவில்லை - மாறாக மரணம் என்னும் தொடர் நிகழ்வினை பொருள் கொள்ள முயலும் ஒரு விலகல் முயற்சியாக இக்கவிதைகள் இருக்கின்றன.  

-------

 'பேரன்பின் வேட்டை நிலம்' பகுதியின் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் சென்னை நகரவாழ்வின்  சித்திரமாகவும் அவரின் உள்ளார்ந்த செழுமையின்  கற்றலின் கொந்தளிப்பான பயணமாகவும்  அமைந்திருக்கிறது.

"கோயம்பேடு அல்லது கலாப்ரியா வரையாத ஓர் ஓவியம்"  என்னும் கவிதை அளிப்பது  இன்றைய கோயம்பேட்டின் சித்திரம் அதே நேரத்தில் எப்படியோ சில சொற்சேர்கைகளில் ஒரு புராதன சாயல் வந்து விடுகிறதுஅதன் காரணம் " கொள்ளை காலம் இருக்கும்என்று முணுமுணுக்கும் குறுங்காலீஸ்வரர்ரா ? இல்லை  வெளியே எட்டி பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இறங்கி கொள்ளும் சாக்கடைப் பெருச்சாளி"யா  என்று தெரியவில்லை.

பள்ளிகொண்டேஸ்வரம் , பேரன்பின் வேட்டை நிலம்காளிக்கு சொன்னது - இவை மூன்றும் நீண்ட கவிதைகள். பழைய நினைவுகளுடன் இன்றைய யதார்த்தத்தை பொருத்தும்  அல்லது பொருத்தமின்மையை முன்னிறுத்தும் தீவிரமான கவிதைகள் - புராதனத்தின் கதைத் தன்மையும்  இன்றைய நகரத்தின் அவல சித்திரத்தையும் அளிக்க முற்படும் கவிதை " காளிக்கு சொன்னது" - " 

இது உனது நகரம் " "இது உனது நகரம்என்று முடியும் "நகரம்கவிதை சென்னைக்கு பயணப்பட்டு சென்னையை கவிஞர் மனதளவில் ஏற்றுக்கொண்டதன் பிரகடனம். " மகளுக்கு சொன்னதுதமிழின் நெடிய கவிஞர்களின் பன்முகப்பட்ட வரலாறாக நேரடி கவிதையாக அமைந்திருக்கிறது.

-----

 

எனும் சொற்கள்

இப்பகுதியில், 'தோற்றம்என்னும் முதல் கவிதை தொடங்கி  பொதுவாக கவிதைகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான வரைபடம் போல் அடுத்தடுத்த கவிதைகள் வரிசை படுத்தப்பட்டுள்ளனஒவ்வொரு தனி க் கவிதையின் வாசிப்பு இன்பத்தையும் தாண்டி இப்பகுதியின் கவிதைகள் உருவாக்கும் ஒட்டு மொத்த சித்திரம் மிகுந்த தெளிவாக அமைந்திருக்கிறது.

'தோற்றம்', 'நாளைய கவிதை'யில் அடிப்படையான சொற்களில் தொடங்கும் இந்த வரைப்படம்எதற்காக கவிதை எழுத வேண்டும் என்பது குறித்து 'கவிஞன்',  கட்டுக்கு அடங்காத சொற்களின் பிரவாகம் குறித்த 'இரவின் சொற்கள்' , திடீரென பிரவாகம் நிற்க சொற்களுக்குக்கான காத்திருப்பு நீளுகையில் 'அம்மா வந்து விடு','கிணறு', பிறிதொரு கவியின் சொற்களின் இடம் வலம் அரசியலின் வருகையை தெரிவிக்கும் 'எறும்புகள்', நோய்மையின் விகாரம் காட்டும்  'நோய்மையின் சொற்கள்', எழுதப்படாத புதிய கவிதை குறித்த 'இடப்படா முத்தம்', பக்தி குறித்த 'விநோதக் கடவுளின் பக்தன்', பொருள்முதல்வாத கவிதைக்கான எதிரொலியாய் 'ஹோலுப்புக்கு ஒரு கடிதம்'மற்றும் 'உப்பு', தர்க்கத்தின் எதிரொலியாய் 'எறும்புகள்லௌகீகம் குறித்த 'மதிப்பீடு' , இதர படைப்பளிகளுக்கான எதிர் வினைகளாக அமைந்த 'போரும் அமைதியும்', 'ஆத்மநாமை கொலை செய்தவர்கள்', 'போதாதாஎன்று நீண்டு கவிதை உருவாவத்தின் நிகழ்வதின் சித்திரத்தை அளிக்கிறது.

கவிதை உருவாவதன் வழி தவிர்க்க இயலாது கூடவே எழும் 'அழகிய குரூரம்', 'சிதைவுகள்'  'கடுமை', மீண்டும் மீண்டும் சொற்களுக்கான தேடல் நிகழும் 'எனும் சொற்கள்' , உயிர் பெரும் சொற்கள்', 'கல் எறியும் கலை', 'சொற்கள்என்று விரிந்து 'மோசமான கவி'ஞனை 'மோசமான வாசகன்குறித்து முத்தாய்ப்பாய் கூறி வரைபடம் நிறைவு பெறுகிறது.

 

'நீர்மையின் பிரதிகள்' பகுதி கவிஞர் அவரது அர்த்தமுள்ள அலைதலுக்கு பிறகு மெல்ல மீள்வதை கடப்பதை பதிவு செய்கிறது.இப்பகுதியில் தனிப்பட்ட தொனியிலான கவிதைகளே அதிகம் இருக்கின்றன - முன் பகுதிகளில் அமையாத மென் தருணங்கள்தனிப்பட்ட அனுபவ பதிவுகள் இப்பகுதியில் இடம் பெற துவங்குகின்றன.

"ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்த கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல "  ( ஆழ்கடல் மீன்கள்)

 

 பூத்தொடுக்கும் அந்தப்பெண்

சட்டென முகத்திலாடும் ஈயை

விரட்டிய கணம்

சிலையாகித் திரும்புகிறாள்”  ( பழைய நூற்றாண்டு)

 

"தான் கொடுத்த ஆரஞ்சுச்  சுளைகளை

உண்ணாத நாய்க்குட்டியை மிரட்டிக் கொண்டிருந்தாள் " ( குட்டி சிறுமி )

 

"ஒரு பூனைக்கு குட்டியிடம்

அதைக்  கையளித்தேன்

ரகசியம்

இதை பத்திரமாய் வைத்துக்கொள் என்றேன்” ( ரகசியம்)

 

புன்னகைத்தபோது தான் கவனித்தேன்

இரண்டு தங்கப் பற்கள்" ( சிங்கம் )

 

"உச்சி கிளைகளில்

சில பழுத்த இலைகள் உதிர்கின்றன

உயரத்தில்

மிக உயரத்தில்

இரண்டு விண்மீன்கள் உதிர்கின்றன

உதிரவா என்கிறது பூமி

ஆதூரமாய் அவன் தோளைத் தொடுகிறது

ஒரு கரம்

சட்டென எங்கும் பரவுகிறது நிம்மதி "( நிம்மதி)

 இப்பகுதியில் வெறுப்பு புரிந்து கொள்ளப்படுகிறதுசிறிய தினப்படி விஷயங்கள் கண்ணில் தென்பட தொடங்குகின்றனதத்துவங்கள்ஆவேசங்கள் குறைந்து சிறு சலிப்புடன் நாட்கள் நகருகின்றனகேக்கின் ருசியற்ற பகுதி குறித்த ஆர்வம் அதிகரிக்கிறதுதினம் ஒரு விடியலின் பூங்கொத்தே போதுமானதாக இருக்கிறது

Thursday, February 24, 2022

உடல் - அரிசங்கர்

சமூக அமைப்பில், பல்வேறுபட்ட  மனிதர்களின் உடல் சார்ந்த விழைவுகள்,  சிக்கல்கள் மற்றும் புரிதல்களை பேசும் சிறுகதைகளை கொண்ட தொகுப்பு "உடல்".  பெரும்பாலான கதைகளில் ஒரு பாலியல் சிக்கலோ நெருக்கடியோ மையமாக இருக்கிறது . அனைத்து கதைகளின் பிரயத்தனம் , வெளி கண்ணோட்டத்தின் பார்வையில் "சரி" களை முன்வைத்தே அமைந்திருக்கிறது - இந்த "சரிகள்" நமக்கு முன்பே மிகவும் பரிச்சயமானவை - கட்டுரைகள் , விவாதங்கள் வழி இலக்கிய வாசகன் முன்னரே அடைந்துள்ள புரிதல்களே இந்த "அரசியல் சரிகள்"- கதைகள் அனைத்தும் கதையின் நிகழ்த்து அம்சத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது, இவ்வரசியல் சரிகளை அடைய மட்டுமே பயணப்படுகிறது - நன்கு தேர்ந்த உரையாடல்,  மொழியின் அழகான கொச்சை வழக்கில் ஆசிரியரால் பல இடங்களில் கையாளப்பட்டிருந்தாலும் அவை கதையின் இந்த அரசியல் சரி வீச்சில் எடுபடாமல் போகின்றது. இது ஆசிரியர் கதாப்பாத்திரத்தின் மனோபாவத்தை விளக்கும் இடங்களில் சற்றே நீட்டித்து மொத்த சூழலின் கருத்தை கூறுகையில் வாசகனின் பங்களிப்பிற்கு இடமே இல்லாது போகிறது. சரளமானதெளிந்த உரைநடை அநேக இடங்களில் ஆசிரியரின் தெளிவை பறைசாற்றினாலும் வாசகன் பார்வையில்  கதை உயிர் பெறும்  இடங்கள் நிகழ்த்து அம்சம் அமைந்துள்ள இடங்களே.


பொருள் வயின் பிரிவால் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி உடல், ஒலிக்குறிப்புகள், காமுறுதல்,முத்தம், கூண்டுக்கு வெளியே கதைகளும், இயற்கை விலகலை மையப்படுத்தி பைனரி மழை கதையும், முகம் சிறு பிறழ்வை மையப்படுத்தியும், மாகாளி, அம்மா கதையில் இயற்கையில் அமைந்த திரிபுகள் குறித்தும் அரிசங்கர் எழுதியுள்ளார். - உடல், மாகாளி, அம்மா,  ஒலிக்குறிப்புகள் கதைகளின் சாத்தியங்கள் ஏராளம் . தற்போதைய அளவில் அவரது மொத்த புரிதலையும் தேய் வழக்குகளையும் அரசியல் சரிகளையும்  கதையில் அமைக்கையில் உட்பிரதிகளுக்கும்   மேலதிக வாசிப்பிற்கும் இடம் இல்லாது போகிறது .

Wednesday, February 23, 2022

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

பெண்களின் அக உலகை அவர்களது மௌனம் மிகுந்த துயரங்களை நெருங்கி வாசிக்க முயலும் பிரதி, அதே நேரத்தில் பெண்களின் மனப் போராட்டங்களின் காரண காரியங்களுக்குள் புக விரும்பாத இலக்கிய ஆக்கமாகவும் அமைந்திருக்கிறது. அந்தப் பெண்களின் கதை வழி அவர்கள் வீட்டின் கதைகளும் நமக்கு கூறப்படுகின்றன. அனைத்து கதைகளையும் ஸ்தூலமாக புறத்தே இணைப்பது அம்மக்கள் வாழும் ரெயினீஸ் ஐயர் தெரு. அகத்தே  பால்யம் முதல் முதுமை வரையிலான பெண்களின் மன ஓட்டங்களை பதிவு செய்யும் நாவலாக ரெயினீஸ் ஐயர் தெரு அமைந்திருக்கிறது. 


சம்பவங்களின் கதை நிகழ்வுகளின் விவரிப்பிற்கோ பதைப்பிற்கோ ஓரளவுக்கு மேல் இடம் கொடுக்காது ஒரு வித கதைச்சுருக்கம் போல் வீடுகளின் கதைகளை வீட்டில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து படி நாவல் விரிகிறது. டாரதி என்னும் சிறுமி தொடங்கி, அற்புத மேரியின் முதல் சஞ்சலம், ஜீனோவின் பூப்பெய்திய காலங்கள், பிலோமியின் அக்கா மீதான பொறாமை, இருதய டீச்சர் சேசுராஜ் மண வாழ்வு கதை, அன்ன மேரி அக்காவும் அவரது விதவை கோலமும் அவர் மகன் தியோடரும், எஸ்தர் சித்தியும், மங்களவல்லி சித்தியும், ரோசம்மாள் ரெபேக்காள் முதுமைக்காலங்கள் என நாவல் பெண்களின் வெவ்வேறு வயதின் அக விழைவுகளை பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல் காரண காரிய ஆராய்ச்சியில் இறங்காது சிறிய ஓவியங்களை போல் நிகழ்வுகளை அளவான துல்லியத்துடன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த ஓவியங்களுக்கு ஒளியூட்ட காமம் மெல்லிய சுடராய் ஒளிர்கிறது. வழக்கம் போல் மாதங்களும் பருவங்களும் மாறியும் மாறாது இருக்கும் காலங்களும் வந்த வண்ணம் உள்ளன. 

அக்காம சுடரின் ஒளியில் டாரதி மழையில் நனைவதையும், ஜீனோ ராட்டினத்தில் சுற்றுவதையும், பிலோமி கடற்கரையில் குதிப்பதையும், இருதய டீச்சரின் மெல் அணைப்பையும், எஸ்தரின் அத்தனை குதூகலத்தையும் நீங்கள் காண முடியும். அந்த சுடரின் முன் தந்தை அண்ணன் கணவன் மகன் உறவு பேதங்கள் இல்லை, ஆணும் பெண்ணும் அவ்வொளியின் வெம்மையை சிறிது உணரும் தருணங்களின் மென் விவரிப்புகளே இந்நாவல். முற்றிலும் உடல் சார்ந்ததாக  என்று கேட்டால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. ஸ்பரிசத்தை விட அருகாமை சொற்களை விட மௌனம் மிக அழகாக அவ்வொளியில் மின்னுகிறது. மழை வருகையில் நாம் அமைதி அடைவது இதனால் தான் போலும், நாம் விழையும் ஒன்றின் அருகாமை நம்மை அறியாமல் நம்மை மகிழ்விக்கிறது நாம் மௌனித்து அதை உணர்கிறோம். 

Saturday, February 19, 2022

The New BJP - Nalin Mehta

Comprehensive book on History and Growth of BJP - gets us a insider view of Party s guiding principles, Electoral Politics, Changing Narratives, Success areas of Current Era of Modi Shah, Conjoint role of Other organisations of Sangh especially the RSS. Book is built on data of candidates across legislative and party positions summarised as Mehta Singh Social Index, Analysis of Nature and frequency of topics of discourse by the various parties  through traditional and social media routes in objective manner resulting in Narad Index. Adding to these Objective analysis are anecdotes, Interviews and Speech Excerpts. 


In its attempt to be Objective book is less perceptive except in very few places  1)Where it clearly links current faultlines with Origins of Sangh  2)Reasons for Rise of woman power in BJP 3) It rises a open academic question on Contours of Third Indian Way against polarities of Capitalism and Communism else where in the world. 

Using Objective Analysis, Book charts BJP s growth as a Rurban and Rural party , Growth in its Women cadre base, How it blended Technology, Cadre Addition , Welfare Politics and Organisational Structure changes in tune with times, Influence of Sangh& RSS and BJP s success story in Karnataka ,NE and if it can be repeated in other southern states. 

Arrival of the Political Automaton

Targeted Welfare kept as a Wheel, Extensive use of Technology for Cadre and Voter enrolment to travel along, Virulent Narratives to keep the Speed, Smart and Stoic enough to take diversions and remain hungry to reach newer spaces. Book details working of this automaton and a template for any party to emulate. This template in way ensures perpetual power for whoever runs it, add to this complying institutions and Media to this, Perpetual Power is a byproduct. 

Another area where this book provides additional light is on Woman voters and Cadre. On Objective view Woman voters are significant reason for BJP s success. Government s welfare wheel runs along Women s life cycle from Birth, Education, Career till Old age, Add to this a perceptive point on  impact of virulent male image like Modi creates in Women Minds. In normal opinion matters it is difficult to establish certainty of what women think and in political milieu it remains all the more elusive. 

Due to its Conjoint position Sangh is able to take stance of varying degree of seriousness separating BJP and other Organisations like RSS, but at same time provide a pipeline of cadre to BJP party and Government. RSS emulating church in its attempt to wrest social control from Church in Northeast, Imma e Hind and Indian Church party are interesting way to look at things. 

Reading the book will make us little wiser we have better stones to pick and hurl at each other now in our everlasting debates or pastimes rather. 

Monday, February 14, 2022

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி. 2001ல் வெளிவந்த நாவல், 2009ல் ஒரு பதிப்பும், 2022 ல்  சிறுவாணி வாசகர் மையம் சார்பாக இப்போது மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.


தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்னும் கதாப்பாத்திரத்தின் முப்பதாண்டு கால வாழ்க்கைப் போராட்டம்  நாவலாக அமைந்திருக்கிறது. தேசுவின் தாய், தந்தை, உறவு, சுற்றம் குறித்த எண்ணற்ற கிளைக்கதைகள் வழி ஒரு சமூகத்தின் மன ஓட்டத்தையும் அவர்கள் சந்திக்கும் அக மற்றும் புற சவால்கள் குறித்த குறிப்புகளும் நிறைந்த நாவல் கல்மண்டபம். 

வேதவிற்பன்னம் , தளிகை , ஈம சடங்குகள் - இம்மூன்று  விஷயங்கள் குறித்த சமூக உளவியல் சார்ந்த பார்வையாக நாவலை பார்க்காலம். தேசுவின் தந்தை ராமான்ஜி கற்றறிந்த வேதங்களை விடுத்து தளிகைக்கு வருகிறார் - காலம் அவர் மகனை ஈம சடங்குகள் செய்து வைக்கும் இடத்திற்கு தள்ளுகிறது. ஒப்புக்கொள்ளாவிடினும் வேத பாராயணம் விற்பன்னம் தளிகையை விட உயர்ந்த ஒன்றாகவும் , ஈமச்சடங்குகள் செய்வது இவ்விரண்டையும் விட சற்றே தாழ்ந்ததாய் சமூகத்தின் பார்வையில் இருப்பதான சித்திரம் நாவலில் வருகிறது. காலத்தால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட தேசு மனம் உவந்து ஈம காரியங்கள் செய்யும் இடத்திற்கு வரவில்லை. வேறு வழி இன்றி அவன் தஞ்சம் அடைந்த இடம் , அவனை விட தனித்துவம் மிக்க கோம்ஸ் , மிக நிதானமான சௌமியா  கூட அவ்விடத்திற்க்கு வந்து சேர்கிறார்கள்  - மன நிறைவு என்று கூற முடியாவிடினும் ஒரு வித நிதானமான ஏற்போடு தங்களுக்கு விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் - தேசுவின் தவிப்பு அல்லது மனத்தாங்கல் தன்னால் இவ்விதியின் போக்கை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்பதே  - அல்லது அதற்கான தன்முனைப்பு தன்னிடம் இல்லை - தன்னை விதியின் சூழலிலிருந்து மீட்கும் கல்யாணியின் கரங்களை பற்ற அவனுக்கு ரொம்ப காலம் ஆகிறது - தன் சுற்றங்களிடம் இருந்தே நல்லதையும் கெட்டதையும் தேசு பெறுகிறான். நல்லதை கண்டுக்கொள்ள அவனுக்கு நாள் எடுக்கிறது.  

பிறர் துக்கத்தையும் தம் துக்கமாக சுமப்பவனே உண்மையான வைஷ்ணவன் என்கிறார் தேசுவின் மாமா மது. தன் பாட்டையே சரியாக பார்த்து கொள்ள தெரியாத தேசுவிற்கு லட்சிய வைஷ்ணவன் ஆவது எட்டாக்கனி -இவ்விடத்தில் தேசு சுந்தரேசன் மாமாவையும்  , ஹோட்டல் மணி ஐயரும் வைத்துப்  பார்க்கிறான் - இவ்விடத்தில் இவர்கள் இருவரும் தனது பாட்டையும் பார்த்துக்கொண்டு பிறரது சுமையை சிறிது முணுமுணுப்பும் இல்லாது  சுமக்கின்றனர். தேசுவின் தேம்பல் ஒரு நேர்கோட்டில் சென்றபடி இருக்க சுற்றி அமைந்துள்ள கிளைக்கதைகள் தேசுவிற்கு ஆறுதல் கூறியபடி அவனை தேற்றியபடி அவனை கரை சேர்க்க முயல்கின்றன - கிட்டுவின்  மாதவ் ராவின் விஸ்வநாதனின் அட்டுழியங்கள் சடகோபனை சௌமியாவை மணி ஐயரை ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் டைகரின் அராஜகம் ஒரளவு தேசு போன்ற ஆட்களுக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாவலை வாசித்து முடிக்கையில் உணர்கிறோம். 

இறைவன் இருக்குமிடத்தில் இருந்து விலகி வந்ததை சௌந்தரம் ராமான்ஜியிடம் சுட்டிக் காட்டுகிறாள். இறைவனிடத்தில் இருந்து விலகிய ராமான்ஜி வேதத்திலிருந்தும் விலகி பொருள் நோக்கி ஒரு ஓட்டம் எடுக்கிறான் - பொருள் மட்டுமே நினைவாக கொண்ட அந்த ஓட்டத்தின் முடிவு மிகவும் கோரமான ஒன்றாக மாறி தேசுவை நிர்கதியாக்குகிறது -  இறைவனிடமும்  அறத்திலிருந்தும்  விலகிய  பொருள் ஓட்டத்தின் கோரம் பரத்தைமை நாவலின் முக்கியமான இழை - இறுதியில் தேசு தனது கடைசி வாய்ப்பை  அவனது தந்தையின் பூர்வ செயல்கள் வழி அடைகிறான். 

தேசு தனது வாரிசுகளுக்கு எந்த ஒரு விஷயத்தை விட்டு செல்லப் போகிறான் ? காலம் தோறும் மாறாத பிறப்பு நடப்பு இறப்பு சட்டகத்தை குறித்த பரிச்சியம் அடைந்திருக்கும் தேசு, இம்மூன்றை குறித்த தனது பார்வையை பொது சமூக கண்ணாடி வழியே இனியும் தொடர்ந்து பார்க்கப் போகிறானா ? இறப்போர்,  முக்தி வேண்டிய பயணத்திற்கு முடிந்த  தன் பங்கை சஞ்சலத்துடன் செய்து கொண்டிருக்கும் தேசுவிற்கு "முக்தி ரதம்" வேன், அவனது புறத்தேவையை தற்போதைக்கு தீர்க்கும் ஒரு வாய்ப்பு  -ஆனால் அவன் முதலிருந்து பங்கு கொள்ளும் முக்தி பயணத்தை சௌமியா போல் சடகோபன் போல் ஏற்புடன் அமைத்துக் அப்பயணத்தில் தன் பங்கை உணர்ந்து, தன்னை உணரும் வாய்ப்பை காலம் அவனுக்கு அருளுமா ? திடீரென சீற்றமாகி கணவனை இழந்த மாமியின் கூடையை பற்றியபடி பஸ் வரை நடந்து சென்று அவள் அளித்த நாலணாவை மறுத்து  " நான் கூலியும் இல்லை கிராதகனும் இல்லை"  என்று கூறியவன் அல்லவா தேசு. 

Saturday, February 12, 2022

கடைசி விவசாயி - ம. மணிகண்டன்

கடைசி விவசாயி- பார்க்க வேண்டிய படம். நல்ல படம். 


பொற்காலம் திரும்புகிறது

மெதுவாக நிதானமாக நொடி நொடியாக காலம் நகர்கிறது, நீங்கள் அவசரமாக எங்கும் செல்ல வேண்டியத் தேவை இல்லை . யாரிடமும் அவசர அவசரமாக பேசத்தேவையில்லை. மொத்தத்தில் குறைவாக, மெதுவாக கூற ஒரு சில வார்த்தைகளே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். 

பொற்காலம் திரும்புகிறது,

தினமும் நீங்கள் செய்வதற்கு ஒன்றிரண்டு வேலைகளே இருக்கும். அவ்வேலைகளே உங்கள் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் ஏனென்றால் உங்கள் தேவைகளே மிகக் குறைவாக இருக்கும்.நீங்கள் அவ்வேலைகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் சலிப்படையாமலும் இருப்பீர்கள். 

பொற்காலம் திரும்புகிறது,

நீங்கள் யார்? எந்தப் பிரிவை சேர்ந்தவர் ? உங்கள் கடமைகள் என்ன என்கிற வரலாற்று பளுக்களை யாரோ அகற்றி விட்டனர் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மண்ணை சற்று கீறி விதைகளை சற்றே தூவி காத்திருப்பது மட்டும் தான். நீங்கள் எவரிடமும் செய்ய வேண்டியதை பற்றி மிக எளிதாக விளக்கிக் கூறுவீர்கள். உங்களிடம் ரகசியங்கள் இல்லை. தர்மசங்கடமான சாத்திரங்கள் இல்லை, கடினமான சூத்திரங்கள் இல்லை, தத்துவ சிக்கல்கள் இல்லை, அனைத்தையும் விளக்க உங்களுக்கு கைப்பிடி மண் மட்டுமே போதுமானதாக இருக்கும். இதையும் மீறிய வானம் பொய்க்கும் கடின காலங்களில் இறைஞ்சுவதற்கு கல் போன்ற ஒரு கடவுளும் நம் முன்னோர்களும் துணை இருப்பர். 

பொற்காலம் திரும்புகிறது,

உங்களின், உலக நடப்புகளை அறிந்து கொள்ளும் வேட்கை, தணிந்திருக்கும். நீங்கள் மென்மேலும் அறிவை விசாலம் செய்ய மேலும் புத்தகங்களை நாடுவதை நிறுத்தி விட்டு வெகு நாட்களாகி இருக்கும். சூர்யோதயமும் அஸ்தமனமும் , நிலவு நிரம்பிய இரவுகளுமே உங்களை இளைப்பாற்றும்.  தாவரங்களின் பூச்சிகளின் வண்டுகளின் பறவைகளின் மிருகங்களின் உலகிற்கு மிகவும் அருகில் நீங்கள் இருப்பீர்கள்.நீங்கள் பிறந்த ஊரை விட்டு வெளியே செல்ல அவசியம் இருக்காது,  காட்டு வழி உலகை சுற்றும் மயில் சித்தன் ஒருவன் வருடத்தில் இருமுறை வந்து கடவுளின் ஆட்சியை குறித்த புகார்களை, கடவுளின் வருத்தங்களை உங்களிடம் தெரிவிப்பான். 

பொற்காலம் திரும்புகிறது,

என்றுமே இருந்தது போல் காலம் உறைந்திருக்கும், புதிய இரும்பையோ புதிய தங்கத்தையோ புதிய எண்ணெய்யையோ நாடி பூமியின் அடியில் பயணப்பட மாட்டார்கள். பூமியின் மேல் நாகரிகம் உறைந்திருக்கும். இப்படியானதால் அப்படியானது, அப்படியானதால் இப்படியானது என்ற கதையாடல்கள் பழங்கதையாய் மாறிவிட்டிருக்கும். நீங்களும், அடிவானமும், காணி நிலமும், மயில் அகவும் பாறை மலைகளும், சூரியனாலும் சந்திரனாலும்  மழையாலும் நிரம்பி தளும்பும் வெளியும், பிரித்தறிய முடியாதவாறு வரும் மாலை நேரங்கள் மாறாது வந்தபடியே இருக்கும். 

Tuesday, February 08, 2022

விசாரணை அதிகாரி - The Grand Inquisitor

விசாரணை அதிகாரி - - The Grand Inquisitor , Chapter from Brothers Karamazov

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்களின்  மொழிபெயர்ப்பில் ஆர் சிவகுமார் அவர்களின் செம்மையாக்கத்தில் நூல்வனம் வெளியீடு. 


இரண்டு கடவுள்கள்

எனக்கு அற்புதங்கள் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது, இந்த சிறிய வாழ்வின் அத்தனை அகலமான ஆசைகளும் எப்படியாவது ஒரு நாள் பூர்த்தியாகும் என்று நம்பவே விரும்புகிறன்,  சிறிய ஆசைகளையும் துற என்பவரிடமும் எதேச்சை என்பவரிடமும் கர்மவினை என்பவரிடமும் என்ன பதிலுரைப்பது ?

சர்வ வல்லமை படைத்த ஒருவனை காணுகையில் மனம் மகிழ்கிறது. அவ்வல்லமை கொண்டு அவன் ஆக்குகிறான் என்று ஒரு தரப்பும் அழிக்கிறான் என்று இன்னொரு தரப்பும் சண்டையிடுகின்றனர். ஆனால் ஆக்கலும் அழித்தலும் தாண்டி அவ்வல்லமையின் கொக்கரிப்பு அல்லது அது குறித்த ஜம்பம் ஒன்றே நமக்கு இன்றளவிலும் போதுமான ஒன்றாக இருக்கிறது. சரணாகதி இத்தனை இனிமையாக இருக்கையில் Who wants Freedom என்று பஷீர் கேட்கிறார்.


நம் தேவைகளின் ரகசியம் தெரிந்த ஒருவனே நமக்கு கடவுள் -  உணவு மட்டும் அல்ல நம் மனதின் அத்தனை அபிலாஷைகள், வக்கிரங்கள் ஆட்டம் போட அனுமதிக்கும் கடவுளை நான் வணங்குகிறேன், மனதை அடக்க கூறும் கடவுளை, நற்குணங்களை பட்டியலிடும் கடவுளை தந்திரமாக தவிர்க்கவே விரும்புகிறேன்.


ஆனால்,நினைத்திருந்தால் நிகழ்த்தியிருக்கக் கூடிய அற்புதம், அடைந்திருக்கக் கூடிய அதிகாரம், தேவையான பொருளை அளித்து அடைந்திருக்க கூடிய நிறைவு இம்மூன்றையும் அளிக்காத  கடவுளின் வருகைக்காக ஏதோ ஒரு காரணத்தால் காத்திருக்கிறேன். 


அது வரை, கடவுளின் தூதர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒரு முதியவரை,  சிறிது வெளிச்சம் காட்டிய அந்தக் கிழட்டுக் கடவுளை முத்தமிட்டு மகிழ்கிறேன். 

Monday, February 07, 2022

Sea of Poppies - Amitav Ghosh

Masterful , Moving Portrait of  Lives in first half of 19th Century in  British Colonial India with three parts Land,River and Sea. An Account of Atrocious Rule of the Merchant class and Sea Faring English Men. A  journey begins through the handiwork of destiny's far reaching hands. Greatness lies in using the backdrop subtly we never feel the historical back drop trying to outproject itself as the Novel.  What we have is a moving and poetic prose on handiwork of destiny interwining lives of so many people in so many different ways with astonishing details. Might be Tempted to perceive this novel in a metaphoric tone attributing each  character's  background to a  specific historical narrative, we can attempt and resist. 


Few Extraordinary details , moments which I cherished - Shark mistaking betel juice for blood of an animal, Bees and insects submerged in poppy syrup not removed by farmers to increase weight, Ship anchored on Ganga Sagar on crevice of land about to slip in abyss of sea, Gayatri Mantra gets a astonishing Physical reference as ship enters the black water sea prayers of the inmates of the ship using Gayathri Mantra, Raja Neel s entire character arc is tremendously written as an epitome of Dignity and Contemplation even during the Times of Strife, A wedding celebration and a pregnant mother realising first kick of her baby and husband feeling it while on board with gleaming smile seen through the darkness of the night. 

While reading I was reminded of  similar novel I have read in Tamil written by Pa Venkatesan -  Thandavarayan Kathai. Sea of Poppies is filled with detailed imagery giving life to  both Ghastly and Cherishable moments of Life with Atrocious Colonial rule of law unfolding in the background. 

Saturday, January 29, 2022

One Hundred years of Solitude - Gabriel Garcia Marquez

 


It all began as a journey to unknown pastures ending with a dystopian progeny wondering what these four hundred pages of pulsating prose indicate , a tumultuous running of time only to embrace every possible thought of every possible character that passed through the Buendia s house telling us about the life and reflections of members of a Family across hundred years and in that attempt shines a scorching beam on every possible way of living - Silent Mumbling to Oneself reading the pages already known and writing the pages already written, Step out with a Spear or a Gun to establish Justice and Farce in equal measure to start unstoppable wars, To imagine your life s ambition as a big pail to save everything you can for those around you only to be squandered by the very same in known and unknown ways but still have the grace to build everything again as many times as if nothing happened, To enjoy the gift of Providence as and when it is available without any anxiety of future and only to see it rain for four years and do not rain for another ten develop a sense of patience to keep telling it cannot go on like this for ever, To make love as if there is no tomorrow To live like death is around the corner for instead of the debilitation about that everlasting animal we have our virolous passions continuosly egging as if we're are going to live for ever only to be buried under sands of time completely forgotten and eaten by insects nevertheless seed of passion finds its way up through creaky earth like a lizard, To Live through memories of living and the dead things happened historical unhistorical illusive farcical all losing its meaning at the sight of dystopian town for its written already in the unread scriptures that a piece of earth in Macondo remain as is but for a short sojourn of Buendians. A Lot of people came and went Lives lost in cock fights wars alike , people lived in opulence and penury alike clutching their nameless figurless determination and Idiocy, for Time a ruffian bullied his way into the lores of Macondo. 

Thursday, January 27, 2022

எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர்

பரிச்சயம்

குள்ள சித்தன் சரித்திரம் மற்றும் கனலி இதழில் வெளியான "அடையாளம்" சிறுகதையும் யுவன் அவர்கள் பெயர் கூறியவுடன் என் நினைவுக்கு வருவது. குள்ள சித்தன் சரித்திரம் வாசித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அடையாளம் தற்போது வாசித்ததால் அல்ல கதையின் சம்பவங்களின் வீச்சு இன்றளவும் நினைவில் நிற்கும் விதமாக அமைந்திருப்பது. யாவரும் பத்தாண்டு விழாவில் சமகால எழுத்தாளர்களின் எழுத்தில் கூர்மை குறைந்து வருவது குறித்து யுவன் கூறத் தொடங்கி முழுமையாக கூறுவதற்கு முன் உரையை முடித்தார். விகடனில் டிசம்பர் முடிவில் ஒரு பேட்டி புகைப்படம் கண்டு பேட்டியை படிக்காமல் வழக்கம் போல் ஒரு scroll, புதிய நாவல் குறித்து எதிர்பார்ப்பை குறித்து கூறியிருந்தார். பரிசல் புத்தக கடையில் அற்புதமான அட்டையுடன் எண்கோண மனிதன் புத்தகம் கண்ட போது வாங்காமல் இருக்க முடியவில்லை. யுவன் அவர்களை வாசித்து நாளாகி இருந்தது. எல்லாம் அமைய வாசித்தும் முடித்தது மகிழ்ச்சி.ஏனினில் மோஸ்தருக்கும் ஆசைக்கும் வாங்கிய புத்தகங்கள் அநேகம். அவற்றையும் படிக்க வேண்டும். 


எண்கோண மனிதன் 

தேடப்படுபவர் - இவரும் வேறொன்றை தேடுபவர் , தேடுபவர், தேடுபவர் கூறியதை தொகுத்தவர் - இவரும் ஒரு வகையில் தேடுபவர் , இம்மூன்று ஆளுமைகளை மையமாக கொண்டு தேடப்படுபவர் குறித்த சித்திரம் மெல்ல எழும் துப்பறியும் கதையை போன்ற ஆனால் அதனினும் ஆழமான பூடகமான முழுமையான கதையாக விரிகிறது எண்கோண மனிதன். தேடப்படுபவர் குறித்த நிகழ்வுகளை மனப்பதிவுகளை அன்சாரி தொடங்கி விசாலாட்சிச் சித்தி வரை துணை கதாப்பாத்திரங்கள் கூறக் கூற நாவல் முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் இக்கதப்பாத்திரங்கள் என்ன கூறத் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமுமே நாவலை வாசிப்பதற்கு தொடர் உந்துதலாக இருக்கிறது.  தேடுபவர் தொகுத்தவர் பின்னொடு நாமும் கால ஊஞ்சலில் முன்னும் பின்னும் பயணிக்கிறோம். 

வாசிப்பு 

நாவலை வாசிக்கையில் உட்கிடக்கையாய்  தோன்றிய விஷயங்கள்- தேடலின் இயல்புகள், தப்பித்தல் மற்றும் கச்சிதமும் வரலாறும் 

தேடலின் இயல்புகள் 

கலைத்தேடல் என்று வைத்தோமானால் தேடுபவர் தேடப்படுபவர் இருவருமே தேடல் பயணத்தில் அமைந்திருந்தாலும் இருவருக்கும் இடையே வேறுபாடு உள்ளதா என்னும் கேள்வி, இயல்பிலேயே ஒரு கலை ஆளுமையாக உள்ளவனும் , கலையின் பால் ஈர்க்கப்பட்ட தன்மையான பாமரனுக்கும் என்ன வித்தியாசம் , அவர்கள் இருவரின் தேடலும் வெளிப்பார்வையில் ஒன்று போல் இருந்தாலும் ஒன்று இல்லை என்று நாவலை வாசிக்கையில் தோன்றியது. கடலை காணாதவர்கள்  மத்தியில், கடலில் குளிப்பவனுக்கும் கடலில் முழுகி மறைபவனுக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன ? சில நேரங்களில் தேடுபவன் கரையில் நின்று கால் நனைப்பதோடு சரி, சம்பந்தமூர்த்தி மாமாவும் தொகுக்கும் கிருஷ்ணனும் கடலின்  எந்த எல்லையில் இருக்கிறார்கள் ? இருவரின் தேடலின் முடிவு எவ்வாறாக அமைந்திருக்கிறது என்பதே இந்நாவலின் முக்கியமான உட்கிடக்கை. 

தப்பித்தல் - Evasion (வாசிப்பவனுக்காக)

காலக்கண்ணடி புத்தகத்தில் இது குறித்து வாசித்ததுமே அதன் அர்த்த அனர்த்தத்தில் மனம் அல்லாடுகிறது. நிகர் வாழ்வு போதாமல் இருக்கையில் அல்லது நிகர் வாழ்வு சலித்து தேடி தப்பித்து  உள்நுழைபவன் அதே தளத்தில் வேறொரு பரிணாமத்தில் தேடலில் இருப்பவன் கையைப் பற்றுகிறான். இருவேறு உலகில் இருப்பினும் சேர்ந்தே தட்டாமலை ஆடுவது போல் இருக்கும் தோற்றம். சம்பந்தம் மூர்த்தி அவர்களின் தப்பித்தலின் ரிஷி மூலம் குறித்த மெல்லிய திறப்பு நாவலின் ஒரே இடத்தில் மட்டும் வருகிறது. சோமன் தப்பி தப்பி சென்ற இடங்களை பின் தொடர்ந்து செல்லும் சம்பந்தம் சோமனை பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கையில் எவ்வளவு தூரம் இது சம்பந்தம் அவர்களின் தேடலுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதே நாவலின் மற்றுமொரு முக்கியமான தளம். 

கச்சிதமும் வரலாறும் 

நாவலை கச்சித்தப்படுத்த முயற்சி செய்தது போன்றும் அவ்வாறு செய்யாத இடங்களை குறித்தும் யுவன் அவர்களே பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நாவலின் நிகழ்வுகளின் கால நிர்ணயம் குறித்த அவரது பிரயத்தனம் வாசகனுடன் சிறிய விளையாட்டை விளையாடுகிறது. நினைவுகளின் தொகுப்பு விளையாட்டில் வாசகன் தேர்ந்தெடுக்க வேண்டியது எதை ? என்றோ நடந்த நிகழ்வுகளின் துல்லியமான இன்றைய சித்திரத்தையா அல்லது  அந்நிகழ்வுகளின் கச்சிதமான வரிசைக் கிரமத்தையா ? வரிசை கிரமும் புனைவாக இருக்க வாய்ப்புள்ளவை தானே ? புனைவில் உண்மையே இல்லாது போக வாய்ப்பில்லை இல்லையா ? காலம் தாண்டி உட்பொருள், வடிவம் இவற்றின் கச்சிதம் நவீன நாவல்கள் தானாக தங்கள் தலையில் என்றோ ஏற்றிக் கொண்ட விஷயங்கள், இந்நாவல் அந்த வகையிலும் கொஞ்சம் இறுக்கம் தவிர்த்து அதே நேரத்தில் அலைபாயாது ஒரு தேடலின் கதையை தொகுத்திருக்கிறது.