Friday, December 31, 2021

Three Floors - Nanni Moretti

You don't have only three Choices

Happy about being  Rich Virtuous and  Discplined  but fuelling a secret desire to break out

Happy about chasing milestones and meeting deadlines to get educated but constantly bask in guilt and redemption

Happy living through hard labour only to exhaust  yourself fully and attempt to run away

You had those three choices 

Now You can Dance 



Wednesday, December 22, 2021

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன்

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன் அவர்கள் எழுதிய 14  சிறுகதைகளின் தொகுப்பு. முதல் புத்தகம்.


தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை - ஆசிரியரே முதல் வரியிலேயே தானாகவே போட்டுடைத்து குறிப்பிடும்  கரமசோவ் சகோதரர்கள் கத்ரீனா - டிமிட்ரி சாயலில் அமைந்த ஒரு சிறுகதை,  தலைப்பே நன்றாக அமைந்து விட்டதே மேலதிக நாவல் அல்லது ஆசிரியர் சம்பந்தப்பட்ட குறிப்புக்கள் சிறுகதையின் வீச்சை குறைக்கிறது என்பதே உண்மை. நாவலில் வருவது போன்ற சம்பவம் எனினும் இது முற்றிலும் வேறு நூற்றாண்டில் வேறு ஒரு சூழலில் நடக்கிறது -  எண்ணூறு பக்க நாவலின் ஒரு பகுதியை சிறுகதையின் பத்து பக்க குறிப்புகளில் காண்பது ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் ஆனால் கடினம். 

ஷெனாய் கசிந்து கொண்டிருக்கிறது , உலவ ஒரு வெளி , பிளவு  -  தேர்ந்தெடுத்த  ஒரு பிரகடனமோ அல்லது முன்னமே பொது வெளியில் உள்ள பிரகடனங்கள் குறித்த கச்சிதமான எதிர்வினையாக அமைந்துள்ளன. சிறுகதைகளாக  அல்ல . தமாஷ் சும்மா எழுதிப் பார்த்த கதை -  Monologue ஆ அமைந்ததால் இருக்கலாம்.

ஜனனம், நீலம், பிம்பம் - நன்றாய் அமைந்திருக்கும் கதைகள் - தந்தை மகன் உறவுகளை நாம் இன்னும் விரித்துப் பேச வாய்ப்பை வழங்குகிறது - மகனிற்கு மூன்று வாய்ப்புகள் அவன் முன்னே உள்ளன - ஜனனம் கதையில் வருவது போல்  தந்தையை நிராகரித்தல் அல்லது நீலம் கதையில் அமைந்தது போல் ஒரு விலகலு டன் எட்ட நிற்பது , அல்லது பிம்பம் கதையில் வருவது போல் தந்தை மகன் ஒருவரோடு ஒருவர் கரையும் நிலை. இவை கட்ட சட்டமான விதி அல்ல. தன் தந்தையை கூர்ந்து கவனித்து வந்ததாக தனது வலைப்பதிவில் சர்வோத்தமன் குறிப்பிட்ட்டிருக்கிறார் - இக்கதைகள் அவற்றின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

பூதக்கண்ணாடி, சவரக்கத்தி, உதவி, டிராகன், நடிகர் - மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்த கதைகள் - சமகாலத்தின் பொதுக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள கதைகள் - ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்க ஏற்ற கதைகளும் கூட , கதைகளின் உட்ப்ரதி அல்லது அக்கதையின் கண்ணோட்டம் பின் வரும் எல்லைகளில் அமைந்துள்ளது - 

பூதக்கண்ணாடி - நண்பர்கள் இருவருக்குமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனால் செயல்களாலும் நிகழ்வுகளாலும் புரிந்துக்கொள்ளப்படும் ஊடாட்டம் குறித்து பேசுகிறது - சிறிது ஆசிரியர் பார்வையும் கதையை விளக்க முயல்ககையில் கதையின் கலைத்தன்மை குறைந்ந்தாலும் பேச பொருள் மூலம் மிக முக்கியமான இடத்தை தொட்டிருக்கிறது. நட்பை மீறிய எதோ ஒன்று வாழ்வில் அடைய இருப்பது போலவும் இல்லாதது போலவும் உள்ளதாகவும் மனதில் பதிந்தது -  முப்பதை  நெருங்கும் நண்பர்களிடேயே பேசுபொருளாக உள்ள " செட்டில் " ஆகும் அம்சம் குறித்த ஊடாட்டம் இந்தக் கதை, நண்பனே ஒருவனுக்கு  போட்டியாளன் ஆகும் பரவலான நிலையும் , ஒருவனை விட தாழ்ந்த நிலையில் ? இருக்கும் இன்னொருவனின் அண்மையை நாடும் இடங்களின் உண்மை இக்கதையின் பலம். முன்னே கூறியது போல் ஆசிரியர் சற்று தேவைக்கு அதிகமாகவே இப்புள்ளியை விளக்குகையில் கதையின் கலைத்தன்மை குறைகிறது.  

சவரக்கத்தி , நடிகர் - கதைகள் - நாம் தற்காலங்களில்  எல்லா விஷயங்களிலும் ஊடுருவி அறிய விரும்பும் போக்கை குறித்து - ஏன் எப்படி எவ்வாறு என்று நுண் தகவல்களால், நிச்சயத்தன்மையை  முடிவிலி வரை அறிய விரும்பும் நவீன மனிதனின் ஆராயும் போக்கை பிரதிபலிக்கின்றன - சில விஷயங்களை ஊடுருவாமல் ஆராயாமல் நம்மால் இன்று இருக்க முடியுமா என்பது சந்தேகமே, நடிகர் கதை பாரதிமணி அவர்களின் பாதிப்பில் உருவானதாக வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் 

உதவி - ஒரு விஷயத்திற்கு தகுதி ஏற்படும் முன்னரே நம் பேராசையின் காரணமாக நாம் அதை அடைய நினைக்கையில்  நாமே உருவாக்கி கொள்ளும் பாவனைகள் பரிதாபங்கள் குறித்த கதை இது, பிம்பம்கதையிலும் இது வெளிப்படுகிறது - நம் சராசரி தன்மையை எல்லையற்ற பாவனைகளால் நாம் மறைக்க முயல்கிறோம். என்றோ திரை விலகுகையில் நாம் தலை குனிகிறோம். இருப்பினும் விடாது நாம் மேலதிக பாவனைகள் கொண்டு நம்மை நாமே திசைதிருப்பிக்  கொள்கிறோம். சினிமா ஆசை சம்பந்தப்பட்ட பின்னணி கொண்டது இக்கதை . 

டிராகன் - மிகவும் நுட்பமான கதை - நாம் "சமரசம்" "Adjustment"  என்று எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கூறிக்கொண்டிருக்கையில் சட்டென கத்தி நம் பக்கம் திரும்புவதான கதை - எதிர்பாராத கண்ணோட்டத்தில் முடியும் கதை 

தனிப்பெருங்கருணை - காகிதக் கூடு நிகழ்வுக்காக முன்னமே வாசித்தது - , நம் மரபின் அத்தனை ஆன்மீக பார்வைகளும் பின் புலமாகவும் செயலின்மை முதல் அதீதம் வரை , அனைத்தையும் இணைக்க வல்ல மைய தரிசனமான பேரொளியை அறிய ஒரு குறியீட்டு கதையாக  அமைந்தது இக்கதை , மரபான இன்னொரு கதையான பிள்ளையார் முருகன் உமை சிவன் குடும்ப கதையும் பிரித்தளிக்க முடியாத ஞானப்பழத்தை குறித்தும் இணைத்து வாசித்தேன். 

அட்டைப்படம் அருமை - கல்மனிதன் கணினி நிரல் வழி அவனது பிரித்து வைக்கப்பட்ட பாகங்கள்  இணைக்கப்பட்டு  தன்னை வெளிப்படுத்தத்  துவங்குவது போல.

சர்வோத்தமனின் அடுத்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பேன். 

Tuesday, December 21, 2021

ஆறுமுகசாமியின் ஆடுகள் - சா கந்தசாமி

நற்றிணை யுகன் மற்றும் சா கந்தசாமி அவர்களின் தேர்வில் 2011 ல் நற்றிணை வெளியீடாக வந்துள்ள 18 கதைகளின் தொகுப்பு.



பெரும்பாலான கதைகள் vignettes போல கதாப்பாத்திர சம்பாஷனைகள் வழி  நகர்கின்றன.  எளிதான உரையாடல் போல தோன்றினாலும் உறவுகளுக்கு இடையே உள்ள நுட்பமான, அபத்தமான,  உணர்வுப்பூர்வமான இடங்களை தொட்டுச் செல்கிறது. கதைகளின் போக்கு,பொதுவான உட்பிரதி, தத்துவம் என்று கருதினால் நுட்பம், உணர்வெழுச்சி, அபத்தம் என்று இந்தக் கதைகளை வரையறை செய்யலாம்.

தக்கையின் மீது நான்கு கண்கள், சாந்தகுமாரி கதைகளை நுட்ப வரிசை கதைகளில் தலையாயன எனச் சொல்லலாம். உறவுகளுக்கிடையேயான நுட்பமான எல்லையை எந்த வித அலட்டலுமின்றி சொல்லும் கதைகள், கதைகளின் இறுதியில் வாசகன் கண்டடையும் இடங்கள் ஒரு ஆர்பாட்டம் இல்லாத அதிர்ச்சி தரும் இடங்கள். 

வான்கூவர்,உயிர்கள் மற்றும் அப்பா கதைகள் காட்டும் உறவுகளின் உணர்ச்சி கொந்தளிப்புகள் மிகவும் உண்மையாக மனதுக்கு நெருக்கமாக அமைந்தன. குறிப்பாக "வான்கூவர்" கதையில் பாட்டியின் மடியில் கதை கேட்கும் சிறுவன் பறக்க துவங்குவதாக நினைத்து கொள்ளும் இடங்கள் - உறவுகள் பரஸ்பரம் ஏற்படுத்தும் உணர்வு நிலையே பொருந்த சொல்ல மிகவும் நல்லதொரு உருவகமாக இந்த இடம் இருக்கிறது. 

கதைகளில் தீடீரென ஒரு கை தோன்றி மொத்த ஆட்டத்தையும் தெளிந்த நீரோடையை கலைக்க முயலும், அந்தக் கையை நாம் சா கந்தசாமியின் கதைள் வழி அபத்தம் என்று வரையறைப்படுத்த முயலலாம். இன்னதென்று வரையறுக்க முயல்கையில் அவற்றினின்று தப்பி நிகழும் இடங்களும் இவர் கதை உலகில் உள்ளன, தீராத வலி பற்றிய "மாய வலி "கதையும் , நான் மிகவும் ரசித்த "எதிர்முனை" கதையும் நாம் இன்னும் வரையறுத்து கொள்ளாத இடங்களை பற்றி பேசுகின்றன. 

அமி தனது கதைகளின் முக்கிய போக்காக evasion தப்பித்தல் என்று குறிப்பிடுகிறார், சா கந்தசாமி அவர்களின் கதை உலகத்தின் பிரதானம் "acceptance" என்று கருத வாய்ப்புள்ளது.

சா கந்தசாமி,முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார் "இலக்கிய படிப்பு அப்படியொன்றும் வாழ்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வது தான் முக்கியம். பணம் சம்பாதிப்பது தான் அவசியம் .பணம் சம்பாதிக்க ஆளாய் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாது தான்.எல்லாருக்கும் எல்லாம் என்பது கிடையாது.எல்லாரும் ஒன்று என்பது உயர்ந்த இலட்சியந்தான். ஆனால் ஒன்றில்லை என்பது நிதர்சனம். அக்கறை கொண்டவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள்.அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்று தான்.அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையில், வாழும் ஒரு நல்வாழ்க்கை வாழ இலக்கியம் தன்னளவில் துணை செய்கிறது. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனை படிப்பது தான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாக சொல்லப்படுகிறார்கள்".

Monday, December 20, 2021

ஜெயகாந்தனின் ராஜபாட்டை

ஒர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் பகுதி 1 முன் வைத்து - 


இந்தியா விடுதலை பெற்றபின் நாடெங்கும் எழுந்த லட்சிய எழுச்சியின் ஒரு முகம் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையின் அசுர வளர்ச்சி, அந்த பின்னணியிலேயே அவரின் எழுத்தின் வெற்றியை அவர் பார்க்கிறார் இந்தப் பெருந்தன்மை நலம். அரசியல் சினிமா இலக்கியம் இம்மூன்றிலும் முத்திரை பதித்தாலும் அமைப்பு சாரா "பொதுக்குரல்" ஜெயகாந்தன். பல்வகை மனிதர்களின் அனுபவங்களின் மனசாட்சியின் திரட்டு இந்தப் "பொதுக்குரல்". பெரு நெறி என்னும் தனிமத சுதந்திரத்தை வலுவாக முன்வைத்த இந்தப் "பொதுக்குரல்", இதன் நீட்சியாக அவர் தனக்காக வகுத்தது  "லௌகீகத்திற்கான எல்லை ". இவ்விரண்டு விஷயங்களும் இன்று எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாது வாசகனுக்கும் அவர் விட்டுச் சென்ற ராஜபாட்டை.

Tuesday, December 14, 2021

காலக்கண்ணாடி - அசோகமித்திரன்

கணையாழி தொடங்கியது முதல் 1988 வரையிலான அசோகமித்திரனின் கட்டுரைகள்,  அவரது பொறுப்பாசிரியர் குறிப்புகள் அடங்கிய நூல், 1965 ல் தொடங்கும் முதல் கட்டுரை கால வரிசைப்படி 1988 வரை அமைந்துள்ளது , 1996 ல் எழுதப்பட்ட கணையாழி தொடர்பான குறிப்புகள் கடைசி அத்தியாயமாக,  நூல் நிறைவு பெறுகிறது. நூலின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள, பக்க எண்ணுடன் கூடிய  பொருள் பெயரகராதி  சிறப்பு. 


ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் இலக்கிய, சமூக ,அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கட்டுரைகள் கொண்ட நூல் இது, அந்த நாளைய பரபரப்பின் உடனடி எதிர்வினைகள்  தொடங்கி படைப்பிலக்கியத்தின் தத்துவம் குறித்த குறிப்புகள் வரை கொண்ட நூல். வெவ்வேறு நூல்கள் ஆளுமைகள் குறித்த அறிமுக நூலாகவும் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. நூலின் உள்ளடக்கத்தை குறிப்புகளாக எழுதவும் , பிடித்த பகுதிகளை சற்று விரிவாக தொகுக்கவுமே இந்தப் பதிவு 

நூலின் உள்ளடக்கம் குறித்த தேர்ந்தெடுத்த குறிப்புகள் 

டால்ஸ்டாய் எழுதிய தொடர்கதை (1965)

ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட நாடுகள் - இங்கிலாந்து அமெரிக்க இலக்கியம்  தொடங்கி , இலங்கை தமிழ் இலக்கியம் அவற்றிற்கு  தமிழ்நாடு வாசக மற்றும் பதிப்புலகம் அளிக்கும் இடம் குறித்த விரிவான குறிப்புகள். (1969) , இவ்வாறான ஒரு கட்டுரையின் தலைப்பு "சேதுவின் இரு கரைகள்" (1978).

சமீக் க்ஷா என்றொரு மலையாள இதழ் குறித்த குறிப்பு - மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன  1) இந்திய இலக்கியம் 2) மறுமலர்ச்சி 3) புதியன - இவற்றில் மலையாள எழுத்தாளர் ஆனந்த் எழுதிய நூல் பற்றிய குறிப்பு வருகிறது ,  - இத்தொகுப்பிற்கு இணையாக தமிழில் அமி குறிப்பிடும் நூல்  " குருஷேத்ரம்" (1972 )

தஞ்சை மறு விஜயம் - ஆடுதுறை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் IR8 பசுமை புரட்சி  - கீழ்வெண்மணி என்ற இரு விஷயங்கள் ஒரே கட்டுரையில் அமைந்துள்ளது - கட்டுரையின் தலைப்பின் கீழ் அமைந்துள்ள குறிப்பு - " An Army marches on its stomach ....."  (1972) 

பாபு ராவ் படேல் குறித்த குறிப்புகள் - தன்னை மிகவும் பாதித்த ஆளுமையாக இவரை குறிப்பிடுகிறார் அமி.இசை ஆளுமை எம் பி ஸ்ரீனிவாசன் அவர்கள் குறித்து மிகுந்த மதிப்புடன் குறிப்பிடுகிறார், இளையராஜாவின் " எப்படி பெயரிட" நிகழ்ச்சிக்கு பெரும்பாலான கர்னாடக சங்கீத பிரமுகர்கள் வரவில்லை என்றும், இளையராஜாவின் சங்கீத கனவுகள் நூலை மிகவும் மதிப்புடன் குறிப்பிடுகிறார் 

சி சு செல்லப்பா குறித்த கட்டுரையில் சுதந்திரம் , காந்தியவாதம் குறித்த குறிப்புகளில் பின் வருமாறு கூறுகிறார்-  " சுதந்திரம் என்பதற்கு எவ்வளவு முயன்று பார்த்தாலும் திட்டவட்டமான இலக்கணம் எல்லைக்கோடுகள் தர முடியாது , இந்த அரூப தெளிவு காண முடியாத தன்மை தான், ஸ்தூல செயலால் அடைந்த ஒரு நடைமுறைச்  சுதந்திரம் ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இட்டு செல்லும் காரணம்" - " காந்தியத்தின் சில அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கு கொண்டு அவர் காலத்தில் கடைபிடிக்கப்பட்டது போல் இன்று கடைபிடிக்கப்படவில்லை என்று மேல் பூச்சான காரணம் சொல்லி  மீண்டும் ஒரு அலுப்பு -  " 

அக்காலத்திய நவீன நாடகங்கள், பரீக்க்ஷா , கோமல் , மெட்ராஸ் PLAYERS  குறித்த தனது குறிப்புகளில் " ALLEGORICAL அல்லது குறியீட்டு கதாப்பாத்திரங்கள் எவ்வாறு அந்தந்த  சமூக பிரிவின் சின்னங்களாக மட்டுமே நின்று விடுகின்றன , தனி உணர்ச்சிகள் ஆசாபாசங்கள் இல்லாத காரணத்தால் நாடகம் பார்ப்பவர்களுக்கு தட்டையான அனுபவங்களே கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் , உத்தி குறித்து பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் "உத்தி கலையாகாது"  என்று வலியுறுத்துகிறார்.  

அமி பரிந்துரைக்கும்  சில புத்தகங்கள் " விடுதலை போரில் தமிழகம் - மபொசி" , " மார்க்சியமும் இலக்கியமும் - ஏ ஜே கனகரட்ணா , " Theory of the Film : - Bela Balazs , Hungary 

********

படைப்பிலக்கிய வெற்றி குறித்து "  முதல் மரியாதை படத்தில் - " அழகில்லாத எளிமையான கிராமத்துப் பெண்ணை கதாநாயகியாக அப்படத்தில் கற்பனை செய்து பார்த்தால் படம் இவ்வளவு வெற்றி படைத்திருக்குமோ ? ஆதலால் இந்த சந்தேகம் நூற்றாண்டு படைப்பிலக்கிய காரர்களுக்கு ஒரு வினாவை எழுப்பும் , அவர்கள் வெற்றி படைப்புக்காகவா அல்லது தகவல் பரிமாற்றுச் சாதனங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்தும் மனத்தத்துவ பாதிப்பை நுண்ணிய வழியில் கையாளத் தெரியும் சாமர்த்தியத்திற்காகவா ? (1978) 

நிறுவனமையமாதல் குறித்து - இந்தக் குறிப்பு  பிச்சையிடுவதன் தர்மம் காலம் காலமாக இருந்து வருவது குறித்தும்  , இன்றைய சமூக சூழலில் பிச்சை அவமான சின்னம்,  சமூக பிரச்சனையாக கருதப்படுவது குறித்தும் குறிப்பிடுகிறார். தனிமனித பிச்சைகளை  அரசாங்கம் குறைத்து வரும் நேரத்தில்  அரசாங்கம் தரும் பணமும் உணவும் கண்ணிய குறைவாக உணரப்படுவதில்லை என்று கூறி - நிறுவனமயம் வழி இங்கு தர்மமே மாற்றம் அடைந்து விடுகிறது என்று கூறுகிறார்  - இதைத் தொடர்ந்து காந்தி சிறுகதையில் வரும் குறிப்புகளை போலவே இயந்திரமாதல் குறித்த தனது பார்வையை  " நேரடி சம்பந்தம் பொறுப்பு உணர்வு முதலியவற்றை அனுபவிக்கும் தருணங்கள் தவிர்க்கப்பட்டு விடுகின்றன" சாவு வாழ்வு இரண்டும் impersonal ஆகி விடுவதில் குற்றவுணர்ச்சி அகன்று விடுவது போல ஒன்றியுணர்வதற்கு இடமில்லாது  போய் விடும். போய் விடுகிறது.  நிறுவன தர்மமும் அதில் தான் முடிவடைய முடியும்" (1982) 

சராசரி குறித்த இன்னொரு கட்டுரையில்  கட்டிட கலை மேதை Frank Llyod Wright கூறியதாக அமி குறிப்பிடுவது " கற்றுக்குட்டி என்ற நிலையில் தவிர யாரும் எந்தப் போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது எந்தப் போட்டியும் உலகத்துக்கு சிறப்பான எதையும் கண்டெடுத்து தந்ததில்லை", " போட்டி நடுவர்கள் எப்போதும் சராசரிகள். இந்த சராசரிகனின் முதல் வேலை சிறப்பானதை களைந்து எறிந்து விட்டு, சராசரியை பொறுக்கி எடுப்பது.  எந்த போட்டியின் விளைவும்  சராசரிகள் சராசரிகளுக்குகாக சராசரிகளை தேர்ந்தெடுப்பது தான் " (1983) 

தலைமுறை இடைவெளி குறித்து " ஒவ்வொரு தலைமுறைக்கும் - அது 33 ஆண்டுகள் இடை வெளியுள்ளதானாலும் ஐந்தாண்டுகள் நீண்டதானாலும் அதனதற்குரிய சிறப்பை காண முடிகிறதோ இல்லையோ, அசட்டுத்தனத்தைக் காண முடிகிறது , இந்த " அசடு" என்பது தமிழ்  மொழிக்கேயுள்ள ஓர் சிறப்பு கருத்து வடிவம். இருபத்திரண்டு ஆண்டுகளாகும் கணையாழிக்கு ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் உரிய அசட்டுத்தனத்தை காண முடிகிறது. அசட்டுத்தனம் என்பதை இகழ்ச்சிக்குரியதாக மட்டும் எண்ணக் கூடாது. தனித்துவம் என்று கூறிக் கொள்ளலாமா ? " ( 1986) 

தப்பித்தல் குறித்து - சொல் புதிது ஜெயமோகன் அவர்களுடனான நேர்காணலில் " கதாப்பாத்திரத்தின் -"Sublimation"   குறித்த கேள்விக்கு - அமி அவர்கள் " Evasion" என்பதையே தன் படைப்புகளின் பிரதான அம்சமாக கருதுவதாக கூறுகிறார் - இந்நூலில் தப்பித்தல் என்றொரு அத்தியாயத்தில் சற்று விரிவாகவே இதை புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார் -    "கதை கவிதை கட்டுரை பிரதானமாக நடுத்தர வர்க்கத்து பிரக்ஞையிலிருந்து எழுந்து, நடுத்தர வர்க்கத்து உணர்வுகளுக்கு ஊட்டமளிப்பதாகவே இருந்திருக்கின்றன. ஒரு  விதத்தில் நடைமுறை வாழ்க்கையில் அடைய முடியாததோர் நிறைவை கற்பனையிலாவது அடைவதற்காக நடுத்தர வர்க்கம் ஒரு தப்பித்தல் சாதனமாக எழுத்தை அதாவது "படைப்பிலக்கிய எழுத்தை உயிரூட்டி வளர்ந்திருக்கிறது என்று கூற வேண்டும் " ......"ஆனால் விடுதலை மீட்சி என்பவை சந்தேகமூட்டும் சொற்கள், வரலாற்றின் கொடூரக் கொடுங்கோலர்கள் அனைவரும் இச்சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்" ...."முதலில் தப்பித்தல் உந்துதலிலிருந்து நாம் விடுபட வேண்டும் " ... "தப்பித்தல் இயக்கங்களை தெரிந்து கொள்வதற்கும் அவற்றினின்று விடுபடுவதற்கும் உள்ளூர ஒரு உந்துதல் தேவை. அப்படி தோன்றாதபடி அந்தத் தப்பித்தல் மயக்கம் பார்த்துக் கொள்ளும். இலக்கியத்துக்கு இந்த மயக்க அம்சம் உண்டு. கணையாழி வரையில், முடிந்த அளவில் இந்த மயக்கத்தை குறைக்க முயற்சி ஒரு திக்கிலிருந்தாவது தொடர்ந்து இருந்து வருகிறது ..... இலக்கியமே இறுதியும் முடிவும் அல்ல என்பது கணையாழியில் பல முறை கூறப்பட்டிருக்கிறது அல்லவா ? ".... " மயக்கம் தவிர்க்க வேண்டும் .. தப்பித்தல் கூடாது ..... தமிழில் இலக்கியம் என்ற சொல்லையே தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது (1987) 

***

Friday, December 10, 2021

கடைத்தெருக் கதைகள் - ஆ மாதவன்

கடைத்தெரு பின்புலத்தில் அமைந்துள்ள பதினோரு கதைகள் அடங்கிய சிறுகதைதொகுப்பு இந்நூல். 


சவடால் சாகசம்

சாலை பஜார் கடைத்தெருவின் வகை மாதிரி கதாப்பாத்திரங்களின் சவடால், சாகசம், அனுபவ புதுமைகளே இக்கதைகளை அணுக சுவாரஸ்யமான துவக்கப் புள்ளி. 

இந்த சவடாலும் சாகசமும் வெளித்தோற்றங்கள் மட்டுமே, தினப்படி வருமானத்தை நம்பியிருக்கும் எண்ணற்ற மனிதர்களின் வாழக்கை போராட்டதின் கலை முகப்பாக இந்த சாகசங்கள்

வயிறு இன்னபிற 

பொருளாதார கடை நிலை மனிதர்களின் இவ்வாழ்க்கை போராட்டம் வழி நமக்கு பரிச்சயம் ஆகும் சிறு கடை முதலாளிகள். இவ்விருவருக்கும் இடையே ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட எல்லைகளை நாம் அறிகிறோம். எல்லைகள் காரியார்த்தமாகவும் அனுபவபூர்வமாகவும் எதேச்சையாகவும் பரஸ்பர தயவில் வெகு சில நேரங்களில் மறைந்து மீண்டும் தோன்றுகிறது. இந்த தருணங்களே கதைகளின் எளிய சாகச சவடால் முகப்புகளை தாண்டி அமைந்துள்ள  குறிப்பிடத்தக்க அம்சம்.( எட்டாவது நாள், உம்மிணி, பாச்சி) 

பெரும் பாதகத்தின் நிழலில்

ஏறத்தாழ அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளில் ஒரு பெரும் பாதகம் மையமாகவோ கதை ஓட்டத்தின் ஒரு புள்ளியாகவோ வருகிறது. கதை இப்பாதகத்தின் வீச்சை மட்டுமே  நம்பியிருக்காது இந்த பாதகத்தின் அருகே அதை கடந்த செல்லும் வகையில் வேறு சில விஷயங்களை கூறிச் செல்கிறது. நாம் பெரும் பாதகம் என்று எண்ணும் விஷயங்கள் வேறொரு தளத்தில் வேறு ஒரு பொருள் கொள்ளும் வகையில் அமைந்திருப்பது கதைகளின் கலை வெற்றி. ( தூக்கம் வரவில்லை, உம்மிணி) 

அசாத்தியம் 

இவரா இவனா இதை செய்தது ? நானா இப்படி செய்தது ? எனக்கா இப்படி ? (உம்மிணி, காளை, விஸ்வரூபம்) எனும்படியான கதை அமைப்பு கடைத்தெருவின் மற்றுமொரு சாளரத்தை நமக்கு திறந்து காட்டுகிறது. எளிய விளையாட்டுத் தனமான  கதாப்பாத்திர குழப்பங்கள் வேடிக்கை  நிகழ்வுகள்( கோமதி, பறிமுதல்)  முதல்,கதைக்கு முற்றிலும் பூடக தன்மை அளிக்கக் கூடிய நிகழ்வுகள் வரை கதாபாத்திரங்களின் அசாத்திய செய்கைகள் நம்மில் சில நேரங்களில் குறு நகையையும் சில நேரங்களில் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன (ஈடு, தூக்கம் வரவில்லை ,எட்டாவது நாள்). 

அநித்யம்

தினப்படி சாகசம் , எப்பொழுதோ மறைந்து  உடனே மீண்டும் தோன்றும் சுமூக எல்லைகள், மறக்கவியலாத பெரும் பாதகத்தின் நிழலில் நாம் அனைத்து கதைகளின் மைய இழையாக உணர்வது அநித்யத்தை.  அனைத்து கதைகளின் போக்கு பெரும்பாலும் "முன்பிருந்தவர் இப்போது இல்லை" "முன்பிருந்தது இப்போது இல்லை" என்ற அநித்ய நினைவுகள். காலத்தின் கடைத்தெரு தன்னகத்தே கொண்டுள்ள நிர்தாட்சண்யம் இதன் மூலம் புலனாகிறது. 

Sunday, December 05, 2021

எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்- அசோகமித்திரன் - சில குறிப்புகள் சில கட்டுரைகள்

 

1999,2000,2001 ல் எழுதப்பட்ட கட்டுரைகள் -  புத்தக அறிமுகங்கள், சுருக்கமான நினைவோடைகள், வெவ்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகள் அடங்கிய நூல் 


சுருக்கமான நினைவோடைகள் 

ஜி நாகராஜன் 

நம்பி கிருஷ்ணன் 

ஆர் கே நாராயணன் 

புதுமைப்பித்தனை முன் வைத்த கநாசு

எம் வி வெங்கட்ராம்

இந்திரா பார்த்தசாரதி 

தஞ்சை பிரகாஷ் 

ந பிச்சமூர்த்தி

சிவபாதசுந்தரம்

தி ஜானகிராமன் 


ஜெயமோகன் சொல்புதிது நேர்காணல் 

நல்லி நாராயணசாமி செட்டி - நம்பிக்கை -  அமி தொடர்பான வாழ்க்கை நிகழ்வு பற்றிய குறிப்பு



பிற கட்டுரைகள்

இருபதாம் நூறாண்டு முடிகையில் தமிழ் சினிமா 

உலக தமிழ் மாநாடுகளின் எதிர்காலம் 

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் படைப்பிலக்கியம் 

அச்சு ஊடக எதிர்காலம்.

அவதூறும் சாதனையும் - கல்கி புதுமைப்பித்தன் 

வசீகரத்தின் இலக்கணம் - டி ஆர் ராஜகுமாரி

குஷ்வந்த்சிங் கின் பல்லக்கு 

ஒரு வசனமில்லா நாடகம் - முட்டாள் சொன்ன கதை  1974 ல் எழுதப்பட்டது 

---

படித்ததில் பிடித்தவை 

" மனிதனை மனிதன் சுரண்டும் தன்மை எந்த மகானை மதித்திருக்கிறது? "

"மறு பிறவி கர்ம பலன் ,விபரீதத்திற்கு வேறு காரணங்கள் வேண்டாம் "

"திராவிட கட்சி பிரமுகர் கமலஹாசன்"

"உலகின் அனைத்து சுற்றுலா இடங்களும் தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகளுக்கும் நடன காட்சிகளுக்கும் பின்னணியில் பாதாம் அல்வாவில் கடுகு கருவேப்பிலை தாளித்தது போல இருக்கும்."

"இரண்டாயிரமாண்டு பிறக்க போகும் இந்த தருணத்தில் தமிழ் சினிமா ஒரு ரசிக்கத்தக்க இரைச்சலாகவும், அனுபவிக்கதக்க குழப்பமாகவும் இருக்கிறது. "

"இரு பாகவதர்கள் உச்சி வெயிலில் ஒரே இடத்தில் நின்று கொண்டு பாடிய காட்சி இன்னும் மறக்கவில்லை. மறக்கக் கூடாதது அது தானோ ? "

ராஜஸ்தான் மாநிலத்தில் எழுத்தாளர் நைபால் மாநாட்டில் - வாயில் மண்ணெண்ணெய் கலவை ஊற்றி வித்தை காட்டிய ஆண்கள் - நைபால் அந்த ஆண்களுக்கு பல நூறு ரூபாய்க்கு குறையாது வெகுமானம் அளித்தது ! அடுத்த வரி - "பெண்கள் நடனத்தில் பயிற்சிக்கும் தேர்ச்சிக்கும் ஒரு குறைவும் இல்லை. ஆனால், அவர்கள் நெருப்பை ஊதி பரபரப்பேற்படுத்தவில்லை "

--

அமி குறிப்பிட்டிருந்த  சிறுகதைகள் புத்தகங்களில் சில

அட்லாண்டிஸ் மனிதன் - எம்ஜிசுரேஷ்

இயந்திர மாலை ஆர் ராஜகோபாலன் 

நீலக்கடல் , மருமகள் வாக்கு  நம்பி கிருஷ்ணன் 

பைத்தியக்கார பிள்ளை பெட்கி- எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள்

தி ஜானகிராமன் - நாலாவது சார் சிவஞானம் 



Friday, December 03, 2021

ரத்த உறவு - யூமா வாசுகி

நாவலில் இரு வேறு உலகங்கள் புலனாகின்றன.

பூ, செடி, மரம் இலை விளையாட்டு பொருள் ,பூச்சிகள் பறவைகள், மிட்டாய், தின்பண்டம் உணவு  கல் மண் கனவு  சாகசம் சூழ்ந்த பால்ய காலங்கள். 

குடும்ப கடமைகள்,  வம்பு சீட்டாட்டம், சாராயம், குடும்பம் மனைவி சண்டை, அடிதடி, குரோதம், வீடு, வாசல், சொத்து, பிழைப்பு, சாக்கடை, குழந்தை வளர்ப்பு,  கண்டிப்பு, குடும்ப வன்முறை, ஆபீஸ் மீட்டிங் சூழ்ந்த பெரியவர்கள் உலகு.



இரு உலகங்களின் நுண்ணிய துல்லிய வர்ணனை நாவலின் பலம். பல்வேறு சம்பவங்களின் வழி இரு உலகங்களும் வாசகனுக்கு பரிச்சயம் ஆகையில் பால்ய நினைவுகள் மனதில்  பூரிப்பையும் , பெரியவர்கள் உலகு தாங்க முடியாத கரிப்பையும் சிறுமையையும் ஏற்படுத்தின. பால்ய உலகின் விந்தையும் புதுமையும் நம்மை ஆட்கொள்கையில் பெரியவர்கள் உலகம் முகம் சுளிக்க வைக்கிறது. 

நாவலின் தலைப்பு வழி, "ரத்த உறவு" என்னும் சொல் வழி மீட்சியே இல்லாது காணப்படும் பெரியவர்களின் இருண்ட உலகில் சிறிய வெளிச்சங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மிகவும் நுட்பமாக அமைந்திருக்கும் விஷயம் இது. தினகரனின் அத்தனை கொடுமைகளை வாசுகி தாங்குவதற்கு காரணம் தன் தந்தையுடனான ரத்த உறவு காரணமா ?  வாசுகி அக்கா மீண்டும் மீண்டும் தம்பிகளை பொத்தி பொத்தி பெரியவர் உலகில் இருந்து காப்பது எதன் பொருட்டு ? ரமணி  சின்ன மாமா இருவருக்கும் இடையேயான சுமூக ரத்த உறவிற்கும்,  பெரியப்பா, தனபால், தினகரன், அங்காளத்தம்மன் இடையேயான பிணைப்பான  ரத்த உறவுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?  ரத்த உறவு இல்லாத இரு குடும்பங்கள் இணைகையில் ரமணி தினகரன் உறவு சுழிப்பில் நம்பிக்கையின்மை, குரோதம், வன்மம், அடிதடி என சர்வகீழ்மைகளும் வெளி வருகின்றன. வீட்டிற்கு வெளியே அவ்வளவு அன்புடன் மீனாட்சியின் பிள்ளை மாரியாயி யை பரியும் தினகரன் தன் சொந்த மகளிடம் காட்டும் துவேஷம் புரிந்து கொள்ள முடியாதது. ரத்த உறவு இல்லாத தன் இணை ரமணி மட்டும் தான் காரணமா? குடும்பமே சேர்ந்து ரமணி யை துவேஷிக்க தூண்டிய பொறி எது ? கேள்வியை சற்றே நீட்டி யாதொரு குடும்ப சூழலில் ஒருவர் மட்டுமே திரும்ப திரும்ப அவப்பெயர் சுமந்தோ துவேஷிக்கப்படுவதோ எதனால் ? குடும்பத்தை மீறிய பொது நியாயம் என்ற ஒன்று உண்டா ? விவேக் ஷன்பேக் இன் கச்சர் கோச்சர்  (2015) நினைவுக்கு வந்தது. ரத்த உறவு 2000 த்தில் தமிழினி வெளியீடாக  வந்துள்ளது. 

நாவலின் முடிவில் சிறுவர்கள் மகிழ்ந்து இருக்கும் சித்திரம் மன நிம்மதியை அளித்தது. கவித்துவம் மிளிரும் வரிகள் ஆசுவாசபடுத்தினாலும் குடும்ப வன்முறை தருணங்களின் துல்லிய விவரிப்பு பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தின.

Saturday, November 27, 2021

போக்கிடம் - விட்டல் ராவ்

 டேனிஷ்பேட் என்னும் ரயில் நிலையத்தை விரைவாக கடந்தபடி செல்லும் விரைவு வண்டியில் அமர்ந்தபடி சலனம் இல்லாது கண்ட நினைவுகள் மீண்டன, ஊரின் பெயர் குறித்த சிறிய வியப்பு. இன்று போக்கிடம் நாவல் வழி மீண்டும் மேலதிக பரிச்சயம். டேனிஷ்பேட் போன்ற சிற்றூர்களின் ஒட்டு மொத்த சித்திரமும் , தொழில் புரட்சியுடன் உடன் பிறந்த வாழ்விட  இடம்பெயர்வு சித்திரமும் அமைந்த நாவல். 


ஊர் பற்றி, ஊரின் மனிதர்கள் பற்றிய சிறுநிகழ்வுகளாக தகவல் குறிப்புகளாக விரிகிற இந்நாவல். சுகவனம் என்னும் தொடக்கப்பள்ளி ஆசிரியரை மையப்படுத்தி ஊரின் மொத்த வாழ்வோட்டத்தை முன் பின் வரலாறுகளை அறிந்து கொள்கிறோம்.முதல் பகுதி பிறிதொரு எந்த ஊரின் கதையை போலவே அமைந்து மறு பகுதி புதிய சுரங்கம் காரணமான நிகழ்வுகளை பற்றி அமைந்துள்ளது. எந்தவித அதீத சொற்களின் உதவி இன்றியே மெல்லிய அங்கதத்துடன் பரிவுடன் கதைகள் சொல்லப்படுகிறது. 1976ல் வெளிவந்த இந்த நாவலை இன்று வாசிக்கையில் கலைத்தன்மையை உணர வைப்பது இந்த அங்கதமும் பரிவும் தான். எளிமையான சொற்கள் வழியே உணர்ச்சிகரமான தருணங்கள்,  எளிமையாக அதே நேரத்தில் எந்த வித துருவப்படுத்துதல் மற்றும் லட்சிய வாழ்வு குறித்த பிரக்ஞை இரண்டும் அறவே இல்லாத, இப்படி நடந்து விட்டது ஆனால் சமாளித்து விட்டார் என்கிற வகையில்  எல்லாம் அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கி கடந்து செல்லும் "பாவம்" நாவலின் வெற்றி. இப்படி நடந்தது என்று கூறுகையில் அங்கதமும், எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்பதை பரிவுடனும் கூற முற்பட்டிருக்கிறார் ஆசிரியர் . 

ஒட்டு மொத்த ஊரும் சிந்திக்கும் போக்கை நாவல் தன்னகத்தே விவரிக்க முயன்றிருக்கிறது. ஊரின் மண், விவசாய பயிர்கள், இன்ன பிற சிறு தொழில்கள், பள்ளி இவற்றுக்கு இடையே அமைந்த ஒத்திசைவில் ஒரு புதிய விஷயம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதை நாவலின் பக்கங்களில் நாம் உணரலாம். எந்த வித grand narrative அமைக்கும் எண்ணம் இல்லாது மக்கள் எப்படி புரிந்தும் புரியாமலும் தங்கள் வாழ்க்கையை சமாளிக்கிறார்கள் என்பதை அங்கதத்தின் துணையுடன் விவரிக்கிறார் விட்டல் ராவ். வரிசையோ ஒழுங்கோ கருணையோ தனிப்பட்ட விழுமியமோ ஒரு திரளின் முன் ஒரு கூட்டத்தின் முன் இவ்விழுமியங்களின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளும் அடங்கிய நாவல், திரளான விவசாயிகள் மெல்ல மெல்ல திரளான குமாஸ்தாக்களாக ஆசைப்படும் கால மாற்றம் நாவலின் மற்றொரு சரடு.

நாவல் தாயக்கட்டை விளையாடும் பெண்களில் தொடங்கி ஒரு மனிதனின்  யாசகத்தில் முடியும். யாசகத்தை பொறுக்க முடியாத ஒருவன், இதற்கு ஒரு முடிவு தேட உள்ளிருந்து தன் ஒரு துளி கண்ணீரை அனுப்புவான். வெளிவரும் கண்ணீர் எதிரில்  எவரையும் காணாது  செய்வதறியாது வழிந்து மறையும். 

நான் மிகவும் ரசித்த ஒப்புவமை மத்திய மந்திரி ஒருவரது சுரங்கம் குறித்த உரையை மக்கள் கேட்டு தலையை ஆட்டுவதை தெலுங்கில் கூறப்படும் ராம ஜோஸ்யம் க்கு மொழி தெரியாது மக்கள் தலையாட்டுவதற்கு ஒப்பாக ஆசிரியர் அமைத்திருப்பது. எதற்கும் இருக்கட்டும் என்று சாலை அமைக்க இருந்த தாரை மக்கள் பாத்திரங்களில் சேமிக்க இறுதியில் அந்த தாரும் தார் சேமித்த பாத்திரமும் அவர்களுக்கு உபயோகம் இல்லாது போய்விடும் அவலம் நாவலின் ஒரு சோறு பதம். 

வாழ்வில் சில உன்னதங்கள் ஒரளவு வாசித்திருக்கிறேன்,  நதிமூலம், நிலநடுக்கோடு வாசிக்க வேண்டும் . 

Thursday, November 18, 2021

பனைமரச்சாலை - காட்சன் சாமுவேல்

இந்நூல் அடிப்படையில் ஒரு பயணக்கட்டுரை நூல்.  மும்பையில் தொடங்கி குமரியில் முடிந்த மோட்டார் பைக் பயணக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பனை மரங்களை பின் தொடர்ந்தே, புல்லடில், மும்பையில் தொடங்கி ஆந்திரா வழி தமிழகம் வந்தடைந்து கிழக்கு கடற்கரை யோரம் பயணப்பட்டு குமரி வந்தடைகிறார் காட்சன் சாமுவேல் அவர்கள். புல்லட் பயணம் புதினம் இல்லை எனினும் தேர்ந்தெடுத்த பாதையும் பயணம் நெடுக விரிவடையும் பனை உலகமும் இந்நூலை முக்கியமான ஒன்றாக்குகிறது. 


ஆதி பனை

இன்னதென்று அறிய தொடங்காத பருவத்தில் இருந்தே நமக்கு ஒரு விஷயம் குறித்தோ பொருள் குறித்தோ ஒரு பிடித்தம், நிறைவு, தேடல் இருக்கும், ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அந்த பொருளோ விஷயமோ இன்ன காரணத்தால் பிடிக்கும் என்று கூற இயலா வண்ணம் மிக சிறு வயதில் அரும்பி நாம் வளர மனதளவில் ஒரு நீங்காத இடத்தில் இருக்கும். சூழலோ, வளர்ப்போ, சமூக விழுமியமோ, சாதியோ, மதமோ, நிறுவனமோ, சுற்றமோ நம்மை பாதிக்க தொடங்கும் முன்னரே அமைந்திருக்கும் ஆதி ஊற்று. காட்சன் அவர்களின் மனதில் அவ்வகையில் அரும்பியதே இந்த ஆதி பனை ஊற்று. பனையை சுற்றி தனது விஷயங்களை ஒருங்கிணைக்க தொடர்ந்து எத்தனிக்கையில் அமைந்த ஒரு பயணம் இது.பனையை பற்றி மட்டுமல்லாது நம்மை சுற்றி அமைந்துள்ள நிகர் உலகின் சம காலத்தின் விழுமியங்களை மக்கள் மனதின் அபிலாஷைகளை மேலும் நெருங்கி அறிய ஒரு வாய்ப்பாகவும் இந்நூல் அமைந்துள்ளது. காட்சன் அவர்களின் பனைக் கனவு நாம் இதுவரை கண்டடைந்துள்ள மெய்யியல் சார்ந்த பொருளாதார அரசாங்க நிறுவன அமைப்புகளின் விழுமியங்களை மீள்பார்வை காண ஒரு சந்தர்ப்பம்.


பனை மெய்யியல்

நூல் நெடுக பனை சார்ந்த  விவிலிய குறிப்புகள் ஏராளம் உள்ளன. அனைவரும் அறிந்த குருத்தோலை ஞாயிறு முதல் அறியாத பல பக்கங்களில் பனை குறித்த குறித்த குறிப்புகளுடன் விரவியுள்ளது இந்நூல், சைவ திருமுறைகளில் இருந்தும் சைவ தல புராணங்களில் இருந்தும் திருக்குறளில் இருந்தும் பல குறிப்புகள் கொண்டது இந்நூல், திருச்சபை குறித்த திறந்த மனம் கொண்ட விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது. பண்டு தொட்டு வழங்கப்படும் நூல்கள் என்றளவில் முக்கியம் பெற்றாலும் இருப்பதோராம் நூற்றாண்டின் பனை மெய்யியல் அமைய எவ்வாறான அடித்தளம் தேவைப்படும், பண்டைய நூல்களின் மறு கூறல்களுக்கு இணையாக இன்றைய பனை மெய்யியல் அடித்தளம் அமைய வேண்டும்,  சமூக சடங்குகள், பனை புராணம்,  பனை கிராமம், சூழியல் பார்வை, உடல் உழைப்பு, உணவு பழக்கம் இவை சுற்றி பின்னப்பட்ட ஒரு மெய்யியல் உலகம் அமையலாம் 


பனைப பொருளாதாரம்

பனை பொருளாதாரத்தை புரிந்து கொள்ள மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் சம வாய்ப்புகள் உள்ளன. பனையில் இருந்து கிடைக்க கூடிய பட்டியல் கீழிருந்து மேல் என்றால், பனை பொருட்களுக்கான சந்தை உருவாக்கம் மேலிருந்து கீழ். சந்தை பொருளாதாரம் நீடித்த ஒரு தொடர் தேவையை உறுதி செய்யும் அமைப்பாகவும், பல பனை பொருட்களை தயார் செய்ய தேவைப்படும் உடல் உழைப்பு சுரண்டாமல் பெறப்பட கீழிருந்து மேலாக ஒரு இடதுசாரி சங்க அமைப்பும் இணைந்து செயலாற்ற பனை பொருளாதார அமைப்பு ஒரு வாய்ப்பு, சந்தையில் பிற பொருட்களின் நூதனம் முன், எண்ணிக்கையின் முன் பனை சார் பொருட்களின் வலிமை எத்தகையது ? பனை கோரும் உடல் உழைப்பும் பிரதிபலனும் இதர விவசாய அல்லது சேவை நிறுவனங்களில் வேலை அமைகையில் எவ்வாறு ஒப்பு நோக்கி பார்க்கப்படும் ? இந்நூலில் ஆசிரியருடன் பயணிக்கையில் அவர் கூறிய தகவல்கள் அனுபவங்களை தொகுக்கையில் மேல் கூறிய வரிகள் அமைந்தன. ஆசிரியர் கூறுவது போல் கள்ளை முன்னிலை படுத்தாது பதநீர் கருப்பட்டி யை முன்னிலை படுத்தியே சந்தை அமைய வேண்டும்


பனை அரசாங்கம் 

பனை காதி கிராம நிர்வாக அமைப்பின் கீழ் வருகிறது. அரசாங்க முன்னெடுப்புகள் காயும் பழமுமாக தான் எப்போதும் அமைகின்றன , முழு தோல்வியான அரசாங்க அமைப்பு பல இடங்களில் உள்ளது தான், பனை விஷயத்தில் கடலூர் அருகே ஒரு பேய் பங்களா போல் நம் மாநிலத்தின் பனை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்திருப்பதை ஆசிரியர் வருத்தத்தோடு பகிர்கிறார்.எளிதாக அரசின் செலவீனங்களின் ஒரு பகுதி பனையை ஒட்டி அமைய வாய்ப்பிருக்கிறதா ? அரசாங்க ரேஷன் பொருட்களில் பாமாயில் கூட இன்னும் அதிகமாக பனை சார் பொருட்கள் கொடுக்க  வாய்ப்புள்ளதா ? அரசாங்க பள்ளிகளில் பனை கைவினை ஒரு பயிற்று வகுப்பாக இருக்க வாய்ப்புண்டா ? காட்சன் அவர்களுடன் பயணிக்கையில் அரசு நிறுவனங்களின் வீழ்ச்சியை நாம் காண்கிறோம். மீண்டும் ஒரு புதிய நிறுவனம் காயா பழமா என்பதற்கு முன் அரசின் சொந்த தேவையை பனை வழி பூர்த்தி செய்ய இயலுமா என்கிற எண்ணம் தோன்றியது. 


பனைத் தொழில்நுட்பம்

பனை பொருட்கள் உருவாக்கத்தில் மரம் ஏறுதல் உயிர் கவசம் தொடங்கி பதப்படுத்தல், சந்தை போக்கு வரை நவீன தொழில்நுட்பம் எந்த அளவிற்கு சீண்டி இருக்கிறது என தெரிந்து கொள்ள ஆவல், நூலில் ஆசிரியர் காட்டும் சித்திரம் எந்திரவியல் பெரிதும் அண்டாத ஒரு செய்முறை தற்போதும் நடைமுறையில் உள்ளதாக தெரிகிறது. உடல் உழைப்பை உயிர் பாதுகாப்பை கோரும் சூழ்நிலையும் நாகர்கோவில் விழாவில் பெண்கள் நின்ற வண்ணம் பனை சீவுவது போன்ற பனைகளை பற்றிய குறிப்பும் ஒப்பு நோக்கி பார்க்க கூடியவை. இயற்கை பொருட்கள் குறித்த புரிதல் கூடி வரும் இக்காலங்களில் அவை பல் வேறு App வழி சந்தையை கண்டடைகின்றனர் ,பனை சார்ந்த பொருட்கள் எவ்வளவு இவ்வாறான App வழிகளில் சந்தையை அடைகின்றன என்று தெரியவில்லை.


பனைக் கனவு

ஒரு அத்தியாயத்தில் நிலவின் மடியில் பனை மரம் கூட்டம் நடுவே அமைந்த பயணம் குறித்து அற்புதமான ஒப்புவமைகளோடு காட்சன் எழுதியிருக்கிறார், இலக்கிய தரத்தில் அமைந்த குறிப்பு அது. வெட்டி வீழ்த்தப்பட்ட பனைகளை காணுகையில் மிகுந்த மன வருத்தம் கொள்கிறார். பனையில் யானையை காண்கிறார். சடையன் சிவனை காண்கிறார் காளியை காண்கிறார்,முளை விடும் சிறு பிள்ளைகளை பனையில்  காண்கிறார்.  வழி நெடுக கண்டு கொண்டே "பனை பனை" என்று அவர் உற்சாகத்துடன்  செல்கையில் நாமும் அத்திவலைகளில் கால் நனைத்து மகிழ்கிறோம். பனை வழி அவர் ஒரு கனவு உலகத்தை காண முயல்கிறார். காட்சன் எவ்வாறு தனது பயணத்திற்கு பனையை தேர்ந்தெடுத்தாரோ அதே போல் வாசகன் தனக்கான ஆதி பனையை கண்டு கொண்டு எவ்வாறு நிறைவடைவது என்பதற்கான கையேடாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உறவைப் பேண ஒரு தொடர்பு ஓலையாக பனையை கொண்டிருக்கிறார். அமிர்தராஜ் அவர்களின் புகைப்படங்களுடன் செம்பதிப்பு எதிர்பார்க்கிறேன். நண்பர் பரிந்துரைத்த ஆ சிவசுப்பிரமணியன் அவர்களின் "பனை மரமே பனை மரமே" நூல் நிறைய படங்களை கொண்டு அமைந்து உள்ளது. நண்பர் மேலும் கார்த்திகை மாவளி குறித்து விவரிக்கையில் பணம்பூ குறித்து உற்சாகமாக உரையாடினார், இறுதியில் முத்தாய்ப்பாக  "பனை மரம் ஒரு டிராகன்" என்றார்.

Wednesday, November 17, 2021

1945இல் இப்படியெல்லாம் இருந்தது


அசோகமித்திரன், கச்சித மன்னன் , ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று சும்மா ஒரு கேள்வியை போட்டு பதிலை வேறொரு இடத்தில் கூறுவதில் மன்னன், பெரியவர் உலகங்களில் நுழைய முயலும் குழந்தைகள், சலித்து கொண்டே இருப்பவர்கள், மௌனமாக பாரங்கள் அனைத்தையும் ஒரு சொல் கூட கூறாது ஏற்றுக்கொண்டவர்கள், பொது நியாயம் என்ற ஒன்று தொடர்ந்து உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான எழுத்து , அத்தனை சலிப்பும் அதன் காரணிகளும் விலகப்போவதில்லை தொடர்ந்து இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் எழுத்து, எதேச்சையின் கரம் குறித்தும் நிஜத்திற்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி குறித்து நுட்பமான பார்வைகள் மக்கள் மிகவும் போராடி தான் வாழ்கிறார்கள் என்பதையும் அதே நேரத்தில் மரபு சார்ந்த விஷயங்களை உரிய மதிப்பு கொடுப்பவர், மொத்த பழியை மரபின் மீது போடாது அதே நேரத்தில் மரபின் நெகிழ்வை மரபு சடாரென விலகும் இடங்களை அறிந்த கலை மனம் உடையவர் 

Thursday, October 28, 2021

The Brothers Karamazov

Novel written by Dostoyevsky in nineteenth century


Personal Characters

Fyodor for Pure sensual Passion, Dmitri similar but has heart of an angel, Ivan the Philosopher stung by Karamazov truth  Smadykv who could not face the truth himself and Alyosha the  observer. all these characters are strung by conflicting passions of two women Katerina proud aristocratic with lot of money at disposal Grushenka passionate and fiercely primal, Final choices of Katya and Grushenka is in a way indicative of Bigger Dilemma that awaited nineteenth century Russia

National Characters

Reforms in Europe crystallised has Hamlet who is worried about what lies beyond worried every day Russian, for essentially its a nation of Karamazovs. Smadykv and  Ivan have escape plans to Moscow and Beyond, but couldn't fully come at it themselves, But Ivan suggests a American Escape to Dmitri which he dislikes rather would Choke in Russia. Machinery and all, Novel happen at the beginning of Serf Emancipation reforms  indicating widespread agitated mood about the future, Novel ends with the surmise that Alyosha will take the lead on lines of Father Zossima traveling length and breadth of the nation, reminding Gandhi s Travel which would happen in early part of the next century. Dostoevsky smirks at Science which deals the question in parts, Government seem to be on science side where as Church positions itself as all inclusive including of those left out by Government or Science, Novel discusses end goals of Chirch Vs Government in a Shrill Manner, Science I have added to the Government side for we have more trusted the  science since this novel for the past 150Years, Government and God not mutually exclusive and all that, Can a Boodhan movement happen now anywhere in the world ? Can any government force a schematic like that with Process and Technology, possible but can it be done without invoking God ? 

God

For what is god why we expect him to appear some time in front of us , as he arrives in the form of Love he arrives in the form of Kindness he arrives as Natural justice, He also arrives to Shatter the designs of Godmen for they have their own reason,they say we undertake to preserve the mystery of non existent god so that except for preistly minority and others, rest beleive in existence of god, why appear now in front of all and create confusion as all things are going smoothly, God Returned but comes back in the form of Love Good Deeds and Natural Justice. Arrangements for confessions turned out to be nightmare for many but easy way of betraying conscience for a few for them all is acceptable. Smadykv and Ivan started with all is acceptable and got challenged, Alyosha remarkably unwavering wondering only once why Natural Justice sleep like that when its moment of truth came.

Being good is one but struggling to keep a good name is another, In trying to get a good name for us we put others in inconvenient spots undeservedly, Our Lust for Pride of Goodness overtakes the simple goodness we wish to see, Katrina and Dmitri in that Order.Katrina could be the priest who sent the god back for he/she knows much more than God Himself where as Dmitri is Father Zossima who refused a miracle even in death for he knows where exactly God Lies and how he arrives. 

Wednesday, September 29, 2021

இயல்பு நிலை - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி

இயல்பு நிலை  - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி 

பொதுவாக நாம் ஆன்மீக ஆசிரியர்களை வாசிக்கையில் எவ்வளவு தான் என்னை தொடராதே என அவர்கள் அடித்து விரட்டினாலும் "குரு ஸ்தானம்" இயல்பாக அமைந்து விடுகிறது, அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அல்லது விளக்கங்கள் மாதிரியானவை, விஷயங்கள் குறித்து explanatory தொனியில் இல்லாமல் விடை அறிய வந்தவனை நேர் பாதையில் செலுத்த ஒரு leading into தொனியில் இருப்பதைக் காணலாம். இந்த நூல் அப்படி ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம், ஏனெனில் யூஜி அனைத்து ஆன்மீக தேடல் கட்டமைப்புகளை நிராகரித்து கூறுவது போல் இருப்பினும் பல இடங்களில் காலம்காலமாக தொடர்ந்து வரும் ஆன்மீக தேடலின் கூறுகள் யூஜி யின் அனுபவங்களிலும் விளக்கங்களிலும் இருப்பதை காண முடிகிறது. 


புலனடக்கம் என்பதை ஒருங்கிணைப்பாளர் இல்லாத புலன் செயல்பாடு என்றும், ஆன்மீக சக்கரங்களை உடல் ரீதியான சுரப்பிகளின் செயல்பாடாகவும், சாம்பல் என்னும் உருவகம் மூலம் எண்ணங்கள் பொசுங்கி உடலெங்கும் சூடு பரவும் விதமாகவும், மாயை என்பதை எண்ணங்கள் உருவாக்க நினைக்கும் தொடர்ச்சியான "நீ" என்றும்,  நான் அழிவதை கேள்வி மறைந்து duality மறையும் இயற்கை நிலை இடமாகவும்  இறுதி பேரின்ப நிலையை மிகுந்த உடல் வலி மிகுந்த  இயல்பு நிலை என மரபான விஷயங்களுடன் தொடர்புப்படுத்தி பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

யூஜி ரமணர் சந்திப்பில், ரமணர் "என்னால் அளிக்க முடியும் உன்னால் வாங்கிக்கொள்ள முடியுமா ?என்று யூஜி யை பார்த்து கேட்கிறார். "படிநிலைகள் இல்லை என்றும் ஒன்று விடுபட்டவர் அல்லது விடுபட வில்லை" எனவும் ரமணர் கூறுகிறார், இது கிட்டத்தட்ட மீள முடியாத உடல் அணுக்களின் மாற்றம் என்று யூஜி கூறுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது, ஜெகே உடனான சந்திப்பில் ஜெகே வின் போதனைகள் "செயலின்மை"க்கு இட்டு செல்வதாக சுட்டிக் காட்டுகிறார் யூஜி, இது ஜேகே மீது மரபான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் வைக்கும் விமர்சனத்தை ஒத்து இருக்கிறது.

விடுபட்ட நிலை என்ற ஒன்றை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் யூஜி அந்நிலை அடைய சாதங்கங்களும், படி நிலைகளும், சிந்தனையும் பயன் தராது என்றும் கூறுகிறார்,  சிறுவயதிலேயே மரபான நூல்கள் பயிற்சியும், யோக பயிற்சியும் பெற்றவர் யூஜி, இயல்பு நிலை அமைகையில் பாறங்கல் தாக்குவது போல் ஒரேடியாக நிகழும் என்றும் அவரது சொந்த அனுபவத்தை பகுத்து சொல்கையில் Will அ விருப்பம் உதிர்தல், incubation(ஒரு வித மௌனம்) , Calamity (உடல் மாற்றங்கள்) என்று விளக்குகிறார். மரபின் தொடர்ச்சியாக தன்னை ஒரு போதும் அறிவித்துக் கொள்ளாத யூஜி ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்  எண்ணங்களின் ஓட்டத்தின் முன்பான நம் ஆதரவற்ற நிலையை சுட்டி காண்பிக்கிறார். 

யூஜி மனித சிந்தனையே ஒரு நரம்பு சார்ந்த குறைப்பாட்டால் உருவானது என்றும், எண்ணம் உடற்செயற் பாட்டிற்கு  விரோதமானது என்று கூறும் இடங்கள் அதிர்ச்சி அளிப்பவை, ஆனால் நாம் குரு கட்டத்தின் உள்ளே தான் leading into zone ல் தான் இருக்கிறோம் என்பதுவும் உண்மை. யூஜி ஒப்பு க்கொள்ள மாட்டார் என்றாலும் நூலை வாசித்து முடிக்கையில் ஒரு வித அமைதி வந்தது உண்மை, அது வெறும் சாராம்ச புரிதல் comprehension கொடுத்த இன்பம் அல்லது கற்பிதம் என்று அழைக்கப்படுமோ? சாதகம் இல்லை என்றால் இவ்வித பரிச்சயங்கள் வெறும் சொற்குவியல்களோ ? 


Sunday, September 26, 2021

குண சித்தர்கள் - க சீ சிவகுமார்

நிஜ வாழ்வில் நாம் அதிகம் கவனித்திராத , மறக்கப்பட்ட, அதிகம்  விஷயங்களுக்கு ஒளியூட்ட இலக்கியங்கள் முயல்கின்றன. நல்ல இலக்கியம் விதிவிலக்குகளை கொண்டே பொதுவான நியாயமான விஷயங்கள் குறித்த கேள்விகளை வாசகனிடத்தே வைக்கின்றன, நல்ல இலக்கியம் வாழ்வின் அத்தனை இறுக்கங்களையும் பரிச்சயப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இலக்கியத்தை ஒரு சோக பாவனை யாக கருத முயல்கின்றனர். இத்தனை இறுக்கங்களையும் மற்றொரு வாசல் வழி நாம் காணத் தொடங்குகையில் நாம் சிரிக்கத் தொடங்குகிறோம். முதல் வகை நேரடி "போஸ்" என்றால் பின்னது "சைடு போஸ்". பகடி என்னும் சைடு போஸ்.



32 கட்டுரைகள் கொண்ட தொகுதி. ஒவ்வொரு கட்டுரையும் அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள், இப்படைப்புகளை கட்டுரைகள் என்று வகைமை படுத்துவது கூட ஒரு வசதிக்காக தான், கட்டுரை என்றுமே ஆய்வாளர்களின் விமர்சகர்களின் அறிவுஜீவிகளின் தளம், வாழ்வின் யதார்த்தம் நிறுவனமயப்படும் இடம் கட்டுரைகள்,ஒரு மிகைக்காக இதை கூறுகிறேன். குண சித்தர்கள் படைப்புகளில் சித்தாந்த சாயலோ நிறுவன சாயலோ அறவே இல்லை நாம் தினப்படி காணும் மனிதர்களின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை, ஒவ்வொரு கதையிலும் ஒரு மனிதனின் குறிப்பிட்ட குணாதிசய உலகில் நாம் அமிழ்கிறோம். சிறுகதைக்கான உயிர்ப்புடன் நிகழும் அதே நேரத்தில் கவித்துவம் மிளிரும் பல வரிகளை கொண்ட படைப்புகள் குண சித்தர்கள். 

அந்த மனிதனின் ஒட்டுமொத்த சாராம்சமே அந்த குணாதிசயம் தான் என்று ஆசிரியர் நம்மை நம்ப வைத்து அந்த மனிதனை வைத்தே ஊர் சுற்றி, அவன் சுற்றம் படும் பாடுகளை அல்லது அவன் அல்லல்களை காண்பித்து, நடக்கும் விஷயங்களை கண்டு நாம் சிரித்து சிரித்து ஓய்கிறோம். மீள யோசிக்கையில் அனைத்து நிகழ்வுகளின் உள்ளடக்கம் கொண்டு நேர் போஸில் இறுக்கமான கதைகளை அமைக்க இருக்கும் சாத்தியங்களைக் கண்டுகொள்கிறோம். 

கேள்வியின் நாயகன் - "கோழி ஏன் உலகத்தில் வந்தது ? அந்த இனத்தின் நோக்கமென்ன ? " என்று வினவுகையில் நம் அத்தனை நிறுவன ஆசைகளும் குப்புற கவிழ்கின்றன. மேகவண்ணன் - கண்டக்டர் ஒருவர் பேருந்தில் ஏற வரும் ஒருவர் குறித்த சித்திரம் "சரியான பாதையில் வருகிற அவர் சரியான போதையில் வருகிறவராகவும் இருந்தார் " என்ற வரியை விரித்து புரிந்து கொள்ள எவ்வளவு சாத்தியங்கள். எளிமையான வார்த்தைகளின் வரிசை பகடியாகும் மாயம். வரிசை சிறிது மாறினாலும் பகடி காணாமல் போகிறது . பிறவிகவிராயன் - "வேலு , நிஜமாகவே மலர்ந்து விட்ட பொழுது அது, சருகெடுத்து நுகர முடியாது என அறிகிற பொழுது " 

எந்தக் கதையிலும் வசையோ சாடலோ கேலிசித்திரமாகவோ இக் குணாதிசயங்கள் பதிவாகவில்லை. அத்தனை அக்கறையுடன் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் உரையாடி இருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசித்து சிரிக்கிறேன். 


Monday, September 20, 2021

உண்மை ஒளிர்கவென்று பாடவோ ? - பா விசாலம்

 


நூற்றாண்டுகளாக நாஞ்சில் நாட்டில்  நாடார் X வெள்ளாள சமூகங்கள் இடையே கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றை பின்புலமாக கொண்டு 1940 முதல் 1970 வரை வடக்கன்குளத்தை சார்ந்த ஒரு வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தின் கதையை முன்னிறுத்தி அமைந்திருக்கும் நாவல், நாவல் என்பதை விட கதைக் களஞ்சியம் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். நாவலை வாசித்தப் பிறகு விக்கி யில் கதை நிகழ்வில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்து ஆர்வமுடன் தேட அமைந்த வரிசை இது, Vascoda Gama, Francis Xavier, Galileo, John Britto aka Arulanandar, Roberto De Nobili, Veerama Munivar என்கிற முதல் வரிசை 16,17 மற்றும் 18ஆம் நூற்றாண்டு jesuit மற்றும் வணிக விஷயங்கள். தொடர்ந்து.. ராஜா மார்த்தாண்ட வர்மா dutch படையினரை வென்ற குளச்சல் போர் திருவிதாங்கூர் உருவாக்கம், அதன் பின்னரான dutch lanoi ,நீலகண்ட பிள்ளை, தளவாய் ராமையா, எட்டு வீட்டு பிள்ளைமார் ராஜாங்க ஆட்டங்கள், நீலகண்ட பிள்ளை தேவசகாயம் பிள்ளையாக மாறும் நிகழ்வுகள், தேவசகாயம் பிள்ளையை கொல்ல ராஜா மார்த்தாண்ட வர்மாவின் ஆணை, தேவசகாயம் பிள்ளை கோட்டாறு சேவியர் ஆலயத்தில் நல்லடக்கம் வரையிலான காலகட்டம், தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அய்யா வைகுண்டர் குறித்த குறிப்புகள்... தொடர்ந்து பிரஞ்சு பாதிரி கொணச்சலின் புதிய வழி முறைகள் , சர்ச் பிரிவு சுவர் இடிப்பு,1895ல் நடந்த கழுகுமலை கலவரம், மருமக்கள் வழி முறையை  மாற்ற நடைபெறும் முயற்சிகள் , கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ராணி சேது பாய் கால பள்ளிக்கூடங்கள் என தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம் வரையிலான நிகழ்ந்த வரலாற்று பின்புலம், முன்னும் பின்னுமாக கதைகளாக, சம்பவங்களாக நினைவு கூறல்களாக பெரும் பகுதி நாவல் அமைந்துள்ளது. 


பெண் உரிமை அல்லது பெண்களின் நிலை,  மதத்தில் சாதியின் தாக்கம்  இவ்விரு விஷயங்களும் மேற்கூறிய வரலாற்றின் பக்கங்களின் முக்கிய இடங்களை பிடித்ததோர் கதையாடல் நம்மிடையே உள்ளது. இத்தகைய பெரியதொரு பின்புலம் அல்லது வரலாற்று பீடிகை அமைந்த பிறகு   இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்  ஒரு தனி வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தில் மேற்கூறிய இரு சரடுகளைப் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது. எவ்வளவு தூரம் விஷயங்கள் மாறியுள்ளன அல்லது மாறவில்லை என்று அறிய இந்தக் குடும்பம் என்னும் சிறிய அலகை  ஆராய்கையில் எப்போதும் போல் நிறைய மாறியிருப்பதாக இருப்பினும் எதுவும் மாறாதது போலுமான சித்திரம் கிடைக்கிறது. 

Sunday, September 12, 2021

திகம்பர நினைவுகள் - தேவகாந்தன்

 எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களின் பால்ய காலங்களின் நினைவோடை. 1947 ல்  இலங்கையின் வட மாகாணத்தில்பிறந்தவர். பல முதல் அனுபவங்களில் "அன்று எவ்வாறு உணர்ந்தோம் என்று இன்று நினைவுகளை" மீட்டி சிறு நிகழ்வுகளின் கோர்ப்பாக எழுதப்பட்டுள்ள நினைவோடை.


வாசிக்கையில் முதலில் உணர்ந்தது அதன் நிதானமான நடை , மிகை தவிர்த்து சுவையான பால்யத்தை காலத்தின் முதிர்ச்சியின் துணை கொண்டு நினைவுகளை மீட்டுகையில் எழும் நிதானம் எழுத்தில் நன்கு வெளிப்படுகிறது , நாற்பது ஆண்டுகளாக இயங்கி வரும் படைப்பாளியின் மொழி ஆளுமையும் ஒரு காரணம்.

பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு "முதல்" அறிதலாக பதிவாகி இருக்கிறது, நினைவோடையின் ஒருமைக்கு கலைத்தன்மைக்கு இந்த "முதல்" சரடு வலு சேர்க்கிறது. முதற் கனவு, முதல் பிரார்த்தனை, முதல் மரணம், முதல் இழப்பு, முதல் தனிமை, முதல் காதல், முதல் பயம், முதல் காதல், முதல் கடல், முதல் பீடி, முதல் அக்கா, முதல் வெற்றி, முதல் கலவி, முதல் வாசிப்பு..முதல் தவறு என வாசகனை மகிழ்விக்க பிரயத்தன படாது  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது, முன்பே கூறியது போல், ஒரு கனிந்த நிதானத்துடன் பால்யத்தை மீட்டுகிற திகம்பர நினைவுகள். 

நிதான நடையில் இருந்தாலும் நினைவோடையின் நிகழ்த்திக் காட்டும் தன்மையில் குறைவில்லை, ஆசிரியரோடு நாமும் சேர்ந்து நினைவுகளில் உயிர்ப்புடன் பங்கு கொள்ள  முடிகிறது.பிறிதொரு நாளில்  நினைவோடையில் அமைந்துள்ள புதிய சொற்களை கண்டடைய, மென் உணர்வுகளை உணர இன்னும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.

Tuesday, September 07, 2021

The Last Brahmin - Rani Siva Sankara Sarma

In August, Tamil writer Bogan Sankar wrote one Facebook post on choices available for Individual wrt Religion, as per him there are only three options 1)  Orthodoxy 2) Iconoclasm 3) Reform. 



Providentially stumbled on a book called " The Last Brahmin" by Rani Siva Sankara Sarma through twitter recommendations, Originally written in Telugu (2002) translated by D Venkat Rao (2007). This book s theme providentially matched the Traingular Views of the above suggestive actions, Author s Father representing Orthodoxy , Author s Brother a Reformer while the Author himself can be called a iconoclastic.

Book is a semi autobiography and a religious commentary at same breath with Author s self confessed hallucinatory inferences and matter of Facts from Our Country s Long Social History. All Three abovementioned View Points occupy equal space in this book, Perhaps  this book can be exaggerated as moving accounts of three people  - Orthodoxy trying to maintain ancient order, Reformers trying to negate Colonial Views and Author as a Iconoclast seeing the futility of it all, This book is a work of Non Fiction but due to author s Poetic inclinations he takes us through a dizzying ride with usual pitstops with Audacious conclusions and inferences making it a worthy read.

Sampling amongst quiet a dizzying view points in the book ,If I can choose, "Temples came very late into the scene and it has no reference in ancient vedic order", "Adi Sankara is Buddha in disguise", "Hinduism is Proxy Christianity". Perhaps all were not original thoughts but told earlier by different people in different times.

For a Lame reader what remained is the awareness about the possibility of  all three personalities present in a single individual, a  schizophrenic , the elusive enigmatic attractive discipline of the Orthodoxy charm refuses to die but cleverly negating with changing times is a Reformer for the worldly proceedings reserving iconoclasm for our self projecting image. Superb Read.




Sunday, August 22, 2021

இக்கதை தொடங்காமலே முடிகிறது - சயன் சகோதரர்களின்

சயன் சகோதரர்களின் 'இக்கதை தொடங்காமலே முடிகிறது' "இழந்த சொர்க்கம்" குறித்த நேர்மறையான கனவுகளுடன் வந்திருக்கும் பிரதி, இங்கு சொர்க்கம், 'தூய' 'கறைபடாத' 'கலப்படம்' இல்லாத 'குழப்பங்கள்' இல்லாத ஒரு 'அன்பான', 'பூச்சு' இல்லாத 'முகமூடிகள்' அற்ற, 'மனிதஅறிவு' தலையிடாத  பழைய காலம் என்ற பொருளில் வருகிறது. 


ரொமான்டிக் என்று கூறலாமா என்று தெரியவில்லை, ஆனால் உணர்வு பூர்வமான ஒரு கனவின் வெளிப்படாக இந்த கதை அ கதைகள் இருக்கின்றன.  

கதையின் பிரயத்தனம் முதலில் களைய வேண்டிய பிரிவுகள் அ வேற்றுமைகள் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன, மேலும் முன்னகர்ந்து இத்தனை கால சிலந்தி அடைசல்களையும் களைந்து இயற்கையுடன் இணையும் ஒரு முயற்சியாக நம் உடலையும் உடல் குறித்த எவ்வித பேதமற்ற பிரக்ஞையையும் இக்கதை முன்வைக்கிறன.  உடல் குறித்த நேர்மறை பிரதியாக , உடலின் மீது படர்ந்து செல்கிறது இந்தக் கதை. உடல்களின் இணைவை, கலவியை ஆதி ஆற்றலின் செயலூக்கத்தின் ஆவேசத்தின் இயலாமையின் அதிகாரத்தின் ஒரு பகுதியாக, வடிகாலாக காணாது அன்பின் விதைப்பாக காண்கிறது. என்றோ தொடங்கிய இந்த இருமையே இக்கதையின் அடிநாதமாக இருக்கிறது. அன்பின் விதைப்பிற்கும், பிரிவின் விதைப்பிற்கும் காரணமான இயற்கை கீற்று அமிலத்தின் (DNA)கதை தானா மனித வரலாறு ?. DNA என்பதன் இந்த மொழியாக்கம் ஆசிரியர்கள் செய்திருப்பது, நன்றாக அமைந்த ஒன்று.கணியன் கூறிய புணை போல் ஆருயிர் இந்த இயற்கை கீற்று அமிலமோ? 

கதையின் உச்சப்புள்ளியாக இந்த அன்பின் விதைப்பை இணைவை நாம் கண்டுகொண்டால் மேலதிக கேள்விகளுடன் பிரதியை தாண்டி நாம் இன்றைய நாகரீகத்துக்குள் இறங்கலாம்.  கொல்லும் நோக்கம் இல்லை எனினும், எல்லை காப்பதற்கும், உணவிற்கும் நடக்கும் கானுயிர் இயக்கம் நமக்கு சொல்ல வருவது என்ன ? எறும்பு முதல் சிங்கம் வரை , பாசி முதல் ஆகாயத்தாமரை வரை, கள்ளி முதல் ஆலம் வரை உயிர்களை இயக்குவது எது ? கதை விவரிக்கும் நீர் துளிகளின் காதல் என்ற கவிமனம் அருகே மெர்வின் ஹாரிஸ் எழுதியுள்ள "The Naked Ape" என்கிற விலங்கியல் புத்தகத்தை வைத்தல் அபாண்டம் எனினும் நாம் முயல்வோம். உடற்கூறியல் மற்றும் மரபணு கதைகளின் படி மனிதன் கானுயிர் வரிசையின் முடிசூடா நாயகன். கலாச்சார வெற்றி அல்லது தோல்வி வெகு பின்னே வருகிறது, உடல் கூறு அமைந்த விதத்திலேயே மரபணு அமைந்த விதத்திலேயே தன் உடல் தவிர்த்த பொருட்களை உபயோகித்து தன் இருப்பை நிலைநாட்டியவன் மனிதன்.கலாச்சார நடவடிக்கைகள் மிக சொற்பமான அளவே அவனை மட்டுப்படுத்திறது என்கிறார் மெர்வின்.  அதே நேரத்தில் போர்களின் trauma தாக்கம் மரபணுக்களில் பதிகிறது என்றும் நாம் காண்கிறோம்.இலக்கிய பிரதியான இந்த கலாச்சார முயற்சியும் அவ்வகையே, இழந்த சொர்க்கம் பற்றி பேசும் கதை எனினும், அது தன் விழைவை, வேற்றுமைகள் நீங்கிய எதிர்காலத்தை நோக்கியே வைப்பதான எத்தனிப்பை கொண்டுள்ளது.  இதே கனவை நாம் தத்துவங்களிலும் சமூக இயங்கியல் தளங்களிலும்  கண்டிருக்கிறோம். இன்னும் வரும். 

Friday, August 20, 2021

மனிதர்கள் - நா கிருஷ்ணமூர்த்தி

சிறிய சிறிய திரிபுகள், கோணல்கள் அமைந்த கணங்கள், மனிதர்கள் பற்றிய கதைகள் இவை . இந்த கோணல்களின் வார்ப்பில் கூட ஒரு முழுமை இருக்கிறது . அவசர கோலத்தில் மட்டுமே வருகிற கோணல்கள் அல்ல நின்று நிதானித்து வரும் திரிபுகள் மாதிரிகள்.


அவற்றின் அழகே ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ரூபங்கள் எடுப்பது தான் . "மனிதர்கள்" கதையில் அபாண்டாமாகவும், "உதிரும் மலர்கள்" கதையில் லௌகீகமாகவும், "ஒர் இரவின் பிற்பகுதி" கதையில் திகைக்க வைக்கும் அழகாகவும் அதட்டலாகவும, "வருகை" கதையில் லட்சிய முகமாகவும், "நிழல் மரத்தில்" புகழின் நிழலாகவும் இந்தத் திரிபுகள் வண்ணம் காட்டுகின்றன. இவ்வகை கதைகள் திரிபுக்கான காரண காரிய ஆராய்ச்சிகளில் இறங்காது கோணல்களின் முழு சொரூபத்தை நமக்கு காட்ட முயல்கின்றன. இருந்தும் துளி கூட அவநம்பிக்கை ஊட்டாத வகையில் கதை சம்பவங்கள் யதார்த்த பாணியில் நடந்து முடிகின்றன.

ஒப்பு நோக்குகையில் தொகுப்பில் உள்ள "காலமேனும் தூரம்" கதை சற்றே விலகி வேறொரு பின்புலத்தில் நிகழ்கிறது. அனைத்து கதைகளும் அறுபதுகளில் "நடை" மற்றும் "கோணல்கள்" தொகுப்பிலும், "வருகை" கதை 1971 ல் "கசடதபற" விலும் வெளிவந்துள்ளன.

இந்நூலிற்கு உஷாதீபன் அவர்கள் எழுதிய விமர்சனமும் (ஜெயமோகன் அவர்கள் தளத்தில்), மாமல்லன் அவர்கள் கொடுத்த "நண்பர்கள்" கதை சுட்டியும் ( தினமணி) புத்தகம் வாங்கத் தூண்டியது, இக்கதைகளை வாசிக்கையில் நம் வாழ்வில் நாம் கண்ட திரிபுகளை அசை போட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்.

Sunday, August 15, 2021

Summer of 92 - Navarasa

Summer of 92 (Navarasa) உட்பிரதி குறித்து, படம் பார்த்தவர்களுக்கு மட்டும். பெரும்பாலான இடங்களில கண்டிப்பாக சிரிப்பு வரவில்லை, ஆனால் "சிரிக்கிற விஷயம் இல்லை" என்கிற வகையில் படத்தின் உட்பிரதி அமைந்துள்ளது. படத்தின் பல சிதறிய அம்சங்களை குவித்து வைத்து காணவே இந்தப் பதிவு


படத்தின் பீரியட் ,சுதந்திரம் அடைந்த பத்து ஆண்டுகளில் நடப்பது போல் உள்ளது. அதே நேரத்தில் படத்தின் தலைப்பு Summer of 92 என்றும் , யோகியின் அல்லது innocent ன் வெற்றிகள் நிகழும் காலம் என்கிற நினைவும் படம் பார்க்கும் நமக்கு எழுகிறது, இந்த கலவையான கால உணர்வு தலித்துகள் நிலை மற்றும் எழுச்சி பற்றி அறிந்து கொள்ள ஒரு  வசதியான திரை ஏற்பாடாக நாம் கருத முடியும். 

படத்தின் நாயகன் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை, ஆனால் பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி, எப்படி தன் பள்ளி படிப்பு தடைப்பட்டது என்றும், படிப்பு அல்லாத காரணங்கள் எப்படி அவனை பள்ளி கல்வியை முடிக்க விடாமல் செய்தது என்றும், படித்து முடித்தாலும் அவனுக்கு அமைய இருக்கும் வேலை மலையக தோட்டத்தின் தொழிலாளர் வேலை என்றும் கூறுகிறான். படிப்பு என்ற ஆயுதத்தின் எல்லை எவ்வாறு மட்டுப்படுத்த படுகிறது கருத இடம் உள்ள சிறிய கண்ணி இது, மேலும் படிப்பை தடுத்து நிறுத்தும் நிகழ்வுகளை " குற்ற பரம்பரை" , "செருப்பு" ," சண்டியரின் நாடக காதல்" என்ற வரிசையில் புரிந்து கொள்ள இடம் இருக்கிறது, இதே வரிசையில் வரும் படத்தின் கடைசிக்காட்சிகள் அமைந்துள்ளன.

வெள்ளைக்கார நாயை விரட்ட நடக்கும் ஒப்பந்தங்கள் - நம் சுதந்திர போராட்ட வரலாற்றை நில மற்றும் கல்வி உடைமை சாதிகளின் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி Vs அடித்தட்டு மக்களின் உணர்வெழுச்சியான பங்கெடுப்பு என்று ஒரு புரிதலுக்காக எளிமையாக வகுக்கலாம், பின்னதே நம் போராட்டத்திற்கான ஆன்ம பலத்தை கொடுத்தது, தங்களால் தனியாக விரட்ட முடியாத வெள்ளைக்காரனை அடித்தட்டு மக்களின் துணை கொண்டு விரட்ட ஏற்பாடானது. அதுவே பல்லாண்டுகளாக இருந்த நிலம் x கல்வி உடைமைவாதிகளின் வேறொரு ஏற்பாட்டின் கீழ்மைகளை,  ஊருக்கு வெளியே இருந்து, அதே வெள்ளைக்காரன் வழி நம் வீட்டின் வரவேற்பறைகளுக்கு கொண்டு வந்தது, முன்பே கூறியது போல் இது சிரிக்கும் விஷயம் அல்ல. வைதீகர்கள் உரம் என்றால் சண்டியர் Schrödinger's Cat என்கிறார்.

பல ஆண்டுகள் கடந்தும் இவ்விஷயங்கள் நிலம் x கல்வி உடைமைவாதிகளை தொந்தரவு செய்கிறது. மன்னிப்பின் இடத்தில் முணுமுணுப்பை வைக்கிறார்கள்.

Wednesday, August 11, 2021

உப்பு வேலி - ராய் மாக்ஸம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்த , சிறுக சிறுக அமைக்கப்பட்டு உறுதியான வேலியாக மாறி மக்களை சுரண்டி மாபெரும் பஞ்சங்களின் கோர பிடியில் தவிக்க விட்ட ஆங்கிலேயர் அமைத்த சுங்க வேலி குறித்து வரலாற்றாய்வாளர் ராய் மாக்ஸம் எழுதியுள்ள ஆதாரபூர்வமான நூலான "The Great Hedge of India " வின் தமிழாக்கம் இந்நூல், மொழிபெயர்த்தவர் சிறில் அலெக்ஸ், தன்னறம் வெளியீடு


ஆங்கிலேய ஜெனரல் ஒருவரின் நினைவலைகள் நூலின் அடிக்குறிப்பில் தொடங்கி (Bakewar) பகெவார் வரை நீண்ட பயணம் இந்த நூல். அந்த அடிகுறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசு ஆவணங்களின் வழி, புவியியல் துறை வரைபடங்கள் வழி, இந்திய நண்பர்கள் துணையோடு gps கருவியின் எண்ணற்ற எண்களின் வழிகாட்டுதலில், வழிபோக்கர்களின் நண்பர்களின் உற்சாகமும் கேலியும் உந்தி தள்ள ராய் அவர்கள் கண்டடைந்தது என்ன என்பதை என் வாசிப்பில் தொகுத்துக் கொள்கிறேன்

கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத ஒரு அமைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதற்கான சாத்தியங்களை ராயின் சொற்களில் நாம் அறிந்து கொள்கிறோம், தனி நபரின் பேராசையாக தொடங்கி பின்னர்  கம்பெனியின் ஒப்புதலோடு குறிப்பிட பங்குதாரர்கள் சூறையாடும் களமாகி அதையும் தாண்டி ஆங்கிலேய அரசின் ஒப்புதலோடு  சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூறையாடும் அமைப்பாக படிப்படியாக மாறுகிறது 

1857 க்கு பிறகான நேரடி  கட்டுப்பாட்டிலும் இந்த அமைப்பு தன் நாச வேலையை செவ்வனே செய்தது  குறிப்பிடத்தக்கது, தானியங்கள் பதுக்கல் , நிலவரி போக உப்பின் மீதான வரி, பதுக்கல் பாமரமக்களின் உயிர்களை சிறுக சிறுக உறிஞ்சி, தாது வருஷ பஞ்சங்களின் போதும் உப்பு வரியை கடுமையாக வசூலித்து ஒரு மானுடத்தன்மையற்ற சுங்கவேலியை தனது வருவாய் ஈட்டும் எந்திரம் ஆக்கியது ஆங்கிலேய அரசு.  இதை ஆங்கிலேய அரசின் அதிகாரிகளின் வருடாந்திர குறிப்புகளிருந்தே நிறுவுகிறார் ராய், இன்னொரு நம்ப முடியாத தகவலாக AO Hume அவர்கள் சுங்க ஆணையராக இவ்வேலியை பராமரிப்பதிலும் நீட்டிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறார், ஏனைய மாகாணங்களை விட வங்கம் பெருமளவு உப்பு வேலியால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஏனைய நாடுகளில் இருந்த உப்பு வரிகள் குறித்த பார்வையும் , உடல் நலத்திற்கு தேவையான இன்றியமையாத ஒரு பொருளாக உப்பு இருப்பதையும் நிறுவுகிறார், வேலியின் எச்சங்களை காண இந்திய கிராமங்களில் நடையாக நடக்கிறார், ஒருவருக்கும் இது குறித்து எதுவும் தெரிவதில்லை, ஒரு சில முதியவர்கள் "பர்மத் லயின்" என்ற அளவிலேயே அதை அறிந்து கொண்டுள்ளனர், 90களின் இறுதியில் ராய் தன் கள ஆய்வை மேற்கொண்டார், 150 ஆண்டுகளுக்குளாகவே மக்கள் பிரக்ஞைலிருந்து இவ்வேலி மறைந்து விட்டதை நம்ப முடியவில்லை, வேலி கைவிடப்பட்ட 50 வருடங்கள் தாண்டி காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் செய்ததை ஒத்துழையாமை குறித்தே நாம் இணைத்துப் பார்த்தாலும், உப்புவேலி குறித்து ஏதேனும் ஒரு வகையில் காந்தி அறிந்திருப்பார் என்றெபடுகிறது. நம் பாட புத்தகங்களிலும் இவ்வேலி குறித்து எந்த முக்கிய இடங்களும் இல்லை , இது வருந்தத்தக்க விஷயம். 

ஆங்கிலேய மேலாதிக்கத்தின் ஒரு அலகான இந்த உப்புவேலி குறித்தே ராய் வரும் வரை நமக்கு தெரியவில்லை என்றால் ஏனைய துறைகளின் வேலிகளை கண்டறிய நாம் இன்னொரு ராயின் வருகைக்காக காத்திருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

மரபை குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு எல்லை என்றால் அப்பட்டமான சுரண்டல் அமைப்பை குறித்த நேர்மையான பார்வையை கூட வைக்க இயலாத மலட்டுதன்மை இன்னொரு எல்லை, ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் கூறுவது போல் நம் சம கால உளவியலை தீர்மானிக்கும் சக்திகளாக இப்பெரும் பஞ்சங்கள் அமைந்தன. 

பகெவாரின் கருவேல மரங்களும் இலந்தை முள் செடிகளும் பின்னிய இந்த வேலி பெரிதும் கவனப்படுத்த படாத பல்லாயிர மைல்கள் நீண்ட உப்பு வேலியின் எஞ்சிய கள சாட்சி.

Monday, August 02, 2021

Hindu Religion An Enquiry by Srinivasa Ramanujam

 

Discussion on Possibilities and Challenges against the premise of Hindu Rashtra dream of RSS


Doesn't account for Marxist, Mythological reading of India, Doesn't account for Nationalistic Fervour of Freedom Movement, Doesn't take into account the relative absence of Violence in Society compared to other parts of the world

Largely Reduces the Role of Mutt to inactors without taking into account that their predominant duty is to sustain the Legacy of their forefathers


Interesting Informative  read 


-------------

Notes 

Approaches of Adisankara and RSS similarities

Hindu Religion formed after destroying peasants and Saints - Devadevan ?

Supremacy of RSS head over Ruling Government

-------

Overarching We Hindu Theme over several infinite Other Me themes underneath

Is RSS a Hindu Mutt in addition to being a religion

Difference between We Hindu Vs Other Me s We s

We Hindu Vs Virat Hindu of Golwalkar

Societal Need for Other We s 

Basis on Brahmin Supremacy  or Supremacy

For Buddhism and Jainism Supremacy is in Sainthood

For Bhakti Movement it is in Kudumbasthan or Practical or Materialistic

For RSS Hindu Nationalism

-----------

Sankarar s established Pure Brahman who is beyond all Varna s who is beyond all Rituals 

Similar RSS calls for We Hindu which tries to assimilate or reject numerous other We s beneath for the nationalist goal

Golwalkar gets Sainthood but returns back to RSS Mutt as a Hindu

Can a pure Brahman can be a Hindu , No is the Answer 

But Golwalkar has a valid point that saints across caste creed travelled length and breadth of the country to forge cultural Unity 

Supremacy as a tactical tool or as a notion across creates various groups establishing their Supremacy though they themselves were carved out as an opposition to some another supremacist view - crux of whole article

Why We Hindu cannot include Christians and Muslims

Notion of Supremacy in Hinduism Vs God & Ambassadors of Gods in other religions 

Difference between Sainthood and RSS Mutt Hood - Is Individual Liberation a valid goal for Mutt Hood

Adi Sankarar s Pure Brahman as an answer to Buddhist concept of Sainthood still retaining lovkeega  Ritualistic Status of Kudumbasthan aka Kudumba Brahman 

Is Kudumba Brahman a supplemental to Pure Brahman 

Metaphysical nature of Goals in Both RSS and Sankara Approaches - Debatable

Supremacy Vs Untouchability hand in hand movements

Supremacy handed out culturally by Brahmins to Others , Non Brahmins use  Supremacy as a Political Tool against Brahmins, Dalit use this Supremacy concept politically against Non Dalits 

Role of Individual Goals in RSS We Hindu Canopy 

Role of Family in extending Supremacy and Untouchability

Is RSS Mutt distinctly cut from functioning Society

How Gandhi fought against Untouchability in his Ashrams , 

Gandhi s We Hindu vs RSS A We Hindu 

RSS example of community without caste creed is like factory workers working in a factory, less influence on Practical real challenges in handling Untouchability in real life whose unit is a functioning Family

Is RSS a counter part to Vatican, a mega mutt

How Hinduism absorbs  all other sect Sikhism Saivete Vaishnnavaite Buddhist Jainism by the thread of Brahmanical Supremacy 

Islam, Christianity or Any other Individual government doesn't have interaction points like above with Hinduism, They operate on Different plane 

----------


RSS and Government

Historical King - Brahmin - Sainthood Axis before and After Sankarar

After Sankarar both Brahmins and Sainthood became mixed 

RSS as an independent Organisation away from Societal crutches , A Pure Dream ,RSS as a Rajarishi Role to Government , Dispute resolver, A Non Responsible Controlling Force of the Government, staying Away from vote politics to maintain its puritanical self away from uncomfortable questions of democratic set up 

Role of Intermediary for attaining people s goals both in religious and non religious spheres, God , Priesthood and Government  in between people , Jewish question by Marx 

Absence of Intermediary in Hindu , Priesthood part of people set up and Sainthood beyond the concept of God resulting in complete absence of Intermediary in current setup of Hinduism , Brahmanical or Simple Supremacy being played out mutually between societies which makes it unique,

Fight between Intermediaries Religion and Government resulted in New concept of Democracy and Secularism

How to understand secularism in Indian context where the clash between Intermediaries has not happened and only Supremacy as a notional tool exists. If secularism is acceptance of diversity then Hindu Religion is more diverse and secular than any other resulting in advantageous position for RSS narrative , a rebuttal to Shashi Tharoor

Metaphysical goal, Body is Land and People, Dress is Government and Soul is Culture - RSS being in Sainthood rejects human bodies as impure hence establishing its Supremacy

Democratic Government neutralises this Supremacy which sustains itself through other means which need to be dealt to win over RSS 

Metaphysical RSS goals has to  delinked to historical Hindu practices and Mutt Activities and Cultural, Philosophical enquiry into Mutt needed to fight against the notion of Supremacy which sustains itself in many forms by reinventing itself 

----------------

Role of Foreigners Jesuits  in defining Brahmin as a focal point of Hindu Religion, Oriental studies equated Christian Religiosity  aka Christian Father ship with complex Brahmin X Priest hood X Saint Hood set up existing in India. This led to Brahmin centricity which is still embedded in Our thought process in explaining History and Indian Religion 

Examination of a Particular caste is essential in caste annihilation , instead we have general Caste Abolition goals which are not exactly helping the cause

Hindu, Non Brahmin, Dalit  are new coinages or political identities foisted as New Reality over separate individual caste identities which are there ever since, Supremacy as a notion is present in all caste identities, Supremacy and Untouchability go hand in hand , Caste can only be annihilated only if we question the intrinsic Untouchability supremacy notion present within a sect,  Each sect cleverly subverts Untouchability as an aberration of the other instead it has to own the aberration as its own, This will help the New coinages Hindu, Non Brahmin, Dalit to enter cultural sphere in addition to being successful in Political Sphere 

கொனஷ்டை படைப்புகள்

கவிஞர் ராணி திலக் தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்திருக்கும் மணிக்கொடி காலத்து எழுத்தாளரான கொனஷ்டை அவர்களின் கதை கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு "கொனஷ்டை படைப்புகள் ".  அதிக பிரசங்கி , சந்நியாசி, ஈசுவர லீலை, தெய்வச்செயல் ஆகிய கதைகளும், 'ஊருக்குள்ள யாத்திரை' மற்றும் 'எங்கள் ஊர்' கட்டுரைகளும் பிடித்ததாகவும் நன்கு அமைந்து வந்ததாகவும் படுகிறது. 


முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் "இவற்றை மதிப்பிடுவதும் எடை போடுவதும் அவசியமற்றது, அவை அந்த காலத்தின் நவீன எழுத்துக்கள்" என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் கூறியதாக முன்னுரையில் கவிஞர் ராணி திலக் குறிப்பிடுகிறார், இதை அப்படியே ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் பெரியவர்கள் கூறுவதில் விஷயம் இருக்கும் என்றே புரிந்துக்கொள்கிறேன்

எனக்கு பிடித்த மேற்சொன்ன குறிப்பிட்ட கதைகளும் கட்டுரைகளும் இன்றளவும் புதுமை குன்றாது அமைந்திருக்கின்றன. இந்த சில கதைகளின் வடிவமும் உள்ளடக்கத்தின் பாய்ச்சலும் நவீன கதை கட்டுரைகளுக்கு சளைத்தது அல்ல, ஏனைய கதைகள் மெலிதான ஹாஸ்யத்தின் துணை கொண்டு புராணம் , துப்பறிவு, காதல், அச்சு இதழ , சினிமா நட்சத்திர மோகம் ஆகிய தளங்களில் நிற்க முயல்பவை. சில கதைகள் வடிவ அல்லது வாசகர் மனதுடனான ஒரு சீட்டு விளையாட்டு எனக் கொள்ளலாம். இம்மதிப்பீடுகள் ஒரு வாசிப்பு கணத்திற்காகவே, கதைகளில்  அமைந்த தயவு தாட்சண்யம் இல்லாது அனைத்தையும் கிண்டல் செய்யும் இடங்களை ஹாஸ்யங்களை நவீன வாசகன் ரசிக்கவே வாய்ப்பிருக்கிறது. 

இந்நூல் வெளி வந்த விதம் குறித்து ராணி திலக் குறிப்பிடும் விதம்  சுவாரஸ்யம், மூத்தோர் வாக்கும் , தேடலும் , கடவுளின் ஆசியும், எதேச்சையும் கலந்து நம் கைகளில் புத்தகமாக வந்தமைந்திருக்கிறது "கொனஷ்டை படைப்புகள்".  முதல் புத்தகம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாசிப்போம். 

Tuesday, July 27, 2021

ஒன்பது குன்று

 



ஆசிரியர் அவர்களின் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும் இந்த கதைகட்டுரைகள்  நூல்,  நழுவிக் கொண்டே இருக்கும் விழுமியங்கள் குறித்து அசை போட , குறிப்பாக இந்நூலை வாசிக்கும் இளம் மற்றும் மத்திம வயதினரின் மனதில் லட்சிய வைராக்கியத்தை விதைக்க கூடிய ஒரு நேர்மறை கையேடு. இந்த கதை மனிதர்களுக்கு  அவர் தம் வாழ்வில் வென்று எடுக்க புதிய பொருளோ புதிய நிலங்களோ இல்லை, தாமே கனிந்த அந்த ஒரு கனம் முதல் மனதில் சூல் கொண்ட அந்த வைராக்கிய சுடரை துணை நிறுத்தி பகிர முடியாத ஞானத்துடன் செயல் யோகத்தில் அமர்ந்து விட்டவர்கள், அவர்கள் சுட்டவது எல்லாம் செயலயே , சமுதாயத்தால் வெற்றி அல்லது சாதனை என்று அறுதியிட்டு கூறும் தளங்கள் அல்ல இவர்கள் இயங்குமிடங்கள், தினசரி வாழ்வின் தளத்திலேயே இவர்கள் செயல் யோகம் அமைந்திருக்கிறது , காலத்தின் ஞானம் உணர்ந்து சமுதாய பெரும்போக்கிற்கு இணையான நேர்மறையான ஒரு எதிர்வினை இவர்கள் வாழ்வு , கால மாற்றங்களை தாண்டி நம்மை அழைத்து செல்லும் பகிர முடியாத ஞான சுடரை அணையாது தங்கள் வாழ்வையே செய்தியாக்கிய மாமனிதனின் தடம் பற்றிய வைராக்கிய மனிதர்கள் குறித்த கதைகட்டுரைகள் இந்நூல், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி 

Saturday, July 17, 2021

Kasaba - Nuri Bilge Ceylan

 


அலைந்து திரிந்து அயர ஒரு ஊர்,

அயர்ந்து தெளிந்து சொல்ல கதைகள், 

அருகில் அமர்ந்து கேட்க குடும்பம்,

நாளை அசை போடும் தீஜ்வாலைகள், 


இருப்பதியோரம் நூற்றாண்டு நுழைவாயில் அமைந்த 

ஒரு பின்னிரவுக் கவிதை

#Kasaba #NuriBilgeCeylan

Wednesday, July 07, 2021

வேரும் விழுதும் - க சுப்ரமணியன்

வேரும் விழுதும் - க சுப்ரமணியன் 

ஒரு அணை உருவாகும் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல், முதல் பதிப்பு 1970 ல் வைத்திருக்கிறது, திஜா அவர்களின் கவனம்,  சிட்டி வழி ,  வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, தற்போது சிறுவாணி வாசகர் மையம்  சார்பில் 2021 ல் மறு பதிப்பு. நல்ல நாவலை மீள் மறுபதிப்பு செய்ததற்கு  நன்றிகள் 

தனி மனிதன் - நாயகன் 

ஒரு நவீன மனிதன் தனிமையின் பிரதிநிதி , நவீனத்தின் நுழைவாயிலிலேயே தனிமை அவனை வரவேற்கிறது, நம் நகரகங்கள் இவ்வித தனிமைகளின் மலர்,  கிராம தேனீக்கள் மீண்டும் மீண்டும் வந்தமர்ந்து மீள முடியாத  பெரியதொரு சமுத்திர மலர் , நாவலின் நாயகன் அவ்வாறான ஒரு நகரத்தில் வந்தமர்ந்தவன் , நகரத்தின் கடிகாரத்தையும் அதன் எந்திரத்தனத்தையும் உணர்ந்து கொண்டவன், கிராமம் குறித்த பெரிய கனவுகள் இல்லாதவன். நாயகன் கதாபாத்திரம் எழுத்துப்பட்டுள்ள விதம் -  அனைத்து நிகழ்வுகளையும் அதன் போக்கில் நடைபெறுகையில் மௌன சாட்சியாக கடமைக்கும் குற்றஉணர்வுக்கும் கேள்விகளுக்கும் இடையே பெரிய அளவில்  எதையும் மாற்ற முயலாத ஒரு மௌடீகம் அமையப்பெற்றவன், ஒரு நவீன தனியன் சாத்வீகன் கடமையை செய்யக்கூடிய சரி தவறு குறித்து மனதளவில் அலட்டிக்கொண்டு , செயலளவில் கண் முன்னே அமைந்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன், நாவலின் ஏனைய கதாபாத்திரங்களை இணைத்து  அவர்கள் வாத பிரதிவாதங்களை கேட்டு "ம்" போடும் தத்துவவாதி, அவன் நாம் கதாப்பாத்திரங்களை காண ஒரு கேமரா ஆகவே இருக்கின்றான், இவ்வாறாயின் நவீன மனிதன் என்கிற விஷயத்தின் மீதே ஒரு அதிர்ச்சி தோன்றுகிறது, அவன் காணாமல் போகக் கூடியவன், பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இயங்கிக்கொண்டே இருந்தாலும் பார்வையின்மை என்னும் மிகப்பெரிய குழி அவனுக்காக காத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது , தனியன் என்பதால் எளிதில் வேறொருவன் அவனுக்கு பதிலாக அவனை போன்ற ஒரு மாற்றாக வருவதற்கான அத்தனை சாத்தியதையும் அவனே உருவாக்கிக் கொள்பவன் 

வாத பிரதி வாதங்கள் - பார்வைக்கோணம் - பெரியப்பா - டாக்டர் - அறம்வளர்த்தான் 

நாவலின் வீச்சு பெரியப்பா டாக்டர் அறம் வளர்த்தான் என்ற கதாபாத்திரங்கள் வழி பல்வேறு எல்லைகளில் வாசகனின் பார்வையை சீண்டியபடியே வருகின்றனர், அறிவின் எல்லையை, மனோதிடத்தின் எல்லையை, மண் மீதான பிடிப்பின் எல்லையை, வளர்ச்சியின் எல்லையை பக்தியின் எல்லையை  வாத பிரதி வாதங்கள் வழி வாசகன் உணர்கிறான், பழமைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன ? தேங்கி போன பழைய விஷயங்கள் என்று சொல்லப்படுபவை அறிவுக்கு ஒவ்வாதவையா ? நடைமுறைக்கு சரியாக வரும் சட்டங்கள் தர்மப்படி சரியானதா ? உணர்ச்சி வேகத்திற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா ? அறிவு எப்போதுமே வளர்ச்சியை மட்டும் தான் கொண்டு வருகிறதா ? இவை அனைத்தையும் நாயகன் வழி நாமும் அசைபோடுகிறோம், நாயகன் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாகவே இருக்கின்றான் மௌனத்தையே பதிலாக வைத்திருக்கிறான் 

நாவலின் நடை - உத்தி 

நாவல் விறு விறுப்பான சுவாரஸ்யமான வாசிப்பாகவே அமைந்தது, சற்றே துள்ளும் நடையில் அடுத்த அடுத்த விஷயங்களுக்கு தாவித்தாவி செல்லும் பாங்கு, " அந்நியன் மற்றும் "பிளேக் " நாவல் ஆசிரியரை மிகவும் கவர்ந்ததாக சொல்கிறார் - அதன் பாதிப்பு நாயகன் பாத்திர படைப்பிலும் தாவித்தாவி செல்லும் நடையை அமைக்க ஏதுவாக உள்ள ஒரு வித "சுருங்கச் சொல்லி விலகும்" தொனியும் அடிப்படையாக அமைந்திருக்கிறது, சில இடங்களில் "லாசரா " அவர்களை நினைவூட்டும் தொனி, நகரத்தை வளர்ச்சியை ரசிக்கத் துவங்கி இருக்கும் மனிதன் நிறைய கேள்விகளுக்கு அளிக்கும் பதில் "......." , இந்த "......."  நாவலில் அநேக இடங்களில் வருகிறது. ஒரு வகையில் நாவலின் பாவம் /தொனி  மௌனமே, புதிய அணையின் மீது நின்று நாயகன் தனது கிராமத்தை நோக்குகையில் அவன் காண்பது தான் என்ன ? 

Tuesday, July 06, 2021

மர்ம காரியம் - போகன் சங்கர்

 

    குறுங்கதைகளின் கோலாட்டம் 



Monday, June 21, 2021

பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

கானுயிர், தொல் சின்னங்கள், நிலக்காட்சி, வழிப்பாட்டுத் தலங்கள்,  வரலாற்று தகவல் கள், ஊர் பெயர்கள், குடும்ப பெயர்கள் என ஒட்டுமொத்த அடையாளங்களையும் தெரிந்துக் கொள்ள, நிறைவான வாசிப்பு 

Saturday, June 19, 2021

கூந்தப்பனை- சு வேணுகோபால்

 

2001 ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு, நான்கு சிறுகதைகளையும் இணைத்து என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன், "கண்ணிகள்" சிறுகதை நான்கு கதைகளுக்கான பொதுவான பின்புலத்தை குறிக்க - "வேதாளம் ஒளிந்திருக்கும்" கதை ஆண்-பெண் டவுன்-கிராமம் இடையேயான இடைவெளி மற்றும் அலைச்சல் குறித்த வாசல்கள் திறக்க, அந்த சிறிய டவுனில் புதிய பொருட்களுக்கும் பொருள்வயின் பிரிவும் ஏற்படுத்தும் பொருந்தாத விளைவுகள் குறித்த "அபாயச் சங்காக" மூன்றாவது கதை, அனைத்தையும் உள்வாங்கி நகரமயமாக்கம் தன்னகத்தே கொண்டுள்ள மலட்டுத்தனத்தை எதிர்கொள்ளக் கூடிய தரிசனத்தை அளிக்கும் தொகுப்பின் சிறந்தக் கதையான கூந்தப்பனை.


ஆண் பெண் உறவுகள் குறித்த நிகழ்வுகளே மூன்றில் நான்கு கதைகளுக்கான அடிப்படையாக அமைந்துள்ளன, கதையின் முடிச்சுகள் வலுவானதாக இருந்தும் அவற்றை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் பாலுணர்வு சார்ந்த அவதானிப்புகளாக மட்டும் காணாது "என்றுமுள்ள ஒன்றின் புதிய அர்த்தமாகக் கருதி, புதிதாக வந்தடைந்துள்ள காலத்தை அந்த அடிப்படை உணர்வுகளின் திரிபுகள்  கொண்டு விளக்குவதையே உட்பிரதியாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. 


உடலுழைப்பை பெரிதாக கோராத புதிய பயிர்களின் வருகையால் உருமாறிக் கொண்டே இருக்கும் கிராமம் , புதிய பொருட்களின் வருகையால் உருமாறும் சிறிய டவுண்கள், மேலும் பணம் மேலும் ஆசை என்ற சின்னஞ்சிறு வருகைகள் ஏற்படுத்தும் விவசாயம் Vs பட்டப்படிப்பு என்னும் இருமை நகரமயமாக்கலுக்கு தீனி போட்டபடி இருக்கும் காலகட்டத்தை படம் பிடித்துக்காட்டும் கதைகள் இவை.


தனிமையின் சிக்கலை ஊதிப் பெரிதாக்கி விடை தெரியாது மௌனத்தில் ஆழ முயலும் நவீன நகர போக்கின் எதிரில் மைசூர்பாக் கேட்டு அழும் சிறுவனின் முதுகில் பதிந்த அன்னையின் விரல்கள் காலம் நமக்கு அளித்துள்ள மூதுரை. சிறிய பயணமோ சரியான சொல்லோ கடந்து செல்லுதலோ ,  எப்போதும் நம்மை மீட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்திலும் ஒன்றையே காண அனைத்து ஜீவன்களும் ஒன்றின் இன்னொன்று என உணர்கையில் தனிமையும் குற்றஉணர்வும் என்ன செய்து விட முடியும்.

Tuesday, June 15, 2021

வேள்வித்தீ - எம்.வி வெங்கட்ராம்


வேள்வித்தீ எதன் சாட்சியாக இருக்கிறது ? ஸ்தூலமில்லாத விழுமியங்கள் சாட்சியாகவா? அவ்விழுமியங்களை கட்டிக் காக்க போராடும் மனிதர்களின் அகத்தின் நிழலாகவா? இந்த வேள்வித்தீயின் நாக்குகள் எதை நோக்கி நீண்டு செல்கின்றன ? வழி தவறுபவனை சுட்டுரைக்கவோ ? இடித்துக் கூறி வழி நடத்தவோ ? எல்லைகளை வெல்ல முடியாதவனின் கடைசி புகலிடமோ இந்த வேள்வித்தீ ?


குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் நமக்கும் பணத்துக்கும் ஒரு மானசீக விளையாட்டு துவங்குகிறது, கவனித்து பார்க்கையில் பிகு செய்து அலட்சியம் செய்கையில் முன்னின்று வந்து ஒரு நியாயமான விளையாட்டாக தொடரும் , இதன் நடுவே தேவைக்காக பணம் பணத்துக்கான தேவை என்கிற தான்தோன்றி விளையாட்டும் நம்மை முடிந்தவரை ஆட வைக்கும், இவ்வாட்டத்தின் விதிமுறைகள் படி நாவல் நாயகன் கண்ணன் கடமை, நேர்மை, விசுவாசம், மானம், உழைப்பு முதலிய   விழுமியங்களுடன் தனது விளையாட்டை விளையாடுகிறான், நம் அனைவரையும் போலவே முழு தொழிலாளியாகவும் முடியாது முழு முதலாளியாகவும் முடியாத திரிசங்கு தளத்தில் தனது ஆட்டத்தை நடத்துகிறான் கண்ணன். 


இந்த ஆட்டத்தின் விதியை மாற்ற விழுமியங்களை உரசிப் பார்க்க காலம் என்னும் எதிராளி காய் நகர்த்துகிறான், கண்ணனின் பதில் ஆட்டங்கள்  விதிகளுக்கு உட்பட்டு தானா ? சங்கமிக்கும் கடலில் கலக்கையில் சாக்கடையும் நன்னீரும் ஒன்று போல் தோன்றினாலும் அவை ஒன்றாகுமா? கண்ணனின் குரலில் ஒன்று முடிந்து இன்னொன்று துவங்குகிறதே என்று கேவுகையில் வாசகன் தனக்கான விடையை அறியலாம். வேறொரு தளத்தில் கண்ணன் அடைந்த்திருக்கும் திரிசங்கு நிலையே விழுமியங்கள் குறித்த நமது பார்வையை விஸ்தரிக்க வல்லது. முதலாளி தொழிலாளி இடையே நடக்கும் பேரத்தின் நடுப்புள்ளியைப் போல் தனி ஒருவன் கைக்கொள்ள விழுமிய வேள்வித்தீ சங்கல்பங்களில்  ஏதெனும் உண்டோ ?


சிறிய வழு அல்லது சந்தர்ப்ப சறுக்கல் என்ற உத்தியை தவிர்த்ததன் மூலமும் மேலதிகமாக நம் விழுமியங்களை சோதிக்க இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விசை குறித்த அவதானிப்பாகவே இந்த தேர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது


இவை தவிர நெசவாளர் குடும்பங்களின் பொருளாதார சூழல், குடும்ப வழக்கங்கள் குறித்தும் , 1970 களின் அரசியல் கட்சிகள் குறித்த நுண்பகடிகளும் , நடுத்தர குடும்ப  நிகழ்வுகளின் மென் தருணங்கள் என விரிகிறது நாவல். 


புறமும் அகமும் சரிந்துக் கொண்டே முழுகிக்கொண்டே சென்றாலும் எங்கிருந்தோ முளைக்கும் சமாதானமும் வைராக்கியமும்,  மனிதனால் தாங்க முடியாத ஒன்று என்கிற விஷயம் இல்லவே இல்லை, விதியின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக தன்னையே அளிக்கும் மனிதனை தீண்டிப் பார்க்கும் வேள்வித்தீ.

Sunday, June 13, 2021

கங்காபுரம் - அ வெண்ணிலா

ராஜேந்திர சோழனின் அகமும் புறமும் பற்றி காலப்பயணமாகவும் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றி முரசாகவும்  அமைந்து வந்திருக்கும் நூல் கங்காபுரம்


பொன்னியின் செல்வனும் உடையாரும் வாசித்திராத எனக்கு நிறைவான வாசிப்பாகவே அமைந்தது கங்காபுரம், மதுராந்தகன் என்று அழைக்கப்படும் ராஜேந்திரன் தனது தந்தை ராஜராஜனின் போர் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக இருந்தவன், அவனது காலகட்டத்தின் சோழ சாம்ராஜயத்தின் வெற்றிகள், போர் முறைகள், ஆட்சி நிர்வாக அணுகுமுறைகள், கோவில் நிர்வாக அணுகுமுறை, ராஜேந்திரனின் தனிப்பட்ட மனநிலை , அவன் ஆளுமை குறித்த குறிப்புகள் என விரிகிறது கங்காபுரம். 


ராஜராஜன் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்த புகழ்களின் வெற்றிகளின் உச்சம் , வீழ்ச்சி குறித்த தவிர்க்க இயலாத அச்ச உணர்வை நிழலாக பிடித்து வாசகன் நாவலை வாசிக்க துவங்குகிறான். இந்த நிழலிலேயே  துர்சமிக்ஞைகள் தொடர சோழ சாம்ராஜயத்தின் வெற்றி முரசு தொடர்ந்தபடி இருக்கிறது, நாவலின் இறுதியை அடைகையில் அரசன்-இறைவன்  என்கிற இருமை அழியும் தருணமதில் , ராஜேந்திரன் - சோழப்பேரரசன் என்கிற வேற்றுமையை உணர்ந்த ராஜேந்திரன் என்கிற ஆளுமையை நாம் அறிகிறோம், 


ஒரு மார்க்க்சிய முற்போக்கு பிடிப்புகுரிய விவரிப்புகள் , வரலாற்று ஆசிரியரின் கவனம் பெற்ற உப வராலற்று நிகழ்வு தொகுப்புகள் என புனைவு தாண்டிய எல்லைகளை தொட்டாலும் அதையும் தாண்டி நாவலை அர்த்தமுள்ள வாசிப்பாக்குவது ராஜேந்திரனின் ஆளுமை குறித்த ஆசிரியரின் பார்வையே, மத்தவிலாசம் ஹாஸ்ய இணைப்பு அபாரம் ,ஆதித்தியன் தில்லையழகி கதை மனதை தொடுவதாக அமைந்தது. ஒரு கலைஞனின் பார்வையில் சோழ சாம்ராஜ்யத்தின் இரு மாபெரும் அரசர்கள் அவர்களின் தனிப்பட்ட நெறி காரணமாக  விளக்காகவும் அகலாகவும் அமைந்து நூற்றாண்டுகள் தாண்டியும் மனதில் நீங்காத ஒளியை ஏற்படுத்துகின்றனர்.

Saturday, May 15, 2021

Nomadland

 





Nomadland


With Handful of Memories Dear

I can get past this day

Move past Seasons

To cherish a Lifetime

Grieve an inevitable Separation

To Meet you again down the road

To Unite back as One


To Drink the nectar of Solitude

Sit around the Fire and Talk about you

We get past Today Seasons and Life

Continuing Our Journey to Eternity 


We Grovelled the Earth Dear 

Looking down to build all we want 

A Roof Above, Walls to Hide and Seek A Carton Box which is yet to arrive

Only to miss The Show

Going on above Since.

Sunday, April 25, 2021

ராஜவனம் - ராம் தங்கம்

 முதல் பகுதியின் அட்டகாசமான வரிக்கு வரியான சுவாரஸ்யம் எப்படி நாவல் நெடுக நீளும் என்று எண்ண வைத்த எழுத்து, அவ்வாறு நீளவில்லை எனினும் விரைவில் வரும் படைப்புகளில்  இவை மிளிரும் என்ற நம்பிக்கை விதைத்து அத்தனை அழகுடன் துளிர்த்திருக்கிறது ராஜவனம் 


அழகியல் சார்ந்து நாவலின் தொனியில் உள்ள மூன்று வெவ்வேறு கூறுகள் குறித்து; நாவலில் வரும் கானுயிர் வரிசை கண்டு பூரித்து வரும் சூழலியல் ஆர்வலர்கள் காட்டும் வழி, வனம் சூப்பர் மார்க்கெட்டில் கிடைப்பதை மூர்க்கத்துடன் அள்ளிப் போடும் தினசரி நிகழ்வாக சூறையாடலை

பதியும் நாளிதழ் வழி, தினசரி கொடுக்கல் வாங்கல் வழிமுறைகளையும் உபயோக பொருட்களின் வரிசைகளையும் சிரமேற்கொண்டு பதியும் புறமார்க்சியம் காட்டும் வழி, இவ்வழிகள் அறிந்தே அதனை தவிர்த்து ஒரு இலக்கிய ஆசிரியன் தனது ராஜபாட்டையில் நடக்கத் துவங்குகிறான், அந்த வழியில் மேற்சொன்ன மூன்று வழிகள் குறித்த அக்கறை இருந்தாலும் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமகால உண்மை குறித்த தரிசனத்தையோ தனிப்பட்ட அனுபவத்தின் குரலையோ சாகசத்தையோ முன் வைப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருப்பான். கோபால் ஆன்றோ ராஜேஷ் மேற்கொண்ட சாகசம் ஒரு முடிவில்லாத பயணமாக நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு இலக்கிய வாசகனாக எனது விருப்பம்.

மேலதிகமாக இயற்கை வழிபாட்டு முறையை முற்றிலும் கைவிட்ட சமூகங்களின் மதிப்பீடுகளுக்கும் இன்றைய தனி மனிதனின் ஸ்தூலமில்லாத வெற்றி களிப்பிற்கும் தோல்வியின் தனிமைக்கும் சிறிதளவு சம்பந்தம் இருக்கக் கூடும்.