Monday, May 22, 2023

When Breath becomes Air - Paul Kalanithi

Moving account of Life of a Neurosurgeon battling Lung Cancer


*

Episode on a Mountain top, sun had risen on one side and its dark on the other ..serra camp 

* *

cadaver episode what all doctors has to transgress , sending back patients to zones of normality , Moral Adjudication as a habit , Heroic fights before eventual death

***

Precisive Genius back to OR with Cancer shadow taking a step back 

****

Paul during Cady s Birth in Delivery Room

*****

Paul s Final day at the hospital 

*

A Moving Account of a bright gifted mind - Superlative Self, permeating through out the life - No Self Doubts

^^

His graceful words to his daughter - Sated Joy  💐

^^^




Thursday, May 04, 2023

If on a Winter's Night a Traveller

This novel by Italo Calvino is a complex woven fabric. 

Ambitious in its vision to ruminate on entire arc of book reading and writing. This novel embarks on a journey to every possible place related to books. A Reader is never satiated , he is always in search of a book , he is ever immersed in his mission to read books ever distracted by the search for meaning. Novel begins and ends with overwhelming view points -It begins as  "you expect nothing from life" and ends with story of a complete wipe out of things you do not need. 

Reader is a man who strings a narrative on his own in addition to what the author has already spun. Towards end of the novel through a revelatory episode we see through this multiplicities of narrative with  clarity. That single paragraph strung impromptu by a new character using already existing details reveals the beauty of narrative building and search for a meaning in general. Our Inclination to search for the meaning in that defining paragraph is Highly revelatory, We also risk missing to see the futility, the fun and misunderstanding about a thing called Life. 

Novel is so grounded in a sense it always strives to gives us a picture of what is. Even thoughts are seen as objects appearing from somewhere and disappear on arrival of another thought. Novel keeps us grounded, allows us to enjoy the episodic fun before futility arrives. Each episode is written based on different genre and flavour, allowing us to immerse into vagaries of story telling.Novel comes out as a Slyly woven complex fabric of the plot, the reader, reading process, academia, publishing, government control and search for a narrative and meaning in the ocean of words.

-----

அசோகமித்திரன் in "விடுதலை" - "புரிந்து கொள்வதால் என்ன பயன், புரிந்து கொள்வது தான் பயன் " 

போகன் சங்கர் in Facebook -  "பிரபஞ்சம், அதன்  விதிகளை அறிந்து கொள்ள முயல்பவர்களை கடுமையாக தண்டிக்கும்"

Anecdote from a Veda class -"Do not bother much about meaning of Vedas, you will land no where, just repeat the verses,  Yes it's good to know the meaning, but even if you do not understand the meaning it is fine, God knows the meaning and it is sufficient.

----

Sunday, April 23, 2023

விடுதலை - அசோகமித்திரன்

அசோகமித்திரன் கதைகளில் ஆன்மீகம்

ஒரு வேட்கையின் குறிப்புகள் போல , லௌகீக சகவாசம் விடுத்து, சேவை மனப்பான்மை வளர்த்து, பந்த பாசம் அறுத்து, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , முன் திட்டங்கள் இன்றி பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் பரசுராமைய்யர் அவர்களின் கதை 'விடுதலை'. சூழ்நிலை, காலமாற்றம், தாங்க முடியாத இழப்புகள் எல்லோரையும் பரசுராமைய்யர் போல மாற்றுமா ? பிரபஞ்சத்திடம் சேர்க்குமா ? "எது அவசியம் , தனக்கு எல்லா அவசியங்களும் போய் விட்டன , ஜலத்திவலைகள் கவனத்திற்கு வருகின்றன, அதனால் அவை மட்டும் தான் அவசியம், எவ்வளவு ஆனந்தமான விடுதலை !". கதையின் முடிவில் முற்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் ஆத்மானந்தர் வாக்கின் சாயலை ஒத்த, கடற்கரையோரம், அற்புதமான முடிவு கொண்ட குறு நாவல்.JK வில் தொடங்கி ஆத்மானந்தரில் முடியும் கதை.


ஆன்மீக உறுதி வாய்த்த சுவாமிநாதன் கடைசி வரை விஷயங்களை நம்பக்கூடிய வல்லமையை பெற்றானா ? 

எது பெரிய தவறு ? வேலையின்றி சோம்பலாக இருப்பதா ? அல்லது லஞ்சம் கொழுத்து  பணம் சேர்ப்பதா ?தகப்பன் தவறுகள் உறுத்த, தட்டிக்கேட்கும் சங்கரன், சொகுசு  போய் விடும் பயத்தில் வீடு திரும்புதல்,சொகுசை விட்டுக்கொடுக்கும் மனோதிடம் எல்லோருக்கும் வாய்க்குமா ? 'உயர உயர,குளிர் குளிர் என்னும் வாழ்க்கையை சமாளிக்க கோட்டு என்னும் லௌகீகம் தேவைப்படுகையில் மலை இறங்க இறங்க போர்த்திய ஆடைகள் துறக்க துறக்க விடுதலை'.

தொடர்ந்து, அமைதியாகவும், தன்னலமின்றியும், கோபப்படாமல்  விடாமுயற்சியுடனும், முன்திட்டங்கள் இன்றி, கண்ணியத்துடனும் வாழ்வது, எவ்வளவு கடினம் என்று இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இப்படி இருப்பதை ஆன்மீகம் என்று கூறலாம். அவ்வான்மீக  வேட்கையின் பொருட்டு, சூழலையும், செல்வத்தையும், சொகுசையும் உதறுதல் அத்தனை எளிதா என்ன ? 

விடுதலை என்றும் எளிதான பொறுப்பு துறப்பு ஆகாது. அப்படி இருப்பது போல் தோன்றக்கூடியது. விடுதலை கடினமானது, முன்பின் ஒருவர் அறியாதது.அதுவாய் தகைவது , தினக்கடமைகளை கோருவது, திடீரென புலப்பட்டு மறைவது. நாம் அதுவே ஆகும் வரை இழுத்து செல்வது.அத்தனை அலைக்கழிப்பின் சுடரென அமைவது.

---

நான்கு கதைகள்  கொண்ட தொகுப்பு கதைகள் குறித்த குறிப்புகள்

விடுதலை - குமாஸ்தா பரசுராமைய்யர் , பம்பீனா , JK,சேரி, மகள் ஜயம் காணாமல் போதல், கண்ணுசிங் , முருகையன், , சிவஸ்வாமி ஐயர், டெபுடி , எம் டி, சரோஜா,பாபு,அப்துல் காதர்.

விடுதலை கதையின் அரசியல் குறியீடுகள் - ஜயத்தை தொலைக்கும் பிராமண சமூகம், எங்கிருந்தோ வந்த கண்ணுசிங் எழுதும் அர்ஜுனன் தபசு பாடல், இங்கேயே இருக்கும் முருகையன், கீழ்தட்டு மக்களாக பம்பீனா அந்தோணி. கடற்கரை,தமிழக மக்களின் குறுக்கு வெட்டு தோற்றம்.

இன்னும் சில நாட்கள்

வைத்திலிங்கம் - சீடன் சுவாமிநாதன்,  மாரிமுத்து, உலோக தகடு , தங்கம் வைத்திலிங்கம் குடும்பத்தார் ஊர் காலி செய்தல், சுவாமிநாதன் நாடி ஜோசியம், ஜோசியரின் நாட்கணக்கு தவறாகுதல், இன்னும் முடியப்பெற்றால்....

விழா - டல்பதடோ கம்போலியா திரைப்பட விழா profடப்லி சில்வியா ராணுவ ஒப்பந்தம் திரைப்படத்திற்கு முதல் பரிசு, திரைப்படம் விற்க டல்பதடோ முயற்சிகள்

தலைமுறைகள் - சங்கரன் , சங்கரன் அப்பா  சண்டை , சங்கரன் வெளியேறுதல் , பழனிசாமி ஊட்டி , சங்கரன் வீடு திரும்புதல். இந்திரா எமெர்ஜென்சி காலகட்டதில் நடக்கும் கதை.

Friday, April 21, 2023

கதீட்ரல் - தூயன்

கதீட்ரல் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியது, வெகு நாளைக்கு பிறகு என்னால் ஒரே நாளில் வாசித்து முடிக்க முடிந்த நாவல், கதையின் இழைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயல்பாக மலர்ந்துள்ளன. 


மனம் அறிதலின் பத்து வாயில்களில் ஒன்று (ஹெச் எஸ் சிவபிரகாஷ் )  அந்த மனதின் எல்லைகளை அறிய விழையும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கண்டடையும் விஷயங்கள் ஏற்கனவே இங்குள்ள ஒன்றை துலக்கி தெளிபவை, புதிய ஒன்று என்று தோன்றுவது வார்த்தை சுவர்களின் ஜாலத்திலனாலோ ? எத்தனை வார்த்தைகள் எத்தனை சுவர்கள், எத்தனை யத்தனம் எத்தனை ஆறுதல். 


மனதை நேரத்தாலும் புவியமைப்பாலும் கட்டமைக்க முடியும் என்பதையே கதீட்ரல் காட்டுகிறது , ஒரே நேரத்தில் மிகுந்த இயல்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இரு முனைகளில் இருந்து தோன்றிய எமிலியும் அவந்திகையும் தேடுவதை எளிதாக லேசாக நஞ்சுண்டன் எதிர் கொள்கிறார், தொலைத்து விட்டார். கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வார் " மூத்தோர் ஏதோ ஒரு விவேகத்தால் பெரிதாக எதையும் வரலாறாக பதிவு செய்ய முனையவில்லை என்று " ( நினைவில் இருந்து எழுதுகிறேன் ) , நஞ்சுண்டன் தொலைத்தது குறித்து பெரிதாக வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வருத்தப்பட்டது போல ஆப்ரஹாம்  கதைத்திருந்தாலும். ஆப்ரஹாம் கையில் தான் கதையின் மொத்த சுழற்சியும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுபடல்கள் அவனது தேர்வே. அவந்திகையுடனானஅவனதுகண்ணாடி உரையாடல்கள் வெகு சுவாரஸ்யம். 

நீட்ஷன் கட்டமைக்க விரும்பும் பிரக்ஞை இன்றைய சூழலுக்கு எத்தனை பயங்கரமாக பொருந்துகிறது, வார இறுதி குறித்த இரு வரிகள் மீள மீள யோசிக்க வைத்தது, 

இக்கதையில் தொலைந்த பிரதியை தான்  தாண்டவராயன் கதையில் தேடுகிறோமோ ? நஞ்சுண்டன் சிரிக்கிறார் , அறிவு சிரிஞ்சுகள் பரவலாகாத காலங்களை நினைவூட்டுபவர். பிரதியை தொலைத்தவர், அறிவை அறிவாய் அறியாதவர்.

அறிவுலகின் கதவுகள் அடைக்கப்பட்ட பின் குறுகுறுப்புடன் எட்டிப் பார்க்கும் ஆப்ரஹாம் கையில் கிடைக்காத பிரதி , அதில் ஆர்வமில்லா நஞ்சுண்டனை வந்தடையும் விசித்திரமான கோலங்களை கொண்டது காலம். 

நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய கதீட்ரல.

Saturday, April 15, 2023

திருமுகம்

அறிவு தேட்டம் மிகுந்த விஞ்ஞானி ஒருவர்,அறிவியல் சமன்பாடுகள் மூலம் மனித இருப்பை புரிந்து கொள்ள முனைகிறார். காதல் அவரை என்ன செய்யும் ?

அந்த விஞ்ஞானியின் தடம் பற்றி வரும் சமூகவியல் அறிஞர் கடவுளின் இருப்பை பற்றிய தீராத சந்தேகம் கொண்டவர், தனது ஆய்வின் மூலம் விஞ்ஞானியின் காதலை எப்படி புரிந்து கொண்டார் ? கடவுளை கண்டடைந்தாரா ?



கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும்  நம்பிக்கை  இல்லாதவனுக்குமான உறவு எத்தகையது ?கடவுள் நம்பிக்கைக்கும் காதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா ? 

நோயை குணப்படுத்தும் வல்லமை கடவுளுக்கு இருக்கிறதா ? கடவுளை முழுமையாக புரிந்து கொள்ளும் சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறதா ? 

இவ்விஷயங்களில் மனிதன் தேர்ந்தெடுக்க  கூடிய எளிதான பண்பு "சீர்மை", கடைபிடிக்க கடினமான பண்பு "சீர்மை".

திருமுகம் உணர சீர்மை

சீர்மை நிறைய 

உணர்வோம் திருமுகம் 

இருப்பிலா வாசனையில் திருமுகம்

இருப்பிலா பேரொளியில் திருமுகம்

எண்ணிலா பல்லுயிர்

இறைந்தழைக்கும் திருமுகம் 

பொருளிலா சொற்களில் திருமுகம்

பொருளிலா அழுகையில் திருமுகம்

வன்னிலா மென் ஸ்பரிசத்தில் திருமுகம் 

தானிலா தூய அன்பில் திருமுகம்

வானேகும் பட்டதில் திருமுகம் 

---------


திருமுகம் - ஈரானிய நாவல்

முஸ்தஃபா மஸ்தூர் (ஆசிரியர்), முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான் (தமிழில்)

Sunday, April 09, 2023

The Paradise of Food - Khalid Jawed

A Promise was made in the form of cities, we never knew the details, trusting the city we continue to leave our centuries old schema , continue to leaves our villages, dared to cut off many threads of the schema, chose to remain polite enough being anonymous. 



But the place we left is in complete ruin today, a no chance place, Few dare to return back to ruins, some modify ruins as zones of comfort stay to balance the brazenness of the urban. In first place villages did not entice us much, they have nothing to offer against the never ending universal cities,we can say we have been pushed out but we never wanted to stay , we could have stayed alright. 

Cities are ever new and villages are ever old , selfish modern man thinks like this, never ending city till 40 and some stable unchanging village from 40, but not many can afford this double luxury.

Lot has changed as we moved from villages to cities, especially our food. Food tastes bad every following day in the city, may be its the age you say but it's a symbolic reminder to us that we have embraced the fresh decay of cities , from old ruinous to ephemeral decay ,a slow mover stands no chance in city today.from a crowd we have become a set of numb individuals esp on food front, food has been an occasional wonder in the cities.

Novel deals with Self absorbed individual and brilliantly establishes that fight is between the intestines at fundamental level and the way novel delineates how individual scourges up everyday food to sustain himself, sustain his passions makes it a unique read.

Novel s subtext is more heavier, a story of an individual moving from a bustling village home to a solitudinal clerical home at surface level,a story of changing times following the footsteps of Politics of Independent India,it is also a story about how fundamentalism has replaced faith in a pompous manner. It is also a story about the guilt trip of an individual severing from the past.Story of a recurring premonition which announces itself uninviting.

Situation has ripened, we have liberal states all over the world securing economics of comfort,conformed, busy, incomplete living thereby sowing seeds for the grand return of religion promising pure, peaceful, heroic sense of completeness. 

In a village we jointly suffer but in cities we suffer individually. We have to make our choice between returning to ruins against embracing fresh decay.Novel's final image poignantly tells us a tale. 

Good Novel , Extraordinary in parts.

Sunday, March 26, 2023

ஹிட்ச்காக் தொகுத்த ஏழு சவால்கள்



1. பொருட்களின் உலகம் - " நேரடி சாட்சி" 

ஒரு சிறு அரை உண்மையை நீங்கள் கூறி, மீதி அரை உண்மையை நீங்கள் மறைத்தீர்கள் என்றால் சின்ன வயதிலிருந்து நீங்கள் ஆசைப்பட பல்வேறு பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் - உங்கள் முடிவு என்ன ? 

2. மனோராஜ்யம்  - "பதினான்காவது அறை " 

ஆழ்மனத்தின் சாகசங்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படுவன. உங்களுக்கு உள்ளேயே நிகழும் இந்த சாகசங்கள் குறித்து மற்றவர்களுக்கு எந்தக்  கவலையும் இல்லை - தொடர்ந்து உங்கள் வழியில் சாகசங்களை தொடர்வீர்களா இல்லை இப்படியான சாகசங்களை கைவிடுவீர்களா ? 

3. பழியின் பாதை  - " கருப்பு தொப்பி" 

நல்லவர்களின் சிலுவையை சுமப்பவர்களின் பெயர் என்ன? கெட்டவர்களா ? உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் - எல்லாரும் போற்றும் நல்லவர்களின் சிலுவையையா இல்லை நல்லவரின் சிலுவையை காப்பாற்ற யாருமறியாத பழியின் பாதையையா ? 

4. அறிவின் ஒப்பனை - " வங்கிக் கொள்ளை"

அறிவை ஒப்பனை என்று என்றாவது கருதி இருக்கிறீர்களா ? நம் அத்தனை திட்டங்களின் பின்னாலும் அறிவின் ஒப்பனை அடியாழமாக இருக்கிறது - தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் அறிவின் ஒப்பனை அறிவாலேயே களையப்படும் தருணங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? 

5. எதிர்காலத்தின் நிழல் - " கால எந்திரம் "

நம் தற்கால முனைப்புகள் எல்லாமே எதிர்காலத்தின் நிழல்கள் குறித்த அச்சத்தில் விளைபவையா ? எதிர்காலம் குறித்த நிச்சயம் நம் முனைப்புகளை கூர்மழுங்க செய்திடுமோ ? கால எந்திரம் கையில் கிடைத்தப் பிறகும் ஏன் நாம் அதிகம் கடந்த காலங்களுக்கு செல்வதில்லை ? எதிர் காலத்தில் அப்படி என்ன விசேஷம் ? என்றும் வராத எதிர்காலம் . உங்கள் கைகளில் கால எந்திரம் கிடைத்தால் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது ? எதிர்காலமா ? கடந்த காலமா ? - இல்லை நீங்கள் அந்த எந்திரத்தின் நாற்காலியிலிருந்து இறங்கி விடவே விரும்புகிறீர்களா ? ஞானிகள் செய்ததை போலவா ? 

6.ஒழுக்கமான விலங்கு எந்திரம்   - " விலங்கு பயிற்சியாளர்" 

நீங்கள் செய்யும் அத்தனை வேலைகளிலும் ஒழுங்கு மிளிர்கிறது - நீங்கள் அத்தகைய ஒழுங்கையே உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் எதிர்பார்க்கிறீர்கள் - விலங்கிலிருந்து ஒழுங்கை தருவிக்கும் அத்தனை யுத்திகளையும் நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உபயோகம் கருதி பழக்கப்பட்ட அத்தனை விலங்குகள் சார்பில் ஒரு கேள்வி ?   மனிதனை எந்த உபயோகம் கருதி பழக்கப்படுத்தி வைத்துள்ளோம் ? உணவின் தேவை பூர்த்தியான பிறகும் ஒழுங்கின் வட்டத்திற்குள் வர மனிதர்களும் துடிப்பதன் காரணம் என்ன ? 

7. உடைமையும் ஒழி முனைப்பும்  - " மரண மணி " 

 உங்களுக்கு பிடித்த ஒருவர் பிடிக்காத செயலை செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் - பிடித்த நபர் உங்கள் உடைமையா ? - உங்கள் வட்டத்தில் தொடர அவர் உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டுமா ? உங்களை பிடித்தவர் விரும்பியவற்றை மட்டும் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களா ? பிடிக்காததை ஒரு போதும் நீங்கள் செய்ததில்லை என்று கூற முடியுமா ? வட்டத்திற்கு புறம்பானவையை ஒழிக்க கோரும் மனதின் கேள்விகளை என்ன செய்தீர்கள் ? 

-------

பதினான்காவது அறை

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்  தொகுத்த மர்மக் கதைகள் , யூமா வாசுகி (தமிழில்)

Wednesday, March 01, 2023

பவதுக்கம் - இவான் கார்த்திக்

 




இப்பிறவி,

இத்தனை வலிகளை அறிய வேண்டியா

இத்தனை அவலங்களை  காண வேண்டியா

இத்தனை உடைமைகளை பதுக்க வேண்டியா

இத்தனை கீழ்மைகளை உணர வேண்டியா

இத்தனை இத்தனையையும் விலகி ஓட வேண்டியா

ஆம் ஆம் ஆம் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்

இத்தனை கோரம் இங்கேயா நடக்கிறது

இத்தனை அழகு இங்கேயா நிலவுகிறது 

ஒருவரை ஒருவர் பிண்ணி பிணைந்து உண்டு முடிக்கும் அழகின் கோரம்  

தாங்க முடியாத பெண் தெய்வமாக

தாங்க முடியாத ஆண் சொன்ன சொல் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்


Tuesday, January 31, 2023

புனிதமான குடிகாரன்

கடவுள் அவ்வளவு பிஸி இல்லை மனிதன் தான் பிஸி. அவனுக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன இதன் நடுவே அவன் எப்படி நேரில், கடவுளைப் போய் சந்திப்பது, இது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்.


மனிதன் பிஸியாக அப்படி என்ன செய்கிறான், அவனுக்கு நிறைய வேலைகள் இருக்கும் , அங்கும் இங்கும் அலைவது, சும்மா அமர்ந்திருப்பது, பணம் கிடைத்தால், செலவு செய்வது, சேர்த்து வைப்பது. இல்லையேலில்லை. அது சரி, அவன் எல்லா காலத்திலும் இப்படி இல்லை, இப்போது தான் கொஞ்ச வருடங்களாக.. மத்திம வயதை கடக்கையில் இப்படி ஆகிவிட்டது. கடந்த காலம் நகுலன் கூறியது போல் ஒரு இடமாக கூட இல்லை, இவன் அளவில் காலம் ஒரு புள்ளி போல் ஆகிவிட்டது, புகை மூட்டத்தில் ஒரு புள்ளி போல். எதிர்காலம் பற்றிய கவலைகள் குறித்து நீங்கள் கேட்கலாம், ஆனால் இவன் கொஞ்சம் ஞாபகமறதிக்காரன். எதிர்காலத்தை நினைவில் இருந்து மீட்க மறந்தவன். இப்படி முன்னதையும் பின்வருவனவற்றையும் இழந்த அவன் இன்று பிஸியாக இருக்கிறான். இப்படி இன்றை மட்டுமே கவனத்தில் கொள்வதால் இவன் ஒன்றும் தன்னை ஆன்மீக புலி என்று கருதுவதில்லை. ஆனால் சர்வ அலட்சியமாக ஒரு தினத்தில் இருந்து இன்னொரு தினத்துக்கு பொதியின்றி செல்கிறான். இப்படி கூறலாம்.. "காலத்தைக் கரைத்து குடித்தே விட்டான்.  .. முனைப்பின்றி நாகரீகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருக்கிறான்.." அனாவசியமான பெரிய வார்த்தைகள். பொருட்படுத்தாதீர்கள்.

ஞாபகமறதிக்காரன் என்றாலும் கொஞ்சம் ஞாபகம் மீதி வைத்திருப்பவன். அதற்கு காரணம் கடவுளின் அத்தனை அற்புதங்களும் அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக புலப்படுவது தான். மத்திம வயதில் புகை மூட்டத்தில் இருக்கும் ஒருவனிடம் கடவுள் தன் அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியபடி இருக்கிறார்.

இவன் பிஸி என்பதால் கடவுளை நேரில் சந்திக்க வாய்க்கவில்லை. ஞாபக மீதி நினைவூட்ட சந்திக்க முயன்றான். ஆனால் ஆயிரம் வேலைகள். பிழைப்பு, காதலிகள், நண்பர்கள், மது,மாது அலைவது, அமர்ந்திருப்பது. இப்படி பல முக்கியமான வேலைகள்.இதன் நடுவே அவன் எப்படி கடவுளைச் சந்திப்பான்.. ஆனால் முயன்றான். கடவுள் அவனுக்கு அளிக்காத, மத்திம காலம் அவனுக்கு அளித்த, புகைமூட்ட பிரக்ஞையை அவன் விரும்பியிருந்தான் என்றே தோன்றுகிறது.ஆனால் கடவுளைப் பாருங்கள், நேரில் வராவிட்டாலும், நல்லெண்ணத்துடன் தனது அற்புதங்களை,அவனை சீண்டியபடி  நடத்திக் கொண்டிருந்தார்.

கடவுள் தான் பிஸி இல்லையே, அவர் நேரில் வரவேண்டியது தானே? அவரும் வரவில்லை. இல்லை வந்தார் அல்லது வந்ததாக இவன் புரிந்து கொண்டான். அப்படியான தருணத்தில், அவனிடம் இருந்தவை மீதமிருந்த நினைவின் இரண்டு மலர் மொக்குகள். அவற்றைக் கூட கடவுளுக்கு கையளித்து விட்டு நினைவழிந்து நல்லபடி  மறைந்தான். அது நல்லதொரு மரணம். சித்திரகுப்தனின் ஏட்டில், நினைவின் சித்திரங்கள் ஏதுமற்று ஒரு பக்கம் காலியானது இப்படித்தான். பிரார்த்தனை தொடங்குகிறது. பிறவாமை வேண்டும். 

Monday, January 09, 2023

திருடன் மணியன் பிள்ளை

திருடன் மணியன் பிள்ளை

ஜி.ஆர். இந்துகோபன் 

மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப்

---


சாகசத்திற்கான மீண்டும் மீண்டும் விடப்படும் அழைப்பு.

அத்தனை வசீகர பயங்கர சாகசமும் கொடும் பாதாளத்தில் நடைபெறும்.

சாகச மனதின் தன்மை சூழல் அறிந்த உயர் அறி நிலை யோகம்.

யோகம் அளிக்கும் ஆப்த வாக்கியங்களின் கூர்மை.

விழுமியங்கள் உடனான முடிவில்லாத தொடர் பரிசீலனை.

குணங்களின் பண்பாட்டை பொது நியாயத்தை தக்க வைக்க அலைவுறும் சஞ்சல மனம்.

கொடும் பயங்கரங்கள் மறையும் மென் நகை மொழியின் வளம் விசித்திரம்.

மடித்து வைத்த நினைவுகளை சொல்லில் மீட்க முடிந்த சரஸ்வதி கடாக்க்ஷம்.

குற்றவுணர்ச்சியின் அகல் ஏந்திய வழி காட்டும் பந்தம்.

ராஜா வேஷம் போட்ட திருடன் இல்லை திருடன் வேஷம் போட்ட ராஜா.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டே இருப்பவன்.

கள்ளும் பெண்ணும் கூடிய  யாருமற்ற பகலையும் எதற்கும் துணிந்த இரவின் நிழலையும் கொண்டவன். 

நியதியின் எதிர் திசையில் சென்ற தனி மனிதன் ஒருவனின் வலி மிகுந்த பயணம்.


Thursday, December 29, 2022

மண் பொம்மை

குமாஸ்தா

ஆதியிலிருந்து, இருந்து வரும் இவ்வுலகத்தை ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கையில் பஞ்ச பூத  இயற்கை சக்திகள் தவிர அனைத்து விஷயங்களும் தோன்றி, சில காலம் நீடித்து, மறைந்து கொண்டே இருப்பதை நாம் ஓரளவு உணர்ந்தே இருக்கிறோம். இருப்பினும் இருக்கும் வரை நான் எனது என்று சொந்தம் கொண்டாட அனுபவிக்க அச்சம் காரணமாகவோ தேவை காரணமாகவோ வித விதமான விஷயங்களை நாம் உண்டாக்கி வைத்துள்ளோம். அச்சத்திற்கும் தேவைக்குமான அல்லாட்டத்தை நாம் குமாஸ்தாவின்  குழப்பத்தோடு அணுகுகிறோம். நம் குமாஸ்தா முஸ்தீப்புகள், பூமி தொடங்கிய நாள் முதல் நம் வாழ்வோடு பிணைந்துள்ள மண்ணின் தொடர்பை வலுவிழக்க செய்கின்றன.  மண் பொம்மைகளான நம்மை பொன் பொம்மைகள் என உணர செய்கின்றன. குமாஸ்தாவின் கூட்டலும் கழித்தலும் பிரித்தலும் வகுத்தலும் என்பதான சிடுக்கான கணக்குகள் எளிய தர்ம உண்மைகளிடம் இருந்து  நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகின்றன. முதல் மகன் பர்ஜு பதான் தனது தந்தை விட்டுச் சென்ற தர்மத்தின் வலிமையை உணர்ந்து, முதல் படியாக, குமாஸ்தா  உணர்வை துறக்கிறான்.



நுகர்வோன்

இரண்டாவது மகன் சக்டி, அனுபவிக்க பிறந்தவன். தான் அனுபவிக்கும் அனைத்திலும் மிதமான திருப்தியும் அநேக நேரங்களில் தீர்ந்து விடும் என்கிற  அச்சம் காரணமாக இன்னும் இன்னும் என்று கோரும் மனிதன்.வணிகர்களின் எடுப்பார் கைப்பிள்ளை.அகந்தையின் நான் என்னும் உணர்வின் வடிகால் வடிவம் அனைத்தும் அறிந்ததான ஒரு இறுமாப்பும் ஏமாந்து விட போகிறோம் என்கிற அச்சமும் கொண்ட நுகர்வோன் சக்டி.

மாமனிதன்

தந்தை சொல்லி உணர்த்திய தர்மம், தாய் காட்டிய கருணை, இவ்விரண்டும் எப்போதும் இப்பூமியில் இருந்து கொண்டே இருக்கும் விஷயங்கள். எனது உனது என்று பிரிக்க முடியாத இந்த தர்மத்தை  உணர்ந்தவன் பர்ஜு. தன் மௌனத்தின் வழி, அமைதியின் வழி தனது வைராக்க்கியத்தை கூர் தீட்டிக் கொள்கிறான். தன் பொருட்டோ பிறர் பொருட்டோ என்றில்லாது என்றும் உள்ள பிரிக்க முடியாத தர்மத்தின் பொருட்டு அவன் வைராக்கியம் மிளிர்கிறது. அவ்வொளியில் அவர்களையும் அறியாது பர்ஜுவின் மனைவியும் ஊர் மக்களும் திடமான மனமாற்றம் அடைகின்றனர். சற்று தாமதமாக நுகர்வோனும் வந்து சேருகிறான். தீமையை விட்டு சற்றே விலகி நின்று தீமை என்னும் மாயை மறையும் என்ற வைராக்கியத்தோடு வலம் வருகிறான் பர்ஜு.மின்னும் மண் பொம்மை பர்ஜு.


காளிந்தீசரண் பாணிக்ராஹி எழுதி 1934 ல் வெளிவந்த ஒரிய மொழி நாவல். ரா வீழிநாதன் இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருக்கிறார்.சாகித்திய அகாதெமி வெளியீடு. 1966 ல் மிருணாள் சென் இயக்கத்தில் படமாக வெளிவந்துள்ளது.

Saturday, December 03, 2022

Agent Kannayiram - A Subaltern Rhythm

Two Interviews

Towards end of the Movie we have two interviews that intrigue us. First Interview by the Doctor which turns out to be very articulate and cold followed by Interview of Mayavi which turns out to be Jubilant, mumbling and inarticulate. Contrast between these interviews is distinct. This contrast sets the paradigm to further understand the movie. In guise of a mystery solving detective , We have an Enterprising Kannayiram searching for his identity and Freedom. Movie is no longer a simple Murder Mystery but a layered movie on the subaltern. 

Gun 

After the two interviews,  Natural focus shifts to Kannayiram who seem to hand back the Gun given to him by his Father.  Father at last acknowledges him as his son. Kannayiram seem not interested in establishing a grand story on his quest for Freedom and his sense of achievement , After nailing the wrong, he seem really free and content absolutely devoid of any need to set the narrative, Gun which is of partial use to him until then is no longer needed - with the Gun he hands over the need to being supremacist, need for being dominant. 




Freedom 

What really is freedom ? Freedom from Birth ? Freedom from Circumstances ? Freedom from Religion? or shall we rephrase and ask- Will Birth guarantee freedom ? Will Religion Guarantee freedom ? Will our actions get us there ? Search continues until we handover our Hidden Prides back to centuries where it belongs and really be free and be in now. 

A Subaltern Milieu 

Movies gives us the full play view of the subaltern, Starting with their Innocence & Naivety We get a view of how affectionate they are. Continuing we see the Lumpenness in their attitude which transform sometimes to being brazen and uncouth providing a full play view. Movie's view of the subaltern people  is without any element of Judgement and anxiety - Mayavi( Pugazh) , Kingsley and Munishkanth play a perfect foil to bolster this subaltern narrative of the film. Kingsley and Munishkanth appear naïve and brazen against unintelligent Pugazh - Infact Munish's character can be seen as role played by Cinema actors in shaping subaltern politics. Maran and Dileepan who are involved in cracking this mystery succumb while taking the system head on, their names should ring a bell in terms of subaltern political view of Tamilnadu. 

Narrative 

Movie being a murder mystery is a medley of  disparate smaller events calling for an Intellect to join and set the motives & narratives behind the murders. In other words without the intellect or common narrative  , these events will remain disparate without any connection. This applies to Subaltern context as well, Set in Kongu region, Kannayiram in his quest for freedom and Identity binds the otherwise disparate events into a Narrative of horror, In this process he sets himself free from everything , even free from his own brethren. His Critical view of the subaltern throughout the movie is evident and unapologetic . With superb editing movie's bits and pieces keep coming together, We have plethora of images subtly nudging us to see the subaltern subtext. Music takes up the mantle to expound on the Individual's search for Identity and Freedom which resonate well with any discerning Individual who really wants to be free and reasonable.   

Saturday, October 01, 2022

Naane Varuven

Fantastic Film, Extraordinary performance from Dhanush to a chilling portending musical score. Splendid camera work and imagery.  Don't miss to watch in theatres. #NaaneVaruven


Story of three fathers, One Father begetting two others to set up the everlasting clash between the good and the evil. Story of three helpless mothers held at the mercy of fathers dance and whims either through brute force or by subtle pressure. Story of a male ego, 'naane' which arrives in time all the time to move the wheel further. Story of mankind from hunting gathering to deskjob eking out a living, Kathir like prabhu leaves home to  carry out hunting as if it's a Office job. Story of how we moved from Feudal Slaving Outdoors to Modern Surveillancing Seclusion. Story of Killing of fathers generation after generation to tame the animal in Man. Story of twin instincts, both delicately close to each other, one coercing to take out other lives while other instinct is ready to Offer its life for others. Story of how long it took for a war mongering Hero turns himself into a puny confused modern considerate logical man. Story of man turning into woman leading the actual women into a unknown vacuum.Story of how we have chosen to remain in secluded individual rooms against open green forests over a period of time ? 

What do one do against pure evil ? Where does the roots of evil lie ? Can we abandon evil so that it is gone ? Will evil perish by itself if we abandon ? Can we use force to remove the evil ? By Anhilating Evil did Good get a taste of what it is like being evil ? 

Thursday, September 01, 2022

நட்சத்திரம் நகர்கிறது

 Expected a Novel, turned out to be a good newspaper at best, Can you be fiercely individualistic but preach on universal love ? If you hang on to the past can you love freely in the present ? Can you stay a knowledge  supremacist but still write lectures on how to Love ? Can you utter words above words on Love, making it pale , a poor memory of our referential verbalised past and Wonder at love ?   Ranjith tries to swim in ocean and a well at the same time . He could not breach on screen, the fortresses he himself has created in the process of making this movie about love.


Is not love entirely thing of the present where time and experiencer cease to exist ? Is there an other in Love ?  Ranjith s constant glare on the other or his inclination to express himself as a reaction to the other creates two sets of people,one set of converts who apologise being on the wrong till that point and embrace and join hands ,two set of non converts who play as  the constant convenient villain, as idealised by any liberal, in Creating  disturbances throughout. This indulgence to glare at, as the other, minimises the possibility of Communion and flowering of love. Love in brief moments appear in the film keeps us floating only to be pulled down by Individual Self Assertion,Chained Past, Knowledge Supremacy and Empty Verbalization.

#natchathiramnagargirathu


ஒரு நாவலை எதிர்பார்த்து சென்றவனுக்கு நல்ல நாளிதழ் வாசிக்கக் கிடைத்தது போல். தீவிர தன்முனைப்புடன் இருக்கையில் தீவிர காதலில் இருக்க முடியுமா ? பழையதை விடாது பிடித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் காதல் தருணங்களில் தன்னை மறக்க இயலுமா ? புத்தக அறிவை அறிந்தவை குறித்த பெருமிதம் தொனிக்கும் ஒருவன் "நான்" கரையும் காதல் பாடங்கள் எடுக்க இயலுமா ? வார்த்தைகள் மீது வார்த்தைகள் அடுக்கி காதலை மிகவும் பழைய நலிந்த வார்த்தைகளால் விவரித்து சொல்பவன் காதலின் மௌன அற்புதத்தை உணர்ந்திருப்பானா ?

கிணற்றிலும் சமுத்திரத்திலும் ஒரே நேரத்தில் நீந்துவது போன்ற பாவனை எடுபடுமா ?  காதல் குறித்த இந்தப்  படம் வளர்கையில்,  உண்டாகிய கோட்டைகள் தகர்க்கப் படவில்லை. காதல் இக்கோட்டைகளின் சிறையில் இருந்து மீளவில்லை. 

காதல் ஒரு தனிப்பெரும் கருணை, காலமும்  அனுபவிப்பனும் கரைந்து இல்லாது ஆகும் அற்புதம் காதல். காதலில் இன்னொருவர் என்று ஒருவர் இருக்க முடியுமா ? ரஞ்சித் இன் பெரும்பாலான படங்களில்  "இன்னொருவர்" என்பவர் குறித்தே பெரும்பாலான உரையாடல் கட்டமைக்க படுகிறது. இந்த இன்னொருவரில் இரு பிரிவினர், ஒன்று தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக்கு மன்றாடும் பிரிவினர், இரண்டு, தவறு எதுவும் நிகழவில்லை எப்போதும் போல் இனியும் தொடரும் என்ற பிரிவினர், இரண்டாமவர் லிபேரல்களின் "கனவு வில்லன்". படத்தின் பெரும்பாலான உரையாடல் இவ்விரு பிரிவினரை குறித்தே அமைந்து விடுவதால், நேர்மறையான காதல் குறித்து உரையாட மிகவும் குறைவான நேரமே அமைகிறது. காதல் குறித்த அற்புதமான தருணங்கள் ஆங்காங்கே இருந்தாலும் , தீவிர தன்முனைப்பு, பழையவற்றுடன் நம்மை பிணைக்கும் இறுக்கமான சங்கிலிகள், நம் புத்தக சிற்றறிவு குறித்த காலிப் பெருமிதம், இவையோடு நம் சோகையான தேய்வழக்குகளில்  வார்த்தைகளில் காதலை விளக்க முற்படுகையில், காதல் முழுமையாக மலர்வதில்லை. காதலில் இன்னொருவர் இல்லை, காதல் மட்டுமே உள்ளது. 

#நட்சத்திரம்நகர்கிறது

#natchathiramnagargirathu

Monday, August 15, 2022

ஸெர்யோஷா - வேரா பானோவா

இரு கண்கள் - அன்பின் கனிவின் பாதையை காட்டும் ஒரு கண் , குழந்தைமையின் உற்சாகத்தின் பாதையை காட்டும் இன்னொரு கண்.



சிறு வயதில் நாம் அத்தனை உற்சாகமாக இருந்திருக்கிறோம் அத்தனை ஆற்றலுடன், எந்த ஒரு வேலையையும் ,அத்தனையையும் செய்து முடிக்க முடியும், உலகின் எந்த மூலைக்கும் நம்மால் செல்ல முடியும் என்று எண்ணியிருக்கிறோம்.அத்தனை உற்சாகமாக களங்கமில்லாத ஆற்றலுடன் நாம் இருந்திருக்கிறோம்..  மாலுமிகளின் கதைகளில் உற்சாகத்தையும் வழிப்போக்கர்களின் கதைகளில்  கனிவையும் நாம் கற்றோம். விடாது ஊற்றெடுக்கும் நம் கேள்விகளுக்கு மிகுந்த கனிவுடன் பெரியவர்கள் பதிலளித்துக் கொண்டே இருக்கையில் நாமும் பெரியவர்கள் ஆகி விட்டோம். மிகுந்த பொறுப்புடன் கனிவுடன் நாம் வேலைகளை கவனிக்க துவங்கி விட்டோம்.சில நேரங்களில் தகவல்களும் பல நேரங்களில் அலுவல்களும் நம்மை குழப்பினாலும்  நாமும் நம்மை விட சிறியவர்களின் கேள்விக்கு மிகுந்த கனிவுடன் பதிலளிக்க துவங்கி விட்டோம். ஒரு கண்ணின் உற்சாக சிமிட்டல்களை நாம் மறக்கவில்லை.. மறு கண்ணில் கனிவுடன் நாம் அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். இரு கண்களின் வழி த்துணை கொண்டு நாம் வாழ்வதே நல்லது என்று இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிகிறது. 

நல்ல வரி ஒன்றும் இப்புத்தகத்தில் இருந்தது -" அன்பிற்கு உகந்த எதுவும் சுமையாக இருக்க முடியாது" 

---

தமிழில் பூ.சோமசுந்தரம்

நூல்வனம் வெளியீடு


Wednesday, July 13, 2022

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

ஹெச். எஸ். சிவபிரகாஷ்

தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன்


-------------




குருவின் பாதம் பணிவோம் 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் நமச்சிவாய 

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

கவனி உள்ளிழு ஆற்றுப்படுத்து வெளியேற்று 

மனம் எனும் குரங்கு 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்...கடமையை செய், பலனை எதிர்பாராதே..செய்யும் தொழிலே தெய்வம்..

கலை - மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்


"எல்லோருக்கும் புரிகிறது

ஒற்றைத் துளி கடலுடன் ஒன்றுகலப்பது

இலட்சத்தில் ஒருவருக்கே புரிகிறது

கடல் ஒற்றைத் துளியுடன் ஒன்று கலப்பது "

Saturday, July 02, 2022

பூமியெங்கும் பூரணியின் நிழல் - குமாரநந்தன்

பூமியெங்கும் பூரணியின் நிழல் சிறுகதை தொகுப்பு வாசித்தேன்.கதைகளை வாசிக்கையில் தோன்றிய சில...


நாம்  காணவியலாத, புறத்தை விட பன் மடங்கு பல்கி பெருகிக் கொண்டே இருக்கும் அக உலகின் அநேக பரிமாணங்களை உணர்த்தியபடியே செல்லும் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. 

அகம் சுட்டும் விஷயம் அல்லது அகத்தில் தெரிவது அல்லது நம் அகம் தான் என்ன ? , நடந்த நிகழ்வின் நினைவுப் பதிவா ? நடக்காத நம் பகற்கனவா ? ஊருக்கு நாம் கட்டிய வேஷத்தின் மனக் குமுறலா ? நம் வக்கிர ஆசைகளுக்கு ஒரு எளிய வடிகாலா ? நம் குரங்கு மனதின் திடீர் ஆசையா ? குற்றஉணர்வு ஒய்யாரமாக நடை பயிலும் ராஜபாட்டையா ?   சுகமும் துக்கமும் ஒன்றை ஒன்று விரட்டியபடி செல்லும் மேகக் கூட்டமா ? எல்லையில்லா விஷயத்தை வார்த்தையில் சொல்ல முயலும் வலைப்பின்ன உளறலா  ?  நாம் காண்கையில் ஒடிக்கொண்டே நின்று கொண்டிருக்கும் பிரவாக கானலா ? நிரம்பிக்கொண்டே இருக்கும் ஓட்டைப் பாத்திரமா நம் அகம் ? 

கதைகள் உலகில் எளிதில் நுழைய முடிகிறது. எண்ணம் விடு சொல், சொல் விடு செயல், செயல் விடு எண்ணம் என தொடர்புள்ளது போலவும் தொடர்பிலாதது போலவும் போக்கு காட்டும் நம் எண்ணங்களை கதைகள் ஆக்கி இருக்கிறீர்கள். எண்ணத்தை விரட்ட சொல், சொல்லை விரட்ட செயல், செயல் வினை பிரவாகம் நிறுத்த இயலாத பல மடங்கு எண்ணங்களை பல மடங்கு  சொற்களை கொண்டு சேர்க்க, செயல் தடுமாற்றம். 

நதி, மழையை இயக்குபவன், சபிக்கப்பட்ட நிலம் கதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக மழையை இயக்குபவன் கதை நின்ற இடத்திலேயே மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் எண்ணங்கள் முடிவுகள் என தொகுப்பின் அனைத்து கதைகளின் மென் எதிரொலி போல அமைந்திருந்தது. 

இத்தனை உலகங்கள் கொண்ட ஒரு மனிதன் ஒற்றை உண்மையை தேடுவது இயல்பே ஒரு வேளை ஓட்ட நிறுத்த முயற்சியோ ? 

ஒரு நபர் ஏதோவொரு விஷயம் காரணமாக பிடிக்காத நபர் ஆகி விடுகிறார். அதன் பிறகு அந்த விஷயத்தை வேறெங்கேயும்  வேறு யாரோ வெளிப்படுத்தினாலும் அவ்விஷயம்  நமக்கு முதல் நபரின் சாயலிலேயே காட்சி அளிக்கிறது. 

பிடிக்காத நபர் செய்தவை பாதி, அவர் செய்ததை எண்ணி எண்ணி துன்புறும் இன்பத்தில் அவர் செய்யாததையும் நாம் துல்லியமாக காட்சிப்படுத்தி அல்லது செவிமடுத்து நம் அகத்தை கோபத்தால் நிறைப்போம். அந்நேரத்தில் அந்த பிடிக்காத நபர் நமக்கு தற்சமயம் நல்லதே செய்துக் கொண்டிருந்தாலும் நாம் காட்சிப்படுத்திய அல்லது செவிமடுத்த கற்பனை அத்தனை துல்லியமாக இருக்கும் காரணத்தால், நம் கோபம் பன் மடங்கு அதிகரிக்கும். மனதின் விந்தைகளில் இதுவும் ஒன்று.

Friday, June 24, 2022

சித்தன் சரிதம் - சாந்தன்

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை மிகுந்த நிதானத்தோடு சொல்லிச் செல்லும் நாவல் 'சித்தன் சரிதம்'. கதை நாயகன் சித்தனின் வாழ்வின் தேர்ந்த நிகழ்வுகளை பதிவு செய்த வண்ணம்  நாவல் வளர்கிறது. குறிப்பிட்ட இலக்கையோ முடிச்சையோ மையப்படுத்தாது சித்தனின் பால்யம் தொடங்கி முதுமை வரை அவர் வாழ்வின் சுவையான கனமான நிகழ்வுகளை அவனது குடும்பத்தை, சுற்றத்தை, நண்பர்களை குறித்து பேசி செல்கிறது இந்த நாவல்.


சினிமா பாடல்கள்,  நவீன சாதனங்களின் வருகை  நகரமயமாதல், தமிழ் சிங்கள பிரிவினைகள், தமிழ் சாதி பிரிவினைகள், ஈழப்போர் என எளிய கலாச்சார விஷயங்களில் தொடங்கி தீவிரமான சூழலில் நிறைகிறது சித்தன் சரிதம்

நாவலின் மிகப்பெரிய பலம் ஈழத்தமிழ் வழக்கும் நடையும் ,  அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ள புறக்காட்சிகளின் விவரிப்பும். கிட்டத்தட்ட பெரிய இலக்கு இல்லாத திசை இல்லாத  சுயசரிதத்தன்மை உடைய இந்த நாவலின் கலையம்சம் கூடி வந்தமைக்கு காரணம் மேற்கூறிய இவ்விரண்டு விஷயங்களே. 

நிகழ்வுகளை உயிர்ப்புடன் பதிவு செய்யவே நாவல் முயல்கிறது, மேலதிகமாக போர் சூழல் குறித்தோ சரிதவறு சார்பு நிலை விவாதங்களுக்குள் நாவல் செல்ல மறுக்கிறது. ஈழப்போர் ,சித்தனுக்கும் அவரை போன்றவர்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரு தொடர் நிகழ்வாக அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகி விடுகிறது. போர் குறித்த தர்க்கங்களுக்குள் புகமால் போரின் தாக்கத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்ளும் பிரயத்தனத்தை  யதார்த்த எல்லையிலேயே நாவல் விசாரிக்க முயல்கிறது. போரின் காரண காரியங்கள் நாவல் கதை மாந்தர் தம் உணர்வு உலகிற்கு அப்பால் எங்கோ யாரோ முடிவு செய்ய, ஒவ்வொரு குடும்பமும் தன்னால் ஆனதை செய்து தினப்படி வாழ்வை எதிர் கொள்கிறன. நாவலில் மூன்றாம் பகுதி மிகுந்த கலை அமைதியுடன் அமைந்திருக்கிறது. இயற்கையை எதிர்காலத்தை நம்பியே இக்குடும்பங்கள் தங்கள் பயணங்களை தொடர்கின்றன.

முழு நிலவில் இரவில் பட்டத்தை சித்தன் காண்பதும், தென்மராச்சியில் சட்டென திரும்பிய கூட்டு வாழ்க்கை முறையை சித்தன் உணர்வதும், சோழகம் குறித்த துவக்க குறிப்பும், சோழகம் குறித்த நாவலின் நிறைவு வரியாக அம்மா கூறுவதும், கண்ணை விலக்காது சித்தன் நிலவில் முழுகிய நிலப்பரப்பை காணும் இடங்களும் என்றும் நினைவில் இருக்கும். நிலவும் பாடல்களும் புத்தகங்களும் உடலுழைப்பும் போதுமே வேறென்ன வேண்டும். 


Saturday, June 11, 2022

777 Charlie



தனிமை. எதேச்சையின் கைகளோ நீங்களாகவோ ஏற்படுத்திய தனிமை. மூர்க்கத்தை கவசமாய் கொண்டு அர்த்தமில்லாத தனிமை மலையின் விளிம்பில் நிற்கும் நீங்கள். 

நீங்கள் மீண்டும் எதேச்சையாக தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள். இம்முறை அந்தக் கரம் உங்களை விளக்க முடியாத பெரிய விஷயம் ஒன்றோடு பிணைக்கிறது. புதிய பிணைப்பை ஏற்க முடியாத நீங்கள் கைகளை  உதறி ஓட முயல்கிறீர்கள்.

வெளியே தெரியாமல் சிறிதாக ஒளித்து வைத்து மறைத்து விடலாம் என்று நீங்கள் நினைக்கும் அந்த விஷயம் பெரிதாகி உங்களை சூழத் தொடங்குகிறது.குழந்தை ஒன்று  உங்களுக்கு அளிக்கும் வண்ண சித்திரம் வழி அந்த பெரிய விஷயத்துக்கு உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். ஒப்பு கொண்ட விஷயத்தின் தீவிரம்  கூடுகையில் தான் தெரிய வருகிறது உங்களுக்கான காலமும் நேரமும் மிகக் குறைவு என்று.

தனிமை அர்த்தம் பெறத் துவங்குகிறது. நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரோடு ஒருவர் பிரிக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் - பயணம் உங்களுக்கானதா அல்லது அந்தப் பெரிய விஷயத்தின் பொருட்டா என்று புலப்படாத வண்ணம் ஒன்றை ஒன்று இட்டு சென்றபடியே, உங்களால் செய்யக்கூடிய விஷயங்களின் எல்லை விரிவடைந்து கொண்டே வருகிறது. உலகத்தார் போற்றியும் தூற்றியும் உங்கள் பயணம் இறுதி கட்டத்தை எட்டுகிறது.

இறுதிக் கட்டத்தில் உங்கள் உடைமைகளை இழக்கத் தொடங்குகிறீர்கள். மற்றவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. தனிமை பனிப்பாலையில் நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தபடி, யாருக்கு யார் வழி காட்டுகிறார் என்று தெரியாத வண்ணம் பயணம் நீள்கையில் ஒரு கனவு,ஒரு நனவு. 

கனவில் நீங்கள் பெரிய விஷயத்தை எட்டியதாக  இலக்கை எட்டியதாக எண்ணி மகிழ்கிறீர்கள். 

நனவில் பெரிய விஷயம் உங்களை வேறொரு இடத்திற்கு இட்டு செல்கிறது.. அது ஒரு வீடாகவும் கோவிலாகவும் இருக்கிறது. அங்கே நீங்கள் ஏறக்குறைய இறைவன் இருக்கும் இடத்தில், இன்னொரு பெரிய விஷயத்தை கண்டடைகிறீர்கள்.  ஆதி கருமையை, ஆதி இருட்டை விலக்கும் முதல் அசைவை நினைவூட்டும் அந்த விஷயம். உங்கள் வினை தொடர்கிறது. அவ்வினையின் எளிய சித்திரம் சிறு குழந்தையின் கைகளில் தொடங்கியதை நீங்கள் நினைவு கூர்கிறீர்கள். நல்வினை ஏறக்குறைய இறைவன். அவர்  உங்கள் கைகளில் சிறு கருமைப் பந்தாக புரண்டு படுக்கிறார்..வினை தொடர்கிறது.